பில்கேட்ஸ் – ஓய்விற்குப்பின்!

மனிதர் தான் அமைத்த மைக்ரோசாஃப்டிலிருந்து வெளியேறும் தருணத்தில் இருக்கிறார். இந்த வருடம், ஜூன் இருபத்தியேழாம் தேதி, கண்ணில் நீருடன் எல்லோருக்கும் ‘டாட்டா’ சொல்லிவிட்டார். இருந்தும் ஏதோ சின்ன பொறுப்பில் இன்னும் அங்கேயே அமர்ந்துள்ளார். மொத்தமாக வெளியே வந்தபின் என்ன செய்யப் போகிறார் என்ற சிந்தனை அவருக்கு நிறையவே இருக்கும்! நமது சிந்தையில் வந்து விழுந்த சில எண்ணங்கள் இதோ..

“ஹே!! ட்யூட்! காட் ஸம் சஜஸ்ஷன்ஸ் ஃபார் யூ!”

•ஹார்வர்ட் யுனிவர்ஸிட்டி சென்று தன் படிப்பை தொடரலாம். எத்தனையோ பேருக்கு படிக்க உதவி செய்யும் இவர் ஒரு ஹார்வர்ட் ட்ராப்-அவுட்! பாதியிலேயே படிப்பை விட்டு விட்டு, ஓடி வந்துவிட்டார். அந்தக் கதை பெரிய கதை – மைக்ரோஸாஃப்ட் ஆரம்பித்த கதை!!

•‘விண்டோஸ்’ க்ராஷ் ஆகும் ஒவ்வொரு முறையும் ஒரு டாலர் தருவதாக அறிக்கை விடலாம். (அவ்வளவு பணமும் – ஐம்பத்தியெட்டு பில்லியன் டாலர் – சீக்கிரமாக செலவாகிவிடும்)

•வங்கியுடன் பேசி, தன் மொத்த பணத்தையும் ஒற்றை டாலர் நோட்டுக்களாக கொடுக்கச் சொல்லி, அதை வைப்பதற்கு ஒரு கட்டிடத்தை எழுப்பி, அதில் ஒரு ஓரத்தில் உட்கார்ந்து ஒவ்வொன்றாக எண்ணலாம். (எண்ணி முடிப்பதற்குள் மனிதர் இறைவனடி சேர்ந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை!)

•வேலை போய்விட்டதே!! காசு சேமிக்க, வீட்டின் வேலைக்காரர்களை துரத்திவிட்டு, தானே எல்லா வேலைகளையும் பார்க்கலாம்.

•ரிட்டயர்ட் ஆகிவிட்டதால், “ஸோஷியல் செக்யூரிட்டி” அலுவலகம் ஒரு “செக்” அனுப்பும். வீட்டு வாசலில் உட்கார்ந்து அதன் வரவுக்காக காத்திருக்கலாம்.

•வாழ்க்கையில் முதன் முறையாக, தன் குழந்தைகளின் முகத்தைப் பார்த்துப் பேசலாம்! உடம்பில் தெம்பு இருந்தால், பேஸ்பால், சாஃப்ட்-பால் விளையாடலாம்.

•ஆயிரத்து, தொள்ளாயிரத்து நாலில், முப்பத்தியோரு மில்லியன் டாலர் காசு கொடுத்து வாங்கிய கோடெக்ஸ் லெஸெஸ்டர்-ஐ உட்கார்ந்து படித்து புரிந்துகொள்ள முயற்சிக்கலாம். மனிதருக்கு புத்தகங்களின் மீது காதல். குறிப்பிட்டுள்ள புத்தகம் புகழ் பெற்ற ‘டா-வின்சி’யின் விஞ்ஞான எழுத்துக்களின் தொகுப்பு.

•ஒரு சிறு மாறுதலுக்கு, தன் இரு கண்களையும் மூடி தூங்கலாம்.

About The Author

2 Comments

Comments are closed.