பொறுப்பான மீன்பிடிப்பு என்றால் என்ன?
பொறுப்பான மீன்பிடிப்பு என்பது கடலிலுள்ள இன்றைய மீன்வளத்தைப் பாதிக்காமல் வருங்கால சந்ததியினருக்கும் இவ்வளத்தை விட்டுச் செல்லும் வகையிலான மீன்பிடிப்பு முறையாகும். உலக உணவு ஸ்தாபனத்தின் மூலம் பிரபலப்படுத்தும் இக்குறிக்கோளானது யாரும் இதை அமலாக்கம் செய்யாமல், மீனவர்களால் தாமாகவே முன்வந்து கடைபிடிக்கும் நோக்கிலே உருவானது.
எவை பொறுப்பற்ற மீன்பிடி முறைகள்?
* மீன்பிடிப்பின் மூலம் சுற்றுப்புறத் தூய்மையை கேடாக்குதல்
* சூழலுக்கு கேடு விளைவிக்கும் மீன்பிடி முறைகளான இரட்டைமடி, சுருக்குமடி முதலியன
* பொடிமீன்களை அதிக அளவில் பிடித்து சங்காயமாக ஆக்குவது
* மீன் உற்பத்தியைவிட அதிக மீன்பிடிப்பு
* உத்தேசமில்லாத மீன்பிடிப்பு
* வெடி வைத்து மீன்பிடித்தல்
* விஷம் வைத்து மீன்பிடித்தல்
* மடிவலைகளில் பொடிக் கண்ணிகளை பயன்படுத்துதல்
* கழிவுமீன்களை கடலினுள் கொட்டுதல்
* படகில் உற்பத்தி ஆகும் கழிவு மற்றும் கசடுகளை கடலில் கொட்டுதல்.
பொறுப்பான மீன்பிடித்தலுக்கான வழிமுறைகள்
1. பழைய மீன்பிடி வலைகள், கயிறுகள், லைட் பல்புகள், பிளாஸ்டிக் பொருட்களை கடலினுள் கொட்டாதீர்கள்.
2. இரட்டைமடி மற்றும் சுருக்குமடி முதலிய பெரும் அழிவை உண்டாக்கும் வலைகளை விட்டொழியுங்கள்.
3. இழுவலை / மடிவலைகளில் சதுரக்கண்ணி மாற்றங்களை செய்து பொடிமீன் பிடிபடுவதை தவிர்க்கவும்.
4. இழுவலை / மடிவலைகளில் 35 மில்லிமீட்டருக்கும் குறைவாக கண்ணிகளை வைக்கவேண்டாம்.
5. ஆமைகள் பிடிபடுவதை தவிர்க்கும் சாதனத்தை மடிகளில் பொருத்துவதால் வலைகளில் அவை பிடிபட்டு அழியாமல் தடுக்கலாம்.
6. தேவையான மீன்கள் மட்டும் பிடிபடும் வகையில் அமைந்துள்ள மீன்பிடி வலைகளை, உதாரணமாக செவுள் வலை, நண்டு வலை, ஊசிவலை ஆகியவற்றை உபயோகிக்கவும்.
7. அழிந்துவரும் கடல்வாழ் உயிரினங்களைப் பிடிப்பதைத் தவிர்க்கவும். ஏற்கனவே அழிவுப் பாதையில் சென்று கொண்டிருக்கும் இம்மீனினங்களை விரைவில் இல்லாது போகச் செய்து விடாதீர்கள்.
ஏகபோக மீன்பிடிப்பா?
என்றென்றும் மீன்பிடிப்பா?
பொறுப்பான மீன்பிடிப்பு!
பொருத்தமான மீன்பிடிப்பு!
“
ஹாய் சரவணன்,
கடலில் வாழும் விந்தையான மீன்களைப் பற்றி விரிவாக அறியத் தர முடியுமா?
உதாரணத்திற்கு, தொட்டால் ஷாக்கடிக்கும் மீனைப் போல…