இரவு 8 மணி கடந்திருக்கும்.
52 வயதான ரோமானியப் பேரரசர் ஜூலியஸ் சீஸர் கிளியோபாட்ரா அறை நோக்கி வந்து கொண்டிருந்தார். அவரைச் சுற்றியும் சேவைப் பெண்கள். அவர்கள் பேரரசருக்கு முன்பாக மலர்களை தூவியபடி வந்து கொண்டிருந்தனர்.
கம்பீரமாக நிமிர்ந்து நடந்து வந்த ஜூலியஸ் சீஸர், கிளியோபாட்ரா அறையை நெருங்கியதும் உடன் வந்த சேவைப் பெண்கள் உத்தரவு பெற்று விலகிக்கொண்டனர். அவர் மாத்திரம் கிளியோபாட்ரா அறைக்குள் நுழைந்தார்.
அறையின் கதவை தாழ்ப்பாள் இட்டுக்கொண்டவர், கிளியோபாட்ரா எங்கே என்று பார்வையை சுழற்றினார். உயரிய பஞ்சணையில் சாய்ந்தபடி அமர்ந்திருந்தாள் அவள்
முதலிரவுக்கு அலங்கரிக்கப்படுவதுபோல், அந்த பஞ்சணை முழுவதும் மலர்கள் நிரம்பியிருந்தன. வாசனைத் திரவியங்களின் மணம் கமழ்ந்து கொண்டிருந்தன.
கிளியோபாட்ராவுக்கு அருகில் தீப விளக்குகள் எரிந்து, அறையை ஒளியூட்டிக் கொண்டிருந்தன. பஞ்சணையில் கிளியோபாட்ராவின் அருகில் அமர்ந்தார் ஜூலியஸ் சீஸர். அவளை இரவு ஆடையில் முதன்முதலாக கூர்ந்து பார்த்தார் ஜூலியஸ் சீஸர்.
தங்கம் போன்ற நிறத்தில் மெல்லியதாக இருந்தது அந்த ஆடை. தீப வெளிச்சத்தில் அவள் ஒரு தங்கப் பதுமை போலவே மின்னினாள். முகத்தின் முழு அழகையும் வெளிப்படுத்தாமல் இருக்க, வெண்மை நிறத்தினால் ஆன மெல்லிய முகத்திரை ஒன்றை அணிந்திருந்தாள்.
பார்வையை சற்று கீழே சுழல விட்டார். மெல்லிய ஆடையில் மிகவும் பக்கத்தில் அவள் அமர்ந்திருந்ததால் அவளது மேனி அழகு வளைந்து நெளிந்து ஓடிக் கொண்டிருப்பது சீஸருக்கு நன்றாகவே தெரிந்தது. எடுப்பாக நிமிர்ந்து தலைக்கனத்துடன் காணப்பட்ட அவளது மார்பகங்கள் அவரைப் பெருமூச்சுவிட வைத்தன..
கிளியோபாட்ரா, தனது பேரழகில் பேரரசர் கிறங்கிப் போய்விட்டார் என்பதைப் புரிந்து கொண்டாள்.
அவளும் அவள் தனது காந்தக் கண்களால் சீஸரை நோட்டமிட்டாள்.
வீரன் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று சொல்லாமல் சொல்லியது சீஸரின் கம்பீரமான உடல். இவரிடம் தன்னை ஒப்படைப்பதில் எந்தத் தவறும் இல்லை என்ற முடிவுக்கும் வந்தாள்.
அவளது இந்த முடிவின் பின்னணியில் ராஜதந்திரமும் ஒளிந்திருந்தது. தனது அழகில் சீஸர் மயங்கி, அவர் தன்னை அவரது மகாராணி ஆக்கிக் கொண்டால், மீண்டும் எகிப்து பேரரசு தனக்கு கிடைத்துவிடும். ரோமானியப் பேரரசியாகவும் வலம் வரலாம் என்று எண்ணினாள்.
சீஸர் பேச ஆரம்பித்தார்.
"பேரழகுக்கு பேரழகாக திகழும் என் அருமை கிளியோபாட்ராவே. உன் மவுனம்கூட பேரழகாகத்தான் இருக்கிறது. ஆனாலும், இந்த நேரத்தில், அதாவது என்னருகில் நீ இருக்கும்போது அந்த மவுனம் தேவையில்லையே…"
"அப்படியில்லை பேரரசரே..! தாங்கள் முதலில் பேசினால் நன்றாக இருக்கும் என்பதால் அமைதி காத்தேன்."
"ஆமாம்… திடீரென்று நீ என்னை சந்திக்கக் காரணம்…?"
"இப்போது, இந்த எகிப்து பேரரசுக்கு நீங்கள் பேரரசராக இருக்கலாம். ஆனாலும், நான்தான் பேரரசி. அப்படியிருந்தும், சிலரது சூழ்ச்சிகளுக்கு மயங்கி என்னை நாட்டைவிட்டு விரட்டிய எனது கணவனை தோற்கடிக்க வேண்டும். நான் மீண்டும் பேரரசி ஆக வேண்டும். அதற்கு உங்கள் துணை எனக்கு வேண்டும்…." என்று கர்ஜித்தாள்
"உனது விருப்பத்தில் என்ன தவறு இருக்கிறது? நிச்சயம் உன் கணவனைப் பழி வாங்கியே ஆக வேண்டும். இந்த நாட்டுக்கு பேரரசியாக மட்டுமின்றி, எனக்கு மகாராணியாகவும் நீ இருந்தால் நிச்சயம் அதை நிறைவேற்றிக் கொள்ளலாம்".
சீஸர் இப்படிச் சொன்னதும் சட்டென்று சிரித்தாள் கிளியோபாட்ரா.
"எனது விருப்பத்தை இவ்வளவு எளிதில் நிறைவேற்றுவீர்கள் என்று நான் எதிர்பார்க்கவில்லை…" என்ற கிளியோபாட்ராவிடம், லேசாக காதலும், காமமும் கலந்த வெட்கமும் வெளிப்பட்டது.
(இன்னும் வருவாள்…)