பூமாலை

பூமாலை தொடுத்துக் கொடுப்பதற்கென்றே பிறந்தவன் முருகேசன். அவனது பூக்கடையில ரோஜா மாலை – சம்பங்கி மாலை – கதம்ப மாலை என்று விதவிதமான பூமாலைகள்; நேர்த்தியாய் கண்ணைக் கவரும்.

பிள்ளையார் கோவிலின் வாசலில் அமைந்த அவனது பூக்கடையிலிருந்து பூமாலையை வாங்கிச் சென்று பிள்ளையாருக்கு சாற்றும் வழக்கம் அன்றாடம் நடக்கும் நிகழ்வு.

பிறந்த நாள் விழா – ஆண்டு நிறைவு – காதுகுத்தல் – மஞ்சள் நீராட்டு – பூணூல் அணிவித்தல் – சீமந்தம் – வளைகாப்பு – திருமணம் – அறுபதாம் கல்யாணம் – பாராட்டு விழா என்று பல விழாக்களுக்கு மாலையை வாங்கிச் செல்வோரது கூட்டம் அலைமோதும்.

சொல்லி வைத்தாற்போல் வழக்கத்திற்கு மாறாக, அன்றைய தினம் ஒருவர் கூட பூமாலை வாங்க வரவில்லை. முருகேசனுக்கு மிகுந்த வருத்தம்; ஆச்சரியமும்கூட. எல்லாப் பூக்களையும் மாலையாக தொடுத்துவிட பகல் உணவு வேளை வந்தது.

அந்த சமயம் அவனது மகன் கடைக்கு வரவே முருகேசன் மகனை பூக்கடையைப் பார்க்கச் சொல்லிவிட்டு ஒரு மாலையை பிள்ளையார் கோவிலுக்குக் கொடுத்துவிட்டு உணவு உண்ண அருகில் உள்ள தனது இல்லத்திற்குச் செல்ல சாலையைக் கடந்தான்.

திடீரென்று மின்னல் வேகத்தில் ஒரு நான்கு சக்கர வாகனம் வரவே சற்றும் எதிர்பாராத விதத்தில் பயத்தில் முருகேசன் நிலைதடுமாறி கீழே விழுந்தான்.

விழுந்த இடத்தில் அவன் உயிர் பிரிந்தது.

உடன் கூடிய மக்கள் முருகேசனை அவனது வீட்டிற்கு தூக்கிச் சென்றனர். செய்தி ஊர் முழுதும் காட்டுத்தீ போல பரவவே அவனது கடை முன் கூட்டம் கூடியது.

ஒவ்வொருவரும் பூமாலையை வாங்கிக் கொண்டு முருகேசன் வீட்டிற்கு விரைந்தனர். பார்த்துப் பார்த்து அழகாய்த் தொடுத்த பூமாலைகள் அனைத்தும் அரைமணி நேரத்தில் விற்றுத் தீர்ந்தன.

பூமாலைகளால் விற்றுக் கிடைத்த பணத்தை எடுத்துக் கொண்டு முருகேசனுக்கு இறுதிச்சடங்கு செய்ய விரைந்தான் அவனது மகன். தானே தொடுத்த மாலைகள் அனைத்தும் முருகேசனின் இறுதிச்சடங்கில் மலர்வளையமாக அலங்கரித்தன.

காலச்சக்கரம் சுழல மீண்டும் முருகேசனது கடையில் முன்பு இருந்ததைவிட மிக அதிகக் கூட்டம் அலைமோதியது.

பூமாலையைத் தொடுத்துக் கொண்டிருப்பவன் முருகேசனின் மகன்.

About The Author

22 Comments

  1. chitra

    மாலை மணக்கவில்லை கனக்கிறது மணம் மிகுந்த மாலைகள் மணம் குளிர வைக்கும் கனம் மிகுந்த மாலைகள் மனதையும் கனக்க வைக்கிறது
    ஆனாலும் பூந்தென்றல்
    வாழ்க வளமுடன் பிரியமுடன் – உனது அன்பு சினேகிதி

  2. Manikandan

    பாமாலை பாடிய பாசந்தியின் இந்த பூமாலை அவரின் எழுத்துக்கு ஓர் உதாரனம்

  3. Nirmala

    மலரின் பனிதுளி இன்று கண்ணீர் துளியானது முருகேசனுகாக…

  4. Senthil

    சற்று சிந்திக்க வைத்தது. மிகவும் அருமை.

  5. Narasimhan K

    ஏர்கனெவெ படித்திருந்தாலும் மீன்டும் படிததது சிந்தனையை தூன்டியது

  6. VENKATESAN R

    மனதை மிகவும் வருத்தப்படச் செய்தது. ஆனாலும், நன்றாக இருந்தது. பாராட்டுக்கள்.

    வெங்கடேசன், சேலம்.

  7. Seetha

    பொதுவாக பூ மணக்கும். ஆனால் முருகேசன் கனக்கிறது

  8. varadharajan mv

    பாசந்தியின் பூமாலை சிறுகதை மனதை நெகிழ வைக்கிறது

  9. Subramanian S

    பாசந்தியின் பூமாலை முடிவு திடீரென்று வரும் சுனாமி மாதிரி இருக்கிறது

  10. Srinivasan K

    எதை நாம் செய்கிறோமோ அது நம்மை Vஅந்து அடையும் என்பதர்க்கு ஒரு எடுத்காட்டு

  11. chandrasekaran

    உங்கல் பனி தொடரட்ம் வத்துகல்

Comments are closed.