தேவையான பொருட்கள்:
வறுத்த வேர்க்கடலை – 100 கிராம்,
பொடித்த சர்க்கரை – 100 கிராம்,
மைதா – 100 கிராம்,
தயிர் – தேவையான அளவு,
சமையல் சோடா – சிறிது,
உப்பு – சுவைக்கேற்ப,
ஏலப்பொடி கால் தேக்கரண்டி,
பால் – ஒரு லிட்டர்,
முந்திரி – 10,
திராக்ஷை – 20,
பொறிக்க தேவையான எண்ணெய்.
செய்முறை:
1. பாலை நன்றாகக் காய்ச்சி நான்கு மேசைக்கரண்டி சர்க்கரையை சேர்த்து பாதியளவாக குறுகச் செய்யவும்.
2. தோல் நீக்கிய வேர்க்கடலை , முந்திரி , திராக்ஷை மூன்றும் சேர்த்து நீர் அல்லது பால் சேர்த்து விழுதாக அரைத்தெடுக்கவும். இதில் மைதா,பொடித்த மீதி சர்க்கரை உப்பு ,சோடா உப்பு போட்டு தேவையான அளவு தயிர் ஊற்றி கெட்டியாகப் பிசைந்து காய்ந்த எண்ணெயில் சிறு சிறு பகோடாக்களாக போட்டு நிதானமாக குறைந்த தழலில் பொறித்தெடுக்கவும்.
3. பொறித்தவற்றை ஏற்கனவே காய்ச்சி குறுக்கி வைத்திருக்கும் பாலில் போட்டு ஏலப்பொடி தூவி சிறிது குளிரவைத்து பரிமாறவும். வெகு ருசியான இனிப்பு வகை இது!!
“