பார்த்ததில் ரசித்தது! படித்ததில் பிடித்தது!! – 26

அன்னையின் அருளுரைகள்!

அரவிந்தாசிரமத்தில் அன்னையைத் தரிசிக்க வந்தோர் அடைந்த பலன்கள் ஏராளம். இன்றும் அவரது சமாதியைத் தரிசித்து ஆறுதலையும் அருளையும் அடைவோர் ஏராளம்.

அவர் வாழ்ந்த காலத்தில் அவர் பக்தர்களிடையே உரையாற்றியது, எழுதியது ஆகிய அனைத்தும் தொகுக்கப்பட்டு ‘கலெக்டட் ஒர்க்ஸ் ஆஃப் தி மதர்’ என்று 17 தொகுதிகளாக அரவிந்த ஆசிரம வெளியீடாக வெளியாகி உள்ளன. அவற்றில் ‘வோர்ட்ஸ் ஆஃப் தி மதர்’ என்ற பதின்மூன்றாம் தொகுதியிலிருந்து சில அருளுரைகளை இங்கே பார்க்கலாம். 1913ஆம் ஆண்டிலிருந்து 1973ஆம் ஆண்டு முடிய சுமார் அறுபது ஆண்டுகள் அவர் கைப்பட எழுதியவற்றில் அவர் அரவிந்தரைப் பற்றி எழுதியவை இந்தத் தொகுதியில் இடம் பெற்றுள்ளன. பிரெஞ்சு மொழியில் அவர் ஆற்றிய உரையாடல்கள் ஆங்கில மொழியில் பெயர்க்கப்பட்டுள்ளன. இங்கே அவற்றைத் தமிழில், ஆங்கில உரையுடன் காணலாம்.

8-12-1950.
பூமி மற்றும் அதில் வாழும் மனிதர்களிடம் வரவேற்கும் பண்பு இல்லாததே ஸ்ரீ அரவிந்தர் தனது உடலைப் பற்றிய முடிவை எடுக்கப் பெரும்பாலும் காரணமாக அமைந்தது.
(The lack of receptivity of the earth and men is mostly responsible for the decision Sri Aurobindo has taken regarding his body).

14-12-1950.
நம்முடன் இங்கு பிரக்ஞையுடனும் உயிருடனும் இருக்கும் ஸ்ரீ அரவிந்தருக்காகத் துக்கப்படுவது அவருக்கு இழைக்கும் அவமானமாகும்.
(To grieve is an insult to Sri Aurobindo who is here with us, conscious and alive).

26-12-1950.
ஆசிரமத்தில் நீங்கள் விநியோகித்துக் கொண்டிருக்கும் துண்டுப் பிரசுரத்தின் மொழிபெயர்ப்பைக் கேட்டபோது வேதனையால் அதிர்ச்சியுற்றேன். தன்னை நமக்காகத் தியாகம் செய்த மஹாபுருஷரின் மீது நீங்கள் இப்படிக் கொஞ்சமும் புரிதல் இல்லாமலும், மரியாதை இன்றியும், பக்தி இன்றியும் இருக்கக்கூடும் என்று நான் கற்பனை கூடச் செய்து பார்த்ததில்லை. ஸ்ரீ அரவிந்தர் முடங்கிப்போகவில்லை. அவர் தனது உடலை உகுப்பதற்குச் சில மணி நேரங்களுக்கு முன்னர் தனது படுக்கையிலிருந்து எழுந்து, தனது கை நாற்காலியில் நெடு நேரம் உட்கார்ந்து சர்வ சகஜமாகத் தன்னைச் சூழ்ந்து இருந்தோரிடம் பேசிக் கொண்டிருந்தார். ஸ்ரீ அரவிந்தர் தனது உடலை விட்டு நீங்கும்படி வற்புறுத்தப்படவில்லை. மனிதனின் மனப்பக்குவத்திற்குப் புரியாத, மேன்மையான காரணங்களுக்காக அப்படிப்பட்ட முடிவை அவர் தேர்ந்தெடுத்தார். (ஒரு விஷயம்) ஒருவருக்குப் புரியாதபோது, செய்ய வேண்டிய ஒன்றே ஒன்று, மதிப்புடன் மௌனமாக இருக்க வேண்டியதுதான்!

(I was painfully shocked when I heard the translation of the leaflet you are distributing here in the Ashram. I never imagined you could have such a complete lack of understanding, respect
and devotion for our Lord who has sacrificed himself totally for us. Sri Aurobindo was not crippled; a few hours before he left his body he rose from his bed and sat for a long time
in his armchair, speaking freely to all those around him. Sri Aurobindo was not compelled to leave his body, he chose to do so for reasons so sublime that they are beyond the reach of
human mentality. And when one cannot understand, the only thing to do is to
keep a respectful silence).

ஸ்ரீ அரவிந்தர் அறிவூட்டி, வழிகாட்டி, பாதுகாத்தவாறு எப்போதும் நம்முடன் இருக்கிறார். பரிபூரணமான நம்பிக்கை மூலம் அவரது கருணைக்கு நமது பதிலைத் தர வேண்டும்.
(Sri Aurobindo is always with us enlightening, guiding, protecting. We must answer to his grace by a perfect faithfulness).

ஸ்ரீ அரவிந்தரின் உதவி எப்போதும் நிலையானது. அதை எப்படிப் பெறுவது என்பதை அறிந்து கொள்வது நம்மைப் பொறுத்ததே.
(The help of Sri Aurobindo is constant: it is for us to know how to receive it.)
சுமார் 404 பக்கங்கள் உள்ள தொகுப்பிலிருந்து முதலில் உள்ள சில பக்கங்களிலேயே மேலே உள்ள அற்புதமான, உண்மை ஒளியைத் தரும் சொற்களைக் காண முடிகிறது எனில் புத்தகம் முழுவதும் படித்தால் அது எப்படிப்பட்ட மேன்மையைத் தரும்?!

நூலை முழுவதுமாக ஆங்கிலத்தில் படிக்க விரும்புவோர் அணுக வேண்டிய இணையத்தளம்:
http://www.sriaurobindoashram.org/ashram/mother/writings.php
இதில் 17 தொகுதிகளையும் தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.

**********

(அடுத்த இதழில் தொடர் நிறைவுறும்)

About The Author