நேற்றைய அமைதி இன்றைய புயல்!
கவலை வேண்டாம் காத்திருங்கள்!
நிச்சயமாய் இன்றைய புயல் நாளைய அமைதி!
***
அலைகளின் தலையில் வெள்ளைக் குமிழிக் கிரீடங்கள்
கண்மூடித் திறப்பதற்குள் காற்றில் கரையும்
நம் கவலைகள் போல!
***
கறுத்த மேகங்கள்! கறுத்த வானம்!
கறுத்த கடல்! கறுத்த மாலை நேரம்!
அளவில்லா வெள்ளை அலைகள் நமக்கு மட்டும்!
***
வானத்து விமானத்தைப் பிடிக்கமுயலும் சிறுவனது பட்டம்!
குறைவானதுதான், பட்டக்கயிற்றின் நீளம்
சிறுவனது முயற்சியல்ல!
***
கடல் தந்த நீரைக் கரைசேர்க்கும் மேகம்!
தான் கொண்ட நீரைக் கடல் சேர்க்கும் மலைகள்
எதையும் கவர்ந்து வாழ்வதில்லை நமதன்னை இயற்கை!
ஆம்!
எதையும் கவர்ந்து வாழ்வதில்லை நமதன்னை இயற்கை
ஆனால்,
சீற்றம் கொண்ட போது மட்டும்,
சிறகுகலைக் கூட விட்டு வைப்பதில்லை!
அன்னை என்றழைத்தான் எனது தமிழன்!
சீர்குழைக்கும் உனது பண்பை,
இங்கனம் என்னென்று அழைப்பது?