இராமாயணத்திலே போரிலே இராவணனை வதம் செய்த பிறகு, இராவணனின் உயிர் பிரிகின்ற தருணத்தில், இராமன் இலட்சுமணனிடம், "இராவணனிடம் போய் நீதி சாஸ்திரம் கற்றுக் கொண்டு வா", என்று கூறுகிறார். நீதி சாஸ்திரம் என்றால் என்ன?
இதே மாதிரி ஒரு scene மகாபாரதத்திலே கூட வருகிறது. பீஷ்மர் உத்தராயண புண்ணிய காலத்திலே, அம்புப் படுக்கையிலே உயிரை விடப் போகிற நேரத்திலே கிருஷ்ணர், "அவரிடத்திலே போய் எல்லாவற்றையும் தெரிந்து கொண்டு வா", என்று சொல்கிறார். Basically this is to gain the experiences from a person who is supposed to be an erudite scholar. ரொம்பவும் விஷயம் தெரிந்த அனுபவஸ்தனான ஒரு மனிதன், அவன் உயிரை விடுவதற்கு முன்னாலே, அவனுடைய அனுபவங்களை வைத்துக் கொண்டு, "எது நல்லது, எது கெட்டது", என்று நாம் கற்றுக் கொள்கிற பாடங்கள்.
General ஆக நீதி சாஸ்திரம் என்பது வேறே. நீதி சாஸ்திரம் என்பது உங்களுடைய Indian Penal Codeமாதிரி. தர்ம சாஸ்திரம் என்பது வேறே. யக்ஞவல்க்யர் எழுதியது தர்ம சாஸ்திரம். தர்மம் மாறாது. "ஒருத்தன் கொலை பண்ணக் கூடாது, பொய் சொல்லக் கூடாது, திருடக் கூடாது", என்ற இது போன்றது எல்லாம் தர்மங்கள். இந்த தர்மங்கள் மாறவே மாறாது. ஸ்கூட்டரிலே doubles போகலாமா இல்லை singlesதான் போக வேண்டுமா, சைக்கிளிலே doubles போகலாமா இல்லை singlesதான் போக வேண்டுமா, அரசாங்கம் சாராயக் கடை நடத்தலாமா இல்லை நடத்தக் கூடாதா என்பது எல்லாம் அந்தந்த political society’s convenience. சட்டங்கள் மாற்றப் படக் கூடியவை. அதெல்லாம் நீதி. தர்மம் என்று வருகிற போது, அது மாறவே மாறாது. எந்த விஷயம் எந்தக் காலத்திலேயும் மாறாதோ, a thing which cannot be negated is Dharma. And a social rule which is flexible, getting modified from time to time according to the contemporary society is நீதி.
“