தேவையான பொருட்கள்:
பீட்ரூட் – 1 கிலோ,
சர்க்கரை – 1 (அ) ¾ கிலோ,
நெய் – 100 கிராம்,
முந்திரித்துண்டுகள், பாதாம், பிஸ்தா, திராட்சை – விரும்பினால் தேவைக்கேற்ப,
குங்குமப்பூ – சிறிதளவு,
ஏலக்காய் – 2,
லவங்கம் – 2,
பால் – ½ லிட்டர்.
செய்முறை:
பீட்ரூட்டை நன்றாகக் கழுவித் தோலைச் சீவிக் கொள்ளுங்கள். பிறகு, உப்பு சேர்த்த தண்ணீரில் ஐந்து நிமிடங்கள் ஊற வைத்து, பின்னர் கேரட் துருவியால் நன்கு துருவிக் கொள்ள வேண்டும். ஏலத்தையும், லவங்கத்தையும் வறுத்துப் பொடித்து வைத்துக் கொள்ளுங்கள். அடுப்பில் வாணலியை வைத்து, சிறிது நெய் ஊற்றி, பீட்ரூட் துருவலைக் கொட்டிச் சில நிமிடங்கள் வதக்க வேண்டும். அதனுடன் சர்க்கரையை சேர்த்துக் கிளறிக் கொண்டே இருக்க வேண்டும். தேவையானால் சிறிது நீர் சேர்க்கலாம். சற்று கொதி வந்தவுடன் பாலைச் சேர்த்துக் கிளறிக் கொண்டிருங்கள். அல்வா பதத்துக்கு வந்ததும் தேவையான அளவு நெய் சேர்த்து, பொடித்த ஏல, லவங்கப் பொடிகளைத் தூவி, திராட்சை, முந்திரி, பாதாம், பிஸ்தா ஆகியவற்றையும் சேர்த்துக் கிளறி இறக்குங்கள்.
இதுவே பர்ஃபி தேவையானால், மேலும் கொதிக்க வைத்து, இறுகியதும் நெய் தடவிய தட்டில் கொட்டிக் குளிர்ந்ததும் வில்லைகள் போடுங்கள். சுவைத்துப் பார்த்து உங்கள் அனுபவத்தை எங்களுக்குச் சொல்லுங்கள்!