Q. ஆன்மீக வாழ்க்கை எவ்வாறு இருக்க வேண்டும்?
மனிதர்கள், தண்டவாளத்தின் மேல் ஓடும் ரயில் வண்டி என்ற நிலையில் தங்கள் வாழ்க்கையை குறுக்கிக் கொண்டு விடுகிறார்கள். தண்டவாளத்தில் ஓடும் ரயில் ஒரு சிறைக் கைதி போன்றது. அதனால் காட்டுக்குள்ளும், மலைக்குள்ளும், கவின்மிகு இயற்கைக்குள்ளும் ஓடி மகிழ முடியாது. ஆன்மீக வாழ்க்கை என்பது ஆறு போல அமைய வேண்டும். ஒரு ஆறு தன் பாதையை தானே வகுத்துக் கொண்டு ஓடிச் சென்று கடலில் கலக்கிறது. அது போல ஒவ்வொருவரும் எல்லா கருத்துக்களையும் ஆராய்ந்து, தங்களுடைய பாணியில் சிந்தித்து, செயல்பட வேண்டும்.
“