குழந்தைகளை
மிரட்டிக் கொண்டு
செல்கிறாய் நீ.
உன் அதட்டல்
கேட்காத அலட்சியத்தில்
பிள்ளைகள்.
‘மிஸ்.. மிஸ்’ என்று
உன்னைச் சுற்றி வரும்
பட்டாம்பூச்சிகளாய்..
என் பால்யம் திரும்புகிறது
அந்த நிமிடம்..
முன்பே பிறந்து விட்டதில்
முகம் சிணுங்கி
பார்த்துக் கொண்டிருக்கிறேன்
அழித்து அழித்து எழுத
இப்போது சிலேட்டும் இல்லை
நானும் சிறு பிள்ளையும் இல்லை..!
மீசை முளைத்த பின்னரும் சிறுபிள்ளையாய் இருப்பதில் என்ன தவறு இருக்கிறது. சில நேரங்களில் நம் குட்டிக் குழந்தைகளே நமக்கு பாடம் எடுக்கும் அனுபவம் வாய்ப்பின் வேறு என்ன வேண்டும் நாம் இவ்வுலகில். மாணவனாகுங்கள் உங்கள் இல்லத்தரசிக்கு.-சோமா
தங்கள் வரவிற்கும் கருத்திற்கும் நன்றி சோமா.