தேவையான பொருட்கள்:
மைதா மாவு — 1 கப்,
அரிசி மாவு – 1/4 கப்,
ரவை – ஒரு மேசைக்கரண்டி,
பொடியாக நறுக்கிய வெங்காயத் துண்டுகள் – 1/4 கப்,
சோடா – 2 சிட்டிகை,
புளித்த கெட்டித் தயிர் – 1 கப்,
உப்பு – சுவைக்கேற்ப,
பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் – ஒரு மேசைக்கரண்டி,
பொடியாக
நறுக்கிய கொத்துமல்லி, கறிவேப்பிலை – ஒரு மேசைக்கரண்டி.
செய்முறை:
புளித்த தயிரில் மைதா, ரவை, அரிசி மாவு ஆகியவற்றைக் கலந்து, அதில் உப்புப் போட்டு தளரப் பிசையுங்கள். பின் இந்தக் கலவையை 4 முதல் 5 மணி நேரம் ஊற வையுங்கள். பிறகு எல்லா பொருட்களையும் அதில் சேர்த்து நன்றாகக் கலந்து சூடாக பொறித்தெடுங்கள். மங்களூர் போண்டா தயார்!
“