பொரித்த குழம்பு

தேவையான பொருட்கள்

முட்டைக்கோஸ் 1/4 கிலோ
காரட் 100கிராம்
முருங்கைக்காய் ஒன்று
வேக வைத்த துவரம் பருப்பு 2 டேபிள் ஸ்பூன்
தேங்காய் துருவல் 2 டேபிள் ஸ்பூன்
சாம்பார் பொடி 2 டீஸ்பூன்
மஞ்சள் பொடி 1டீஸ்பூன்
கடுகு 1 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு 1டீஸ்பூன்
பெருங்காயத்தூள் 1டீஸ்பூன்
உப்பு தேவையான அளவு
கறிவேப்பிலை சிறிதளவு

வறுத்து அரைக்க வேண்டியவை
கடலைப்பருப்பு 1டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு 1டீஸ்பூன்
மிளகாய் வற்றல் 2
சீரகம் 1டீஸ்பூன் (வறுக்காமல் பச்சையாக வைத்து அரைக்கவும்)

செய்முறை

அடி கனமான பாத்திரத்தில் சிறிது தண்ணீர் ஊற்றி, அதில் நறுக்கிய முட்டைக்கோஸ், காரட், முருங்கைக்காய் ஆகியவற்றை வேக வைக்கவும். பாதி வெந்ததும் உப்பு பெருங்காயத்தூள் சேர்த்து மூடி வைத்து முழுமையாக வேக வைக்கவும். நன்றாக வெந்ததும் சாம்பார் பொடியைப் போட்டு, பொடி வாசனை போகும் வரை கொதிக்க வைக்கவும்.இதற்கிடையில் வறுக்க வேண்டிய பொருள்களை வறுத்து தேங்காய் மற்றும் சீரகம் வைத்து அரைத்து கொள்ளவும். பிறகு அரைத்த விழுதைச் சேர்த்து ஒரு கொதி வந்ததும், வேக வைத்த துவரம் பருப்பை நன்றாக மசித்து குழம்பில் ஊற்றவும்.எல்லாம் சேர்ந்து கொதித்தவுடன் அடுப்பை அணைக்கவும். கடுகு,உளுத்தம் பருப்பு தாளித்து கறிவேப்பிலை சேர்க்கவும். இதே போல் புடலங்காய்,சௌசௌ,கீரை முதலிய காய்கறிகளிலும் செய்யலாம்.

About The Author

1 Comment

Comments are closed.