பூசணி மஞ்சுரியன்

தேவையானவை:

மஞ்சள் பூசணிக்காய் – அரை பாகம்
நறுக்கிய வெங்காயம் – அரை கப்
பச்சை மிளகாய் – ஒரு தேக்கரண்டி
அஜினமோட்டோ – கால் தேக்கரண்டி
உப்பு – ஒரு தேக்கரண்டி
மைதா – அரை கப்
இஞ்சி பூண்டு விழுது – ஒரு தேக்கரண்டி
எண்ணெய் – பொறிப்பதற்கு

சாஸ் செய்வதற்கு :

வெங்காயம் – அரை கப்
உப்பு – அரை தேக்கரண்டி
சோளமாவு – 1 1/2 தேக்கரண்டி
உப்பு – 2 தேக்கரண்டி
மிளகு தூள் – அரை தேக்கரண்டி
சர்க்கரை – அரை தேக்கரண்டி
தக்காளி சாஸ் – 3/4 கப்
வெங்காய தாள் – அரை கப்
இஞ்சி – ஒரு அங்குல துண்டு
பூண்டு – 7 பல்
காய்ந்த மிளகாய் 6

செய்முறை:

பூசணியை துருவி நன்கு பிழிந்துவிட்டு வெங்காயம், உப்பு, அஜினமோட்டோ, இஞ்சி பூண்டு விழுது, மைதா சேர்த்து தண்ணீர் சிறிதும் இல்லாமல் பிசைந்து சிறு உருண்டைகளாக செய்யவும். பின்னர் எண்ணெயில் பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.

சாஸ் செய்முறை:

1. இஞ்சி, பூண்டு, காய்ந்த மிளகாயை விழுதாக அரைக்கவும்.
2. தக்காளி சாஸ், சோளமாவு மற்றும் மிளகுத் தூளை ஒன்றாக கலந்து வைக்கவும்.
3. ஒரு மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி சூடானதும் பொடியாக நறுக்கிய வெங்காயம் மற்றும் சர்க்கரை சேர்த்து வதக்கவும்.
4. பிரவுன் கலர் ஆனதும் அரைத்த விழுதை சேர்த்து நன்கு கிளறவும்.
5. பின்னர் உப்பு சேர்த்து கலந்து வைத்துள்ள கலவையும் சேர்த்து கொதிக்க விடவும்.
6. பொறித்து எடுத்துள்ள உருண்டைகளை கொதிக்கும் கலவையில் ஒன்றன் பின் ஒன்றாக மெதுவாக சேர்க்கவும்.
7. 10 நிமிடம் மிதமான தீயில் வைத்திருந்து இறக்கவும். வெங்காய தாள் தூவி பரிமாறவும்.

About The Author