பாரதி என்றொரு பகலவன் பிறந்தான்
பாமரர் தம்மை விழிப்புறச் செய்தான்
சாரதி எனவே அழைத்துச் சென்றான்
பாரில் நம் புகழைப் பரவச்செய்தான்!
பாரதி அளித்த ஒவ்வொரு பாடலும்
பாரில் கிடைத்த தனித்தனிப் பா(ற்)க்கடல்
பாரினில் பிறந்த ஒவ்வொரு மனிதனும்
நாவினில் நவில்தகு நன்னெறி வேதம்
பாரதி நல்கிய ஒவ்வொரு கவிதையும்
நெஞ்சினில் வீரம் புகச்செயும் நாதம்
காலை மாலை நாளும் படிக்க
அச்சம் அனைத்தும் அகற்றிடும் கீதம்!
நாரணன் அளித்த கீதையின் சாரம்
பாரதிப் பாட்டில் தீர்க்கமாய்ப் பார்த்தேன்
நாட்டைப் பாடினான் வீட்டைப் பாடினான்
நாளும் வாழும் முறைமையைப் பாடினான்
மண்ணைப் பாடினான் விண்ணைப் பாடினான்
மனிதம் சிறக்கும் மாண்பினைக் காட்டினான்
காக்கையைப் பாடினான் குருவியைப் பாடினான்
யாக்கையின் பெருமையை நிறைவுறப் பாடினான்!
காலையைப் பாடினான் மாலையைப் பாடினான்
காலம் முழுதும் சுவைக்கப் பாடினான்
அருளைப் பாடினான் பொருளைப் பாடினான்
உலகம் இருக்கும் நிலையைப் பாடினான்
ஊருக்கு நல்லதை உவக்கச் சொன்னான்
உண்மை தெரிந்ததை உரக்கச்சொன்னான்
பாருக்குப் பெருமையைப் பயனொடு சேர்த்தான்
பெண்மைக்கு உயர்விடம் அழகுறத் தந்தான்
இயற்கையைப் பாடினான் செயற்கையைப் பாடினான்
இனிதாய் வாழும் நெறிதனைக் காட்டினான்
பெண்மையைப் பாடினான் தண்மையைப் பாடினான்
உண்மை அனைத்தையும் உண்ர்ந்து பாடினான்!
பாரதிக்கொப்ப ஓர் கவிஞனைப் பார்த்தல்
பாரினில் முழுமையும் அமைதியைக் காத்தல்
மாந்தர் அனைவரும் வாழ்வாங்கு வாழ்தல்
மேற்கினில் கதிரவன் உதித்திடும் நாளே!
இய்ய,
திரு சுப்பரயனின் பாரதி கவிதை மிக நன்ட்ரு.
அவருக்கு வாழ்த்துக்கல்.
வ்ர். இல.சி. கந்தசாமி
மிக அழகான் கவிதை
நான் என்பதை விட நாம் என்று சொல்லத்தான் விரும்புவேன் நட்புக்காக இடம் கொடுத்த எனக்கு காதலுக்கு மட்டும் இடம் கொடுக்க மறுக்கிறது என் மனம். நமது இந்தியாவை தலை சிறந்த வல்லரசு நாடாக மாற்றுவது நம் கடமை உனது கடமை எண்ண என்று சிந்தித்து செயல்படு.
hi sir your kavithyai is very beautiful. one one lines are very beauthiful.
நன்று.