மடை திறந்து… (14)

என்னப்பா, எல்லாரும் எல்லாமும் நலம்தானே?

போன வாரம் செயின்ட் லூசியாவுக்கு விடுமுறைல போயிருந்தேன்… மலைகளும் கடலும் சந்திக்கற ரொம்ப அழகான ஊர்… ரொம்பத் தேவையான ஓய்வு. ஆனா அதுக்கு மேல என்னை ரொம்பக் கவர்ந்தது அந்த ஊர் மக்கள். சொல்லி வச்சது போல அத்தனை பேரும் அன்பா இருக்காங்க. இனிமையா பேசறாங்க. உலகத்து மக்களெல்லாம் இவங்களைப் போல இருந்துட்டா உலகம் அமைதிப் பூங்காவா இருக்கும்னு தோணுச்சு.

ஒரு டாக்ஸி டிரைவர்கிட்டே கரும்பு ஜூஸ் எங்கே கிடைக்கும்னு கேட்டேன். ‘ஜுஸ் கிடைக்காது. நான் வேணா உங்களுக்குக் கரும்பு கொண்டு வர்றேன்’னார். நான் கூட சும்மா ஒரு பேச்சுக்கு சொல்றார்னு நினைச்சேன். மறுநாள் சொன்ன மாதிரியே ரெண்டு பெரிய கரும்புத் துண்டு கொண்டு வந்து கொடுத்துட்டு நன்றி கூட எதிர்பார்க்காம போயிட்டே இருந்தார்.

இன்னொரு சம்பவம்… ரிஸாட்ல முதல் நாள் சாப்பிட்ட ஒரு இனிப்பு ரொம்பப் பிடிச்சுப் போயி கடைகடையா தேடினேன். கிடைக்கலை. கிளம்பறதுக்கு முந்தின நாள் அதைப் பற்றி ரிஸாட் வெயிட்டர்கிட்டே விசாரிச்சேன். கொஞ்ச நேரத்தில அந்த இனிப்பு ஒரு பெரிய பார்சல்ல வந்து சேர்ந்தது. எனக்கு கண்ணுல தண்ணி வராத குறைதான். ரெண்டுமே சின்ன எடுத்துக்காட்டுகள்தாம். வாழ்க லூசியன்ஸ்!

அங்கேயும் போயி புடவை கட்டிட்டோமில்ல! டின்னர் போகும்போது கட்டினேன். மினிக்குக் கண்டிப்பா இந்தப் புடவை பிடிக்கும். சரிதானே, மினி? இதை நான் நாயுடு ஹால்ல வாங்கினேன்னு நினைக்கறேன். 1500 ரூபாய். அப்பாவோட பணம். என்னோட செலக்ஷன்.

St Liciaவோட மோட்டோ எனக்கு ரொம்ப பிடிச்சது… Live Slow. நல்லா இருக்கில்ல? அந்த ஊர்ல ‘போதுமென்ற மனம்’ இருக்குன்னு நினைக்கிறேன். பெரிசா எந்த வித எதிர்பார்ப்பும் இல்லை. வெளில போய் பணம் பார்க்கணும்கற ஆசை இல்லை. இருக்கற இடம் சொர்க்கம்னு புரிஞ்ச்சுக்கிட்டு சந்தோஷமா இருக்காங்க. பீச்ல இளநீர் வித்த தாத்தாவுக்கு 70 வயசுக்கு மேல இருக்கும். எனக்கு அவரைப் பார்த்தப்பல்லாம் ரொம்பப் பாவமா இருந்துச்சு. ஆனா அவர் ரொம்ப ஜாலியா இருப்பார். சுயபச்சாதாபம் துளியும் கிடையாது. ஒரு நாள் "எத்தனை இளநீர் வித்தீங்க"ன்னு கேட்டேன். அஞ்சு வித்ததா சொன்ன அவர், "இப்போ நான் வீட்ல போய் குடிச்சிட்டு ரிலாக்ஸ் பண்ணப் போறேன்"னு ஜாலியா ஒரு ஆட்டம் போட்டார். நான் ஊருக்குத் திரும்பறேன்னு சொன்னதும் இந்தத் தேங்காய்க்காரனை ஒரு ஃபோட்டோ எடுன்னு கேட்டார். அவரோட நின்னு நானும் எடுத்துக்கிட்டேன். இவர்கிட்டேருந்து நான் கத்துக்க வேண்டியது எவ்வளவோ இருக்கு!

நகர வாழ்க்கை நரக வாழ்க்கைன்னு சொல்ற அளவுக்கு ஓவரா பரபரப்பா ஆயிடுச்சி. இப்படி ஓடி ஓடி நிறைய சம்பாதிக்கறோம்னே வச்சுக்குவமே… அதையாவது அனுபவிக்கறோமா? பிள்ளைகளுக்குன்னு சேர்த்து வைக்கிறோம். அவங்க அதை அனுபவிக்கறாங்களா? அவங்க அவங்க பிள்ளைகளுக்குன்னு சேர்த்து வைப்பாங்க. இது சங்கிலித் தொடரா இப்படியே போகுது அர்த்தமில்லாம… மேலை நாடுகள்ல சேர்த்து வைக்கறது பற்றி அதிகம் கவலைப்பட மாட்டேங்கறாங்க. கண்டிப்பா வருடம் ஒரு முறையாவது ஒரு நீண்ட விடுமுறை எடுத்து நல்ல இடமா போய் ஓய்வெடுத்துட்டு வர்றாங்க. நம்மள்ல எத்தனை பேர் இப்படிச் செய்யறோம்? அப்படியே விடுமுறை எடுத்தாலும் அங்கேயும் போய் ‘அதைப் பார்க்கணும்; இதைப் பார்க்கணும்னு’ ஓடறோம். இடங்களைப் பார்க்க விருப்பப்படறதில தப்பே இல்லை. ஆனா அந்த விருப்பம் இதயத்திலருந்து வருதா அல்லது அடுத்தவங்க கிட்டே அதைச் சொல்லி பெருமைப்பட்டுக்கறதுக்காக ஈகோலருந்து வருதான்னு நம்மளக் கேட்டுப்பார்த்துக்கறது நல்லது.

கேட்விக் ஏர்போர்ட்ல செக் இன் டெஸ்க்ல இருந்த இளைஞர் என்னைப் பார்த்து ‘நீங்க தமிழா?’ன்னு கேட்டார். நான் கூட அவர் இங்கேயே பிறந்து வளர்ந்த தமிழரா இருப்பார்னு நினைச்சு, "நீங்க தமிழ் பேசுவீங்களா?"ன்னு கேட்டேன். "அதுக்குத்தானே இவ்வளவு கஷ்டப்பட்டோம்"னு அழகா தமிழ்ல பேசினார். அவர் முதுகலை வேதிப் பொறியியல் படிச்சும் சரியான வேலை கிடைக்கலைன்னு வருத்தப்பட்டார். எனக்கு மனசு கஷ்டமாயிடுச்சு. எப்படியாவது உதவி செய்யணும்னு உத்வேகம் வந்தது. ஆனா நான் என்ன பில் கேட்ஸா? அதனால மனசில பிரபஞ்சத்துக்கு கோரிக்கை வச்சிட்டு வாழ்த்து சொல்லிட்டு வந்தேன்.

பின்லேடன் மரணத்தைப் பற்றி நான் தெரிஞ்சுக்கிட்டது ஃபேஸ்புக் மூலமாதான். Social networking வாழ்க்கையோட பின்னிப் பிணைஞ்சு போயிட்டதைத்தான் இது காட்டுது. என்னோட ஆன்மிக வளர்ச்சிக்கு ஃபேஸ்புக்கும் யூட்யூபும் ரொம்ப உதவி செஞ்சிருக்கு. வஞ்சி கேட்டுக்கிடபடி, யூட்யூப்லருந்து என்னை பாதிச்ச இன்னொரு சொற்பொழிவு இங்கே:

http://www.youtube.com/watch?v=AugWiDv17Yg

இந்த சொற்பொழிவில டோலே சொல்றமாதிரி நாம விசேஷமானவங்களா இருக்கணும்ங்கற நம்ம ஈகோவோட தேவைதான் நம்மை ஓட ஓட விரட்டுதுன்னு எனக்கு அடிக்கடி தோணும். நான் என்ன செஞ்சாலும் என்னோட ஈகோவோட வெளிப்பாடோ இதுன்னு ஒரு உறுத்தல் எனக்கு இன்னும் இருக்கு. அது ஓரளவு உண்மைன்னு ஒரு நிச்சயத்தன்மை கூட இருக்கு. சுத்தமா ஈகோ இல்லாம இருக்கணும்னு ரொம்ப முயற்சி செய்யறேன். ஆனா அது கஷ்டமாத்தானிருக்கு. நான் வந்த தூரம் மிக அதிகம்ங்கறது உண்மை. ஆனா போகவேண்டிய தொலைவும் அதிகம். ஈகோவோட சண்டை போட்டு வெல்லவே முடியாதுன்னு டோலே சொல்றார். அதை அப்படியே ஏத்துக்கும்போது அது கரைஞ்சு போகும்னு சொல்றார். அதையும் சில சமயம் முயற்சி செய்யறேன்

சில வருடங்களுக்கு முன்னால நான் எழுதின பதிவு ஒண்ணை இங்கே பகிர்ந்துக்கலாம்னு நினைக்கறேன்:

ஓஷோ பற்றி எனக்கு அதிகம் தெரியாது. ஆனால் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவல் உண்டு. அவரை செக்ஸ் சாமியார் என்று நம் ஊடகங்கள் தரம் தாழ்த்தியதில் அவரின் அரிய கருத்துக்களைக் கேட்க முடியாமல் போய்விட்டதோ என்ற ஐயம் எனக்குண்டு. அதற்குக் காரணம் அவ்வப்போது துளித்துளியாய் நான் படிக்க நேரிடும் அவருடைய படைப்புக்கள்.

எப்போதாவது வாழ்க்கையில் விரக்தி ஏற்பட்டால் ஓஷோவின் இந்தக் கவிதையைப் படியுங்கள்; மனதை தென்றல் தடவிக் கொடுத்தது போன்ற இதம் கிடைக்கும்: (நல்ல கவிஞர்கள் யாரேனும் இதனைத் தமிழ்ப்படுத்தினால் நலமாயிருக்கும்)

You are not accidental.
Existence needs you.
Without you something
will be missing in existence
and nobody can replace it.

That’s what gives you dignity,
that the whole existence will miss you.
The stars and sun and moon, the trees
and birds and earth – everything in the universe
will feel a small place is vacant
which cannot be filled by anybody except you.

This gives you a tremendous joy,
a fulfillment that you are related to existence,
and existence cares for you.
Once you are clean and clear,
you can see tremendous love
falling on you from all dimensions.
– Osho

//
"Without you something
will be missing in existence
and nobody can replace it."
//

இந்த வரிகள் எனக்கு ரொம்பப் பிடிச்சது. இந்தப் பிரபஞ்சத்தில ஒவ்வொருத்தருக்கும் ஒரு தனி இடம் இருக்குன்னா ஒவ்வொருத்தரும் பிரபஞ்சத்தைப் பூர்த்தி செய்ய பங்களிக்கறோம்னா எல்லாருமே விசேஷமானவங்கதானே? இதில நான் ஏதோ ஒருவிதத்தில உசத்தின்னு காட்டிக்க முயற்சி செய்யறது சின்னப்புள்ளைத்தனமில்லையா? தெரியுதுதான்; புரியுதுதான்… ஆனா நடைமுறைப்படுத்தறதுலதான் பிரச்சினை, சரிதானே? இருந்தாலும் எல்லாமும் நலமே!

ஒரு வார விடுமுறைல ரெண்டு கிலோ எடை கூடிருச்சி. உடற்பயிற்சி செஞ்சு திரும்ப குறைக்கணும். சில வருடங்களா முயற்சி செஞ்சு மொத்தமா 13 கிலோ எடை குறைச்சேன். என்னோட உயரத்துக்குத் தகுந்த எடை வந்ததும் இனி அப்படியே மெயின்டெய்ன் பண்ணினா போதும்னு நினைச்சு யோகா மட்டும் செஞ்சிட்டிருந்தேன். இப்போ இந்த ரெண்டு கிலோவைக் குறைக்க உடற்பயிற்சி ஆரம்பிக்கணும். எனக்குப் பிடிச்ச ஒரு பயிற்சி Zumba. இதைப் பயிற்சின்னே சொல்ல முடியாது. ஜாலியான நடனம். நீங்களும் முயற்சி செஞ்சு பாருங்களேன்:

http://video.google.co.uk/videoplay?docid=6246451776299720022&ei=g22DS__hDc-O-AaGzbWrAQ&q=zumba&hl=en&view=3&dur=3#

வயசெல்லாம் ஒரு பொருட்டே இல்லை. அதனால அதெல்லாம் சாக்கு சொல்லாதீங்க.

முன்னெல்லாம் விளம்பரங்களுக்கு சின்ன வயசு ஸ்லிம் பெண்கள்தானே வருவாங்க? போத்தீஸ் அதை உடைச்சு சுதா ரகுநாதன், ஹேமமாலின்னு கம்பீரமான பெண்களைக் கொண்டு வந்த டரெண்டைப் பாராட்டணும். (அந்த மூளை யாரோடதுப்பா?) அதனால இந்த பயிற்சியெல்லாம் செஞ்சு நாமளும் தயாராவோம்… யார் கண்டா நம்மையும் மாடல் செய்ய கூப்பிடுவாங்களா இருக்கும்

ஹேமமாலினி போலவே ஷர்மிலா டாகூர், ஹெலன் மிரென் இவங்களை எல்லாம் பார்க்கும்போது இவங்களுடைய அழகுக்கு வயசு ஒரு பொருட்டே இல்லைன்னு தோணும். இது அவங்களோட தன்னம்பிக்கை தர்ற அழகு.

சாய்பாபா உடல் நலம் சரியில்லாம இருக்கும்போது டாக்டர் ருத்ரன் ரொம்ப காட்டமா ஒரு பதிவு போட்டிருந்தார். பெரும்பாலான ஆன்மீக குருக்கள் சாமானிய மனிதர்கள் போலவே உடம்பு சரியில்லாமதான் இறந்து போறாங்கன்னாலும் மக்கள் அவங்களை ஏன் நம்பறாங்கன்னு கேள்வி கேட்டிருந்தார். நமக்கு சில விஷயங்கள் புரியலைங்கறதால மற்றவங்களோட நம்பிக்கையைக் குறை பேசறது சரியா?

எனக்கு சாய்பாபா மேல பக்தி இல்லை. ஆனா மரியாதை உண்டு. ரெண்டு வருஷம் முன்னால இந்தியா போகும்போது ஒரு விதமான மனக்குறையோட போனேன். விமானத்தில இருக்கும்போது பிரபஞ்சத்துகிட்டே, "எப்போவும் எனக்குத் துணை நிக்கறதா சொல்றீங்க. ஆனா பாருங்க, எப்போப் பார்த்தாலும் எனக்கு ஏதாவது பிரச்சினை. நீங்க உண்மையாவே என்கூட இருக்கீங்கன்னா என் கையில எனக்கு நீங்க தந்ததா யாராவது எதையாவது தரணும்"னு கேட்டுக்கிட்டேன்.

சென்னையில விசாலம் அம்மா வீட்டுக்குப் போயிருந்தப்போ அவங்க ஒரு சாய் பக்தை வீட்டுக்குக் கூட்டிட்டுப் போனாங்க. அவங்க, "உங்களுக்காகவே வந்தது போல இந்த ஜாங்கிரியை இப்பதான் ஒருத்தர் கொடுத்துட்டுப் போனார். எனக்கு இந்த ஸ்வீட் பிடிக்கவே பிடிக்காது. ஆனா இதை பாபா உங்களுக்குக் கொடுக்கச் சொல்றார். எடுத்துக்கங்க"ன்னு நீட்டினாங்க. ஆனா எனக்கு ரொம்பப் பிடிச்ச ஸ்வீட் அது. உண்மையாவே அன்னைக்குக் காலைல பலகாரம் வாங்கப் போனப்போ அதை வாங்கலாம்னு எடுத்துட்டு அப்புறம் இனிப்பைக் குறைக்கணும்னு வச்சுட்டு வந்தேன். என்னை நெகிழ வச்ச சம்பவங்கள்ல இதுவும் ஒண்ணு.

சிறுத்தை படம் பார்த்து நொந்து நூலாப் போயிட்டேங்க. எப்போதான் தமிழ் சினிமா வளரப்போகுதோ… கார்த்திக்கு உருப்படியான படமா பார்த்துக் கொடுக்கக் கூடாதா அவங்கப்பாவும் அண்ணனும்?

நிலாச்சாரல் பிரசுரிக்கற நேரம் வந்தாச்சு. அடுத்த வாரம் அதிகம் எழுதறேன். அதுவரை, இந்த செல்லக் குட்டி போல ஸ்மைலிகிட்டே இருங்க:

http://www.youtube.com/watch?v=fs4cDLfgL4A

அபரிமிதமான அன்புடன்,
நிலா

About The Author

10 Comments

  1. mini

    Hello Nila, eppadi irukinga? neenga sonna mathiri unga pink saree enaku romba pidichu iruku. It is pretty.

    Vacation pathi neenga sonnathu romba correct Nila. Vacation plan panitu morningla irunthu evening varikum orai tight schedula vachu kittu veetuku vanthu serum pothu oru 10day thunalam pola irukum. nanga ippa appadilam panrathila. mudintha idangala parpom. niraya rest. nalla sapadu. niraya pechu, ippadi than ippalam vacation porom. ella idathaiyum cover panna mudiyalatiyum kavala padrathila. relax panna than poromnratha unranthu enjoy panrom. kandipa oru two days agavathu ellraum regular activitiesla irunthu vilagi irupathu avolo mansuku puthunrachiya irukum we all have to do.

    Ego pathi neenga solra mathiri enaku kudu antha uruthal appa appa vanthukitte iruku.

    OSHO voda kavithai romba nalla iruku. oru big glass of BOOST/COMPLAN kudicha mathiri iruku.

  2. கீதா

    நிலா,

    லுசியானா மக்கள் வியப்பூட்டும் வகையில் அன்பைப் பொழிபவர்களா இருக்காங்களே… அவங்களுக்கு என் அன்பான பாராட்டுகள்.

    ஈகோ பற்றிய உங்கள் கருத்துகள் ரொம்ப நல்லா இருக்கு. ஓஷோவின் கவிதையை முடிந்தவரை தமிழ்ப்படுத்தியிருக்கேன். (மொழிபெயர்ப்புன்னு சொல்லமுடியாது, என்னுடைய வரிகளில் கருத்துகளைக் கொண்டுவந்திருக்கேன். ஏதேனும் கருத்துத் தவறு இருந்தால் சுட்டிக்காட்டுங்க. வேறு யாரேனும் நல்ல முறையில் மொழிபெயர்த்தால் நான் மகிழ்வேன்.)

    விபத்தோ… விபரீதமோ…
    விரும்பத்தகா நிகழ்வோ அல்ல,
    உன் பிறப்பும், இருப்பும்!
    இயலுலகின் தேவை அது!

    உனையன்றி வேறெவராலும்
    இட்டு நிரப்பவியலா இயல்வாழ்க்கையது!

    உன்னிருப்பின்றி பூர்ணத்துவம் அடையா
    இயலுலகின் நிலையை எண்ணிப்பார்,
    உணர்வாய் உன்னிருப்பின் உன்னதம்!

    விண்மீன்கள், சூரியன், சந்திரன்,
    மரங்கள், பறவைகள், இந்தப்பூமி…
    இப்படி பிரபஞ்சத்தின் ஒவ்வொரு அங்கமும்
    உனையன்றி வேறெவராலும் நிரப்பவியலா
    சிறு வெற்றிடத்தைத்
    தன்னகத்தே தக்கவைத்துள்ளது.

    பேரண்டத்தின் முழுமைக்கு
    பெருமைமிகு உன்னிருப்பின்
    தேவையுணர்ந்து நிறைவாய்
    அடைவாய் அளவிலா பேரானந்தம்!
    அண்டம் உன்னைக் காக்கும்!

    உள்ளக்குறைகள் நீங்கி…
    தெள்ளத்தெளிவாய் உன்னை நீ
    உணரும்வேளையில்
    நிச்சயம் நீ காண்பாய்
    எல்லாப் பரிமாணங்களிலிருந்தும்
    உன்மேல் பொழியும்
    அளவிலா அன்புமழையை!

  3. மதி நிறை செல்வன்

    கட்டுரையோ மனதின் ஒளிமறைவில்லா வெளிப்பாடு. அதைவிட தமிழ் மொழி பெயர்ப்பு மிக அருமை. எப்படி புகழ்வது என்று தெரியவில்லை! தங்கள் தொண்டு தொடரட்டும்.

  4. sarala

    உன் பிறப்பு விபத்து அல்ல – அது
    உலகத்துகான தேவை
    நீ இல்லாது பொனால்
    உலகம் எதையோ இழக்கிறது
    அந்த இழப்பை வேறு எவராலும்
    ஈடு செய்ய முடியாது

    உயிர்ப்புள்ள உலகம் உன்னை
    இழந்து நிற்கிரது
    அதுவே உனக்கான பெருமை
    இந்த நட்சத்திரங்கள், சூரியன், சந்திரன், மரங்கள்
    பறவைகள் மற்றும் இந்தப் பூமியும் அண்டமும்
    எவராலும் நிரப்ப முடியாத
    ஒரு சிறு வெற்றிடத்தை உணர்கிறது
    அதை நிரப்ப முடிவது உன்னால் மட்டுமே

    அளவற்ற மகிழ்ச்சியை உன்னில் உண்டாக்கும்-இவ்வுணர்வு
    அண்டத்துடன் உண்டான உன் உறவு-அது நிறைவு
    அகிலம் உன்னைக் காக்கும்
    அப்பழுக்கில்லாத தெளிந்த மனதுடன் நீ இருப்பின்
    அளவில்லாத அன்பை
    அணுவெல்லாம் உணர்வாய்

    இது ஓரளவு பரவா இல்லையா?

  5. mini

    very sweet and beautiful baby leo. what a lively smile thanks nila i missed to mention in my comment

  6. கலையரசி

    அன்பு நிலா,
    போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து என்ற பொன்மொழியைத் தம் வாழ்வில் கடைபிடிக்கும் லுசியானா மக்கள் போற்றுதலுக்குரியவர்கள்.
    சுற்றுலா சென்று மனதுக்கும் கண்களுக்கும் விருந்தளிப்பது மட்டும் தான் கடைசியில் நம் கூட வரும் என்று நான் நம்புகின்ற காரணத்தால் எப்போதெல்லாம் முடியுமோ அப்போதெல்லாம் எங்காவது சுற்றுலா செல்வது என்று முடிவெடுத்து ஓரளவு சுற்றியும் விட்டேன். நீங்கள் சொல்வது போல் கொஞ்சம் கூட வாழ்க்கையை அனுபவிக்காமல் ஓடி ஓடி சம்பாதித்துச் சொத்து சேர்த்து பிள்ளைகளுக்குக் கொடுத்து விட்டு, முதுமையில் பிள்ளைகளால் சரியாகப் பராமரிக்கப்படாமல் நொந்து நூலானவர்கள் தாம் இங்கே அதிகம்.

    ’நான் இல்லையென்றால்
    இந்தப் பிரபஞ்சத்தில் ஏதோ குறைகிறது.
    நான் இல்லாத குறையை, என் இழப்பை
    நான் இல்லாது போனால் ஏற்படும் வெற்றிடத்தை
    வேறு எவராலும்,
    ஈடு செய்ய முடியாது”
    என்ற ஓஷோவின் கருத்து மிக நன்று. இதைப் படிக்கும் ஒவ்வொருவருக்கும் இவ்வுலகில் தான் வாழ்ந்தே ஆக வேண்டும் என்ற பிடிப்பையும் நம்பிக்கையையும் ஏற்படுத்துவதாய் இந்தக் கருத்து அமைந்துள்ளது. தற்கொலை செய்ய முடிவெடுத்தவர் கூட, இதனைப் படிக்க நேர்ந்தால், அவ்வெண்ணத்தை உடனே கைவிட்டு விடும் அளவிற்கு, மனச்சோர்வை நீக்கி நம்பிக்கை ஏற்படுத்தும் வார்த்தைகள்.
    அதைத் தமிழ்ப்படுத்திய கீதம், சரளா இருவருக்கும் என் பாராட்டுக்கள்.
    தூக்கத்துடன் சண்டை போட்டு அவ்வப்போது மீண்டெழுந்து சாவி கொடுத்த பொம்மை போல் புன்னைகை செய்யும் அரும்பு மிக அருமை. இனிமையும் கூட.

  7. mano

    நம்பிக்கை என்பது வாழ்க்கையின் அடிப்படை அதனை படிக்கும் போது ஒரு தெம்பு ஏற்படுகிறது எவ்வளவு உண்மை. வாழ்க நீங்கள்

  8. கீதா

    //Geetha, Your translation is very nice.//

    நன்றி மினி. சரளாவின் மொழிபெயர்ப்பும் அழகாக உள்ளது.

  9. RAVI

    kavithaiyo , katturaiyo thamizhil adhanai padikkum podhu sollazhagu, karuthazhagu kooduvadhaga unarugiren . mozhi peyarppu miga arumai -ravi,Chennai-28

Comments are closed.