தேவையான பொருட்கள்:
மைதா – 1 கப்
சர்க்கரை – 2 ½ கப்
நெய் – 1 கப்
போர்ன்விட்டா – 1 கப்
கோவா – 50 கிராம்
முந்திரிப்பருப்பு – 12
செய்முறை:
மைதாவை நெய்யில் பொன்னிறமாக வறுத்துக் கொள்ளுங்கள். பிறகு, அடிகனமான உருளியில் சர்க்கரையைப் போட்டு, அது மூழ்கும் அளவிற்கு நீரை ஊற்றி, நன்றாகக் கரைந்ததும் இரண்டு தேக்கரண்டி பால் ஊற்றுங்கள். சர்க்கரையில் இருக்கும் அழுக்குகள் தனியாகப் பிரிந்து வரும். அதை அப்படியே மேலோடு எடுத்து விட்டு, சர்க்கரையைப் பாகு காய்ச்சுங்கள். பாகு கம்பிப் பதம் வந்ததும், அதில் மைதாவைக் கொட்ட வேண்டும். இப்பொழுது அடுப்பை அணைத்து விட்டு நன்றாகக் கிளறுங்கள். சற்றுக் கெட்டியாகும்பொழுது முந்திரியைப் பொடி செய்து போட்டு, கோவாவையும் உதிர்த்துப் போட்டுக் கிளறி, பிறகு போர்ன்விட்டாவையும் போட்டுக் கிளற வேண்டும். அதன் பின், கலவையை நெய் தடவிய தட்டில் கொட்டிச் சமப்படுத்துங்கள். சற்று ஆறினதும் துண்டுகள் போட்டால் சுவையான போர்ன்விட்டா கேக் தயார்!
“