வாழ்க்கைதான் எவ்வளவு வேகமா ஓடிக்கிட்டிருக்கு. இந்த அவசர உலகத்துல நம்மையே நாம மறந்து போற அளவுக்கு வேலைப்பளு, மனச்சிக்கல்கள், தெளிவின்மை மற்றும் இத்யாதிகள் நம்மை ஆக்கிரமிச்சிக்கிட்டு இருக்கு. நாம் வாழ்கிறோம் என்பதே மறந்து விடுமளவிற்கு நம் செயல்பாடுகள் இந்த நடைமுறையில அமைஞ்சிருக்குன்னு நினைக்கும்போது, நம்மளை நாமே அப்பப்போ தட்டிக்கொடுக்கலைனா வாழ்க்கைப் பயணம் சுகமா இல்லாமப் போயிடும்ங்கிற உண்மை தெரிகிறது. நம்மைக் கவனிக்க நமக்கே நேரம் இல்லைனா, வேற யாரை கவனிக்கப்போறோம், எப்படி கவனிக்கப் போறோம்?
இந்த உலகத்துல நீங்களும் ஓர் அற்புதமான ஜீவன். உங்களுக்குப் பங்களிக்கவும், உங்களால் பங்களிப்புப் பெறவும் இந்த உலகம் காத்துக்கிட்டிருக்குங்குற உண்மை புலப்படுமானால் வாழ்க்கை எவ்வளவு சுவாரசியமா அமையப்பெறும்? நீங்க கேட்குறது புரியுது. இதெல்லாம் எங்களுக்குத் தெரியாம இல்லை, ஆனா நேரம்தான் இல்லை அப்படினு பழைய பல்லவி பாடுறீங்க. பரவால்ல.. ஒருவேளை உங்களுக்கு ஒரு அசிஸ்டென்ட் கிடைச்சா எப்படி இருக்கும்? அந்த அசிஸ்டென்ட் உங்களோடயே எப்போதும் இருக்கறவரா.. நீங்க தூங்கற நேரத்துல கூட பக்கத்துல இருக்கறவரா இருந்தால்? இன்னிக்கு காலத்துல பாத்ரூமுக்குக் கூட துணையா வர்ற அசிஸ்டென்ட் நம்ம போன்தானே!
உங்களுக்கு உற்ற துணைவனா, உங்களை உங்களுக்கே ஞாபகப்படுத்த, உங்கள் இருப்பின் அவசியத்தை உணர்த்த, தடுமாறும் தருணங்களில் சற்றே ஆசுவாசப்படுத்த, சந்தோஷ கணங்களில் மேலும் உற்சாகப்படுத்த ஒரு மொபைல் ஆப் உதவுமானால் எப்படி இருக்கும்?
நிலாச்சாரல் வெளியிட்டிருக்கற "மகிழ்ந்திரு" மொபைல் அப்ளிகேஷன், மகிழ்வான வாழ்விற்கு தேர்ந்தெடுத்த பத்து சிறந்த செயல்முறைகளை உங்களுக்கு நினைவுபடுத்தக் காத்திருக்கிறது. இந்த நினைவுபடுத்தல் சொற்கள் வடிவில் உங்கள் போனில் வெளியாகும். உங்களுக்குத் தோதான வேளைகளில் நினைவுபடுத்துமாறு நீங்கள் விரும்பும் நேரத்தையும் இதில் செட் செய்து கொள்ளலாம். சொற்கள் வடிவில் மட்டுமல்ல, ஒலி வடிவிலும் கூட நினைவுபடுத்த இதன் அமைப்புகளை மாற்றிக்கொள்ளலாம். கனிவான குரலில் ஒலிக்கும் இந்த சிறந்த வழிமுறைகள் சில வினாடிகளில் நீங்கள் உந்துசக்தி பெற ஆக்கபூர்வமாய் இருக்கும். பத்தில் உங்களுக்கு தேவையான வழிமுறைகளை மட்டும் கூட நீங்கள் தெரிவு செஞ்சுக்க முடியும். அனைத்து வழிமுறைகளும் சீரற்ற வரிசையில் வருவதால், சீரற்ற வரிசைகளில் ஒலிப்பதால் நீங்கள் எதிர்பாரா தருணம் எதிர்பாரா வழிமுறை தோன்றக் காணலாம்.
இது நீங்கள் புன்னகைக்கவும், ஆழ்ந்து சுவாசிக்கவும், உடலுடன் இணைந்திருக்கவும், தடை களைந்த மனதில் நிலைத்திருக்கவும் செய்வதன் மூலம் உங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்துவதற்கு தன் பங்களிப்பினைச் செய்கிறது. எவ்வளவு சிறப்பான விஷயம் பாருங்கள். தினமும் சில முறை இந்த நினைவுபடுத்தலில் நீங்கள் கவரப்பட்டால் நாள் முழுவதும் சந்தோசத்தில் திளைத்திருக்க முடியும். மற்றவர்களின் ஆலோசனையோ, அவர்களது நெருக்கமோ கூட தேவையில்லை. உங்களை நீங்களே செம்மைப்படுத்திக்கொண்டு மகிழ்ந்திருக்க முடியும். இதனால் மற்றவர்களுக்கு நீங்கள் ஆலோசனையோ, அவர்களுக்கு நெருக்கத்தினையோ தர முடியும். இத்தருணம் எவ்வளவு அழகாயுள்ளது?
செயல்படுத்திப் பார்ப்போமா?
மிகவும் எளிமையா விஷயம்தான். உங்க மொபைலை எடுங்க. நெட் கனெக்ட் பண்ணி இந்த முகவரிக்குப் போங்க. "மகிழ்ந்திரு" அப்ளிகேஷன் டவுன்லோட் பண்ணி இன்ஸ்டால் பண்ணுங்க. அவ்வளவே! இதன் சிறப்பை அனுபவிங்க.
https://play.google.com/store/apps/details?id=com.nilacharal.magizhnthiru
(நன்றி : தமிழோவியம்)
“