மடை திறந்து… (12)

என்னப்பா, எல்லாரும் எல்லாமும் நலம்தானே? நாங்களும் நலமே! பின்னே இருக்காதா, நாலு நாள் விடுமுறையாச்சே… ஹையா ஜாலி

பல நண்பர்கள்கிட்டே தொலைபேசினேன்… நம்ம கலைகிட்டே கூட பேசினேனே! கலை எதிர்பார்க்கவே இல்லை. எனக்கு உங்கள்ல பலபேர்கிட்டே பேசணும்னு ஆசைதான். நீங்க Google Chatல இருந்தீங்கன்னா வாய்ப்பு அதிகம். நேரமும் உத்வேகமும் அமையும்போது சட்டுன்னு பேசலாம். விரும்பம் இருந்ததுன்னா என்னோட முகவரியை (எல்எல்ஜே டாட் நிலா அட் ஜிமெயில் டாட் காம்) உங்க சாட்ல சேர்த்து வைங்க. என்றைக்காவது நாமும் பேசலாம். விரும்பினா தொலைபேசி எண்ணையும் அனுப்பி வைங்க. No Promises – ஆனா கண்டிப்பா முயற்சி செய்வேன். சரியா?

போன வாரம் வந்த பதில்களையும், கேள்விகளையும் பார்ப்போம்.

குமார், தன்னிலையறிதல்தான் ஞானத்தின் முதல்படி. உங்களோட உணர்வுகளை நல்லா உணர்ந்து வச்சிருக்கீங்க. நல்லது. அதே சமயம், உங்க உணர்வுகள் வெளிக்காரணிகளை அதிகம் சார்ந்திருக்கறது உங்களுக்கு சரியா படுதான்னும் யோசிங்க. உங்களுக்கு சரிதான்னு பட்டுச்சுன்னா சரிதான்.

மினி, நீங்க சொன்னது போலவே எனக்கும் சித்ராவோட இழப்பு ரொம்ப வருத்தத்தைத் தந்தது. 17 வருடம் கழித்துப் பிறந்த குழந்தையை இழந்த வேதனையை நினைச்சே பார்க்க முடியலை. அவங்களுக்கு நமது அன்பை எண்ணங்கள் மூலமா அனுப்பி வைப்போம்.

உங்களுக்கு ரொம்ப கருணையான மனசு, மினி. எப்போதாவது சுகவராகலாம்னு யோசிச்சிருக்கீங்களா? அதுக்குத் தேவையான தகுதிகள் உங்ககிட்ட இருக்குன்னு நினைக்கிறேன்.

அது சரி – மழை, காஃபி, பக்கோடா – செம காம்பினேஷன். எனக்கு?

நீங்க போட்ட ரெண்டாவது பின்னூட்டம் வரலை. தொழில்நுட்பக் காரணங்கள் இருக்கலாம். சாந்தியோட தளபதிகள் பிரச்சினையை ஆராய்ஞ்சுட்டு இருக்காங்க.

கீதா, கலை, உங்க ரெண்டு பேர்கிட்டேயும் பல ஒற்றுமைகள் பார்க்கறேன். வாழ்க்கையை இலகுவா எடுத்துக்கறது ஒரு பெரிய கொடை. மிக நன்று.

வஞ்சி, எதிர்கருத்துக்கள் இல்லாத கோட்பாடோ, குருமார்களோ எனக்குத் தெரிஞ்சு இல்லை. முன்னெல்லாம் நானும் எதிர்கருத்துக்களை சீரியஸா எடுத்துக்கிட்டுப் போட்டுக் குழம்பிக்கிட்டிருப்பேன். இப்போல்லாம் எனக்கு அந்த நேரம் எது சரின்னு படுதோ அதை எடுத்துக்கறேன். மற்றொரு சமயம் அந்தக் கோட்பாடோ அல்லது குருவோ எனக்கு ஒவ்வாமல் போகலாம். அதையும் நான் பெரிசா எடுத்துக்கறதில்லை. அதையும் என்னோட பரிணாம வளர்ச்சில ஒரு பகுதியா பார்க்கறேன். என்னைப் பொறுத்தவரை, எனக்கு எப்போ என்ன தெரியணுமோ அதைத் தெரியப்படுத்துது பிரபஞ்சம். உங்களுக்கு இண்டிகோ குழந்தைகளைப் பற்றிய பல்வேறு கருத்துக்கள் தெரியறதுனால ஏதாவது பாடங்கள் கிடைக்கலாம். அதனால என்னைக் கேட்டா உங்களுக்குக் கிடைச்சிருக்கற தகவல்களை புத்தி வச்சு ஆராயாம, இதயம் மூலமா உணர்ந்து பாருங்க. உங்களுக்கு எது சரியா தோணுதோ அதை எடுத்துக்கங்க. உங்களுக்கான உண்மைகளை வேற யாரும் உங்களுக்குத் தரமுடியாதுங்கறது என்னோட கருத்து.

உங்களோட வாழ்க்கையை மாத்தினது போல மற்றவங்க வாழ்க்கையையும் மாத்துங்கன்னு நீங்க கேட்டுக்கிட்டது என்னோட ஈகோவுக்கு சுகமாத்தானிருக்கு. ஆனா அது உண்மையில்லை. டோலே சொல்றது போல தத்துவங்களோ கோட்பாடுகளோ அல்லது குருமார்களோ வெறும் வழிகாட்டிப் பலகைகள்தான். அவங்க காட்ற வழில பயணிச்சு உங்களோட உண்மையைக் கண்டுபிடிக்கறது உங்க கைலதானிருக்கு. அதை நீங்க நல்லா செஞ்சிருக்கறதனால உங்க வாழ்க்கை மாறிருக்கு. அதுதான் நிஜம். (மக்களே, சைக்கிள் கேப்பில என்னை குருன்னு சொல்றேன்னு நினைச்சுக்காதீங்க. நான் வழிகாட்டிப் பலகையைச் சுட்டிக் காட்ற ஒரு சகபயணி. அவ்வளவே )

அப்பறம் நல்ல நூல்களைப் பற்றி எழுதச் சொல்லிருந்தீங்க இல்லையா? நான் இப்போ படிக்கறதை விட்டுட்டு கேக்கறதுக்கு மாறிட்டேன். படிக்கறதை விட கேக்கறதுல இன்னும் அதிகம் கத்துக்க முடியுது. நிறைய சொற்பொழிவுகள், போதனைகள் கேக்கறேன்.

இந்த வாரம் தாரா ப்ராக்கோட ‘When we are lost’ மற்றும் ‘Three Gateways to freedom’ சொற்பொழிவுகள் கேட்டேன். ரொம்ப சிம்பிளா, சுவாரஸ்யமா புத்த சமய தத்துவங்களைப் பகிர்ந்துக்கறாங்க. விரும்பினா கீழே இருக்கற சுட்டிலருந்து தரவிரக்கம் செய்துக்கலாம்:

http://www.tarabrach.com/audiodharma.html

ராதா,

மனம் தளராதீங்க. சுகமாகறதுக்கு நீங்க எடுத்து வைக்கற ஒவ்வொரு அடியும் உங்க உள்ளொளியைக் கண்டுபிடிக்கறதுக்கான ஒரு மைல்கல். ஒரு அடர்ந்த காட்டை அழிக்கணும்னா ஒவ்வொரு மரமா சாய்ப்போமில்லையா? நீங்க ஒரு பிரச்சினையை நீக்கின உடனே அடுத்த பிரச்சினை தெரியறதும் இது போலத்தான்.

சீக்கிரமா சுகமாக நம்மகிட்டே இருக்கற மைய நம்பிக்கைகளைக் கண்டுபிடிச்சு அவற்றை நீக்கறது ஒரு வழி. அதைப் பற்றி என்னோட மனசே சுகமா தொடர்ல எழுதிருக்கேன். உங்களுக்கு அது பயனளிக்கலாம். படிச்சுப் பாருங்க.

பெரும்பாலான சமயங்கள்ல நம்மோட எல்லாப் பிரச்சினைகளுக்குமே மூலகாரணம் நம்மை நாமே முழுமையா ஏற்றுக் கொள்ளாததானிருக்கும். அதனாலதான் தன்னிலையறிதல் முக்கியம். எங்கே இருக்கோம்னு தெரிஞ்சாத்தானே எங்கே போகணுமோ அதுக்கு பாதை தேட முடியும்?

உங்களை, உங்க உணர்வுகளை நீங்க புரிஞ்சுக்கறதொண்ணும் அண்ட அறிவியல் போல கடினமானதில்லை. தேவையானதெல்லாம் உங்களைப் பற்றிய கேள்விகளுக்கு உங்களுக்குள்ளே புகுந்து பதில்கள் கண்டுபிடிக்கணும். நான் இந்தப் பகுதில கேக்கற கேள்விகள் எல்லாம் இந்த வகையைச் சேர்ந்தவைதான். பதில் கண்டுபிடிக்க புத்திசாலித்தனம் தேவையில்லை. ஏன்னா இதுல சரியோ தவறோ கிடையாது. உங்களை மதிப்பிட வேற ஆள் கூட கிடையாது. அதனால கேள்வி கேட்ட உடனே உங்களுக்கு என்ன தோணுதோ அதுதான் பதில்னு எடுத்துக்கலாம். இல்லை, பதிலே வரலைன்னா ஒரு ஊகம் கூட செய்யலாம். நான் போன வாரம் கேட்ட கேள்விலருந்தே ஆரம்பிங்களேன்: அடுத்த ஜென்மத்தில நீங்க நீங்களா பிறக்க விரும்புவீங்களா? ஏன்?

ஒரு சுகவரைப் பார்க்கறது இன்னும் சீக்கிரம் சுகமடைய உதவும். நீங்க எந்த நாட்ல இருக்கீங்கன்னு தெரியலை. ஆனா எல்லா இடத்திலயும் ஏதாவது ஒரு முறையைக் கடைப்பிடிக்கற சுகவர்கள் இருப்பாங்க. ரேய்கி முறை சுகவர்கள் இல்லாத நாடுகளே இல்லைன்னு சொல்லலாம். முயற்சி செய்து பாருங்க. நேர்ல பார்க்கமலேயே சுகமளிக்கற பல உத்திகள் இருக்கு. அதனால உங்க நாட்டில இருக்கற சுகவரைத்தான் பார்க்கணும்னு கட்டாயம் ஒண்ணுமில்லை.

வசதியும் விருப்பமுமிருந்தா என் கூட ஒரு செஷன் முயற்சி செய்யுங்க. ஆனா நான் ஏற்கெனவே எழுதின மாதிரி சுகமாதல் உங்க கையிலதானிருக்கு.

விஜின்னு (உண்மையான பெயரில்லைங்க) ஒரு தங்கை மிகுந்த பாரத்தோட ஒரு கடிதம் எழுதிருந்தாங்க. ஒரு விபத்துல காலை இழக்கும்படி ஆயிருச்சாம் அவங்களுக்கு. அந்த சோகத்திலருந்து வெளில வரவே முடியலைன்னு சொல்லிருந்தாங்க. நியாயம்தான். என்னதான் நாம வெளிலருந்து ஆயிரம் ஆறுதல்களும் வியாக்யானங்களும் சொன்னாலும் அனுபவிக்கறவங்களுக்குத்தானே வலியும் வேதனையும் புரியும்?

இருந்தாலும் சில யோசனைகள் சொல்றேன்:

1.உங்களுக்கான என்னோட முதல் யோசனை என்ன தெரியுமா? உங்களைத் தங்களோட பலகீனத்தால கீழே இழுக்கற மக்கள்கிட்டேருந்து கொஞ்ச நாள் விலகி இருங்க. ‘ஐயோ, உனக்கு இப்படி ஆயிடுச்சே’ன்னு யாராவது சொல்வாங்கன்னு தோணுச்சின்னா அவங்களைப் பார்க்கறதைத் தவிர்த்திடுங்க – தற்காலிகமாத்தான்.

2.அடுத்து, உங்களைப் பற்றி நல்லாத் தெரிஞ்சுக்கங்க. உங்களுக்கு என்ன பிடிக்கும்? என்ன பிடிக்காது? என்ன வேணும்? இதுக்கேத்த மாதிரி சின்னச் சின்ன மாறுதல்கள் உங்க வாழ்க்கையில செய்ங்க. உதாரணமா உங்களுக்கு பாட்டுக் கேக்கறது பிடிக்கும்னு வச்சுக்கங்களேன். பாட்டுக் கேக்கன்னே சில நிமிஷங்களை ஒதுக்குங்க. அந்த நிமிடங்களை முழுமையா அனுபவிங்க. மொத்தத்தில உங்கமேல கொஞ்சம் அதிகம் கருணை காட்டுங்க.

3.கண்டிப்பா தியானம் கத்துக்கங்க. வெளில போய் கத்துக்க முடியலைன்னா, இணையத்தில ஏகப்பட்ட வளங்கள் இருக்கு. எது உங்களுக்குத் தோதா இருக்குதோ அதைப் பின்பற்றுங்க. தியானம் என்ன செய்யுதுன்னா எண்ணங்களை மட்டுப்படுத்துது. நீங்க கால் இழந்ததைவிட ‘ஏன் எனக்கு இப்படி ஆச்சு? காலில்லாமல் நான் என்ன செய்வேன்?’ அப்படிங்கற எண்ணம்தான் துயரத்தைத் தரும்.

4. புத்த மதம் வலிக்கும்(Pain) துயருக்கும் (Suffering) இடையே இருக்கற வேறுபாட்டை வலியுறுத்துதுன்னு தாரா ப்ராக்கோட சொற்பொழிவிலருந்து நான் தெரிஞ்சுக்கிட்டேன். வலி உடம்பில ஏற்படறது. அதையொட்டி எப்படிப்பட்ட எண்ணங்கள் எழுதோ அதிலருந்துதான் துயர் வருது. தியானம் எண்ணங்களை மட்டுப்படுத்த உதவறதால துயரும் நமக்குக் குறையும்.

கீழே சில தியானங்களடங்கிய/பற்றிய சுட்டிகள் தர்றேன்:

http://zenhabits.net/meditation-for-beginners-20-practical-tips-for-quieting-the-mind/

http://www.swamij.com/sohum-mantra-108.htm

http://www.youtube.com/watch?v=QFvelHlN9Rw

http://www.youtube.com/watch?v=Zh-klfBJlHc&feature=related

இதைப் போல எவ்வளவோ இருக்கு இணையத்தில. தேடி எது பிடிச்சிருக்கோ அதைப் பின்பற்றுங்க.

5.அடானான்னு அமெரிக்காவில ஒரு சுகவர் இருக்கார். அவர் வீடியோ மூலமா சுகமளிக்கிறார். எனக்கு எப்போல்லாம் கொஞ்சம் ஆற்றல் தேவையோ அப்போல்லாம் கீழே இருக்கற சுட்டில இருக்கற ஏதாவது ஒரு வீடியோவைப் பார்ப்பேன். எனக்கு ரொம்ப உதவியா இருந்திருக்கு. நீங்களும் முயற்சிக்கலாம்.

http://www.youtube.com/user/ataanaloa

6.ஏற்கெனவே தந்த மூன்று பயிற்சிகளை திரும்பவும் நினைவுபடுத்தறேன்:

http://www.youtube.com/watch?v=YYk7V4BxP-U

http://www.youtube.com/watch?v=Rgs4YosrVe4

https://www.nilacharal.com/tamil/specials/sugam.html

7.கண்டிப்பா கொடைகளை எண்ண/எழுத ஆரம்பிங்க.

இன்னும் நிறைய சொல்லிட்டே போகலாம். ஆனா முதல்ல இதுல எதையாவது ஆரம்பிங்க. அப்பறம் மேல பார்ப்போம். இந்த யோசனைகள் விஜிக்கு மட்டுமில்லை… நீங்க எல்லாருமே கடைபிடிக்கலாம். (ராதா, சுரேஷ் – கவனிக்க)

அப்புறம், ஒருத்தருக்கொருத்தர் ஆதரவா, ஆறுதலா இருக்க நமக்கு ஒரு மின்குழு ஆரம்பிக்கலாமான்னு தோணுச்சு. என்ன நினைக்கறீங்க, என்ன பேர் வைக்கலாம்னு எழுதுங்க.

ராஜேஸ்வரி ராதாகிருஷ்ணன் அறக்கட்டளை பற்றி கவிதா அருமையா ஒரு கட்டுரை எழுதிருக்காங்க. படிச்சுட்டு உங்களாலான உதவிகளைச் செய்யுங்க. தாமரை இல்லத்தில இருக்கற ஒவ்வொருத்தரையும் பராமரிக்கறதுக்கு மாசம் மூவாயிரம் செலவாகுதாம். இந்தியாவில யாருக்காவது சுகமளிக்க நேரம் ஒதுக்கினா அவங்களை ஏதாவதொரு சேவை நிறுவனத்துக்கு நன்கொடை அனுப்பச் சொல்வேன். அதை இனி தாமரை இல்லத்துக்குத் தரச் சொல்லப் போறேன். ஒவ்வொரு மாசமும் என்னோட குணமளிக்கும் சேவை மூலம் குறைந்தபட்சம் மூவாயிரம் ரூபாய் அவங்களுக்கு அனுப்ப முடிஞ்சா நல்லா இருக்கும்னு தோணுது. அதனால மக்களே, சுகமாகறதுக்கும் மற்றவங்களுக்கு உதவறதுக்கும் ஒரே நேரத்தில கிடைக்கிற வாய்ப்பு. தவறவிடாதீங்க. பயன்படுத்திக்க விரும்பினா, உங்களோட பிரச்சினையை சுருக்கமா எழுதி, என்னோட ஒரு செஷனுக்கு பிரதியுபகாரமா தாமரை இல்லத்துக்கு எவ்வளவு நன்கொடை தரமுடியும்னும் எழுதுங்க. பணத்தை மட்டும் வச்சு தெரிவு செய்ய மாட்டேன். யாருக்கு சேவை தேவைன்னு மேலேர்ந்து செய்தி வரும். அதனால கவலைப்படாம எழுதுங்க. மின்னஞ்சல் முகவரி மேலே இருக்கு.

நிதி திரட்ட வேற யோசனைகளும் இருக்கு. நீங்களும் ஏதாவது தோணினா பகிர்ந்துக்கங்க.

ரொம்ப சீரியஸ்ஸ்ஸ்ஸ்ஸா பேசியாச்சு. இந்த வாரக் கொடைகள்:

1.ஃபேஸியல் போயிட்டு விண்டோ ஷாப்பிங் பண்ணினது.
2. ஸராவோட ஒரு சுகம் பெறும் செஷன் செஞ்சது.
3. பிடித்தமான தாய் உணவு உண்டது.
4. விஷாலம் அம்மா தொலைபேசில மெஸேஜ் விட்டிருந்தது
5. ஜெஸிகாவோட தொலைபேசி முத்தங்கள் ("பெரீம்மா, நான் உங்களுக்கு இன்னொரு கிஸ் தரவா? நீங்களும் எனக்குத் தர்றீங்களா?")

படத்தில கட்டிருக்கற புடவை ஆரெம்கேவில ஆயிரம் ரூபாய்க்கு வாங்கினது. ராஜுவோட தெரிவு. இந்தப் படம் ஒரு நிலாச்சாரல் சந்திப்பில எடுத்தது.

அடுத்தவாரம் பார்க்கறவரைக்கும்… நல்ல பிள்ளைகளா இருங்க…

அபரிமிதமான அன்புடன்,
நிலா

About The Author

5 Comments

  1. Mini

    Nila, What a surprise? Sunday Nilacharal update agi iruku. Great I love your saree pink and gray combination.It looks so nice. last time second time oru periya comment pottu irunthen. ellam kanama poiduchu. pongapa. athila neenga katti iruntha pink saree ungaluku romba suit aanatha kuda soli irunthen. apram Geethavoda positive thoughts enaku romba pidichu irunthathu. Vanchi yoda books review kuduka sonangala atha naanum vali mozhithen.

  2. குமார்

    //அடுத்த ஜென்மத்தில நீங்க நீங்களா பிறக்க விரும்புவீங்களா? ஏன்?//
    ஆம். ஆனா சில நேரங்கள்ல என்ன பிறப்பு இது, என்று நொந்து கொண்டதுண்டு. ஆனாலும் பல நேரங்கள்ல, என்னே இந்த உன்னத பிறப்பு என்று சங்கோபித்த நாட்களும் உண்டு. பிறப்பின் லட்சியத்தை அறிந்துகொண்டவர்களுக்கு இதுபோன்ற இருவேறு கருத்துக்கள் இருக்கும் என்று நான் நினைக்கிறேன். ஆனால் பிறப்பின் லட்சியத்தை உணர்ந்துகொண்டவர்களுக்கு இந்த பிறப்பே ஒரு அவதாரநிலையாக இருக்கக்கூடும்.

  3. கீதா

    நிலா, உங்களுடைய ஒவ்வொரு பதிவும் ஒரு புதிய உலகத்தின் சன்னலைத் திறந்து காட்டுது. ரொம்ப நன்றி.

    வாழ்க்கையை எதிர்கொள்ளும் யுத்தியைப் பாராட்டி உங்களிடமிருந்து பாராட்டு பெற்றதில் ரொம்ப மகிழ்ச்சி. மினியின் பாராட்டும் கிடைச்சதில் இன்னும் கொஞ்சம் கூடுதல் சந்தோஷம். நன்றி நிலா, நன்றி மினி.

    அப்புறம் உங்கள் கேள்வி: அடுத்த ஜென்மத்தில் நீங்களாகவே பிறக்கவிரும்புறீங்களா?

    யோசிச்சுப் பாத்தா… இல்லைன்னுதான் தோணுது. இன்னும் மனவலிமையோடவும், சேவைமனப்பான்மையோடவும் சமுதாயத்தில் பல நல்ல விஷயங்களைச் சாதித்து வாழ்ந்து மறையணும்.

  4. mini

    அன்பை பகிரும் உறவுகள் Nila, Minkuluvuku intha peru eppadi iruku.

  5. கலையரசி

    புனித வெள்ளியன்று சமையலில் இருந்த போது, வெளிநாட்டிலிருந்து அழைப்பு வருவதாகக்கூறி, மகன் செல்போனை எடுத்து வந்து கொடுத்தான்.
    வெளிநாட்டில் வாழும் எனக்கு ஏற்கெனவே தெரிந்த உறவினர்களில் யாராவது இருக்கும் என்று நினைத்து ஹலோ என்றால் இது வரை பரிச்சயமில்லாத ஒரு குரல். ”ஹலோ கலை, நான் யாருன்னு சொல்லுங்க பார்ப்போம்,” என்றது. நானும் யோசித்து யோசித்து ஒன்றிரண்டு பெயர்களைச் சொன்னேன். என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை என்றவுடன், ”நான் தான் நிலா பேசுகிறேன்,” என்றார் அந்த முனையில் இருப்பவர்.

    எனக்கோ இன்ப அதிர்ச்சி. ஒரு நிமிடம் ஒன்றும் பேசத் தோன்றவில்லை. என்னையும் அறியாமல் மேடம், மேடம் என்றேன். மேடம் என்றால் பேச மாட்டேன் என்றார் நிலா. அதற்குப் பிறகு அவரைப் பெயர் சொல்லி அழைத்து நீண்ட காலம் பழகிய ஒரு நண்பியிடம் என் சுக துக்கங்களைப் பகிர்ந்து கொள்வது போல் பகிர்ந்து கொண்டேன். அன்று முழுதும் மனம் மகிழ்ச்சியில் திக்கு முக்காடிக் கொண்டிருந்தது. இதுவே எனது இந்த வாரக்கொடை.

    கடுமையான பணிச்சுமைகளுக்கிடையில் நேரம் ஒதுக்கி என்னிடம் பேசிய நிலாவிற்கு நன்றி.
    மின் குழுவிற்கு ’நேசம்’ அல்லது ’நேயம்’ என்று பெயர் வைக்கலாம் என்பது என் பரிந்துரை.

Comments are closed.