Q. Krishna says Karma Yoga is superior than becoming a sanyasi. Can you explain?
சந்நியாசி என்பவன் ஒரு organised society dependent ஆக இருக்கிறான். ஒரு சந்நியாசி காட்டிலே போய் உட்கார்ந்தால் ஒன்றும் இல்லை. மூச்சைப் பிடித்துக் கொண்டு உட்கார்ந்து விடலாம். அதே இது, அவன் ஒரு மடாதிபதியாகவோ, இல்லை ஒரு ஜீயராகவோ, இல்லை ஒரு சந்நியாசியாகவோ உலகத்திலே இருந்தான் என்றால், he has to depend for his food or for running his establishment on the outside society. அப்படித் தான் அவர்களாலே இருக்க முடியும். அப்போது ஒரு சோம்பேறியாக இருந்து இன்னொருத்தனை நம்பிக் கொண்டு இருக்கிறவனை விடவும், தான் ஏதோ ஒரு வகையிலே உழைத்து, தன்னையும், தன்னை சார்ந்தவர்களையும், தன்னை சார்ந்து இருக்கிற சமுதாயத்தையும் ஒரு small decimal level காவது help பண்ணுவது என்பது தானே நல்லது. Instead being a burden to the society, he can be useful to the society. He can be useful to him, his family, or useful to a smaller community. அதனாலே சந்நியாசி என்பது ஒரு dependent stage. The non sanyasi or a Karma Yogi is an independent person. So he is far better than a sanyasi. சந்நியாசி வாழ்க்கையை விட குடும்ப வாழ்க்கை நல்லது. எல்லோரும் குடும்பத்திலே இருக்க வேண்டும்.
அதாவது திருவள்ளுவர், "இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவருக்கும் நல்லாற்றின் நின்ற துணை", என்று சொல்லுகிறார். ஒரு கிரஹஸ்தாஸ்ரமத்திலே, குடும்ப வாழ்க்கையிலே இருக்கிறவன், இறந்துப் போனால் உங்களுக்கு திவசம், காரியம் பண்ணுவதற்கு உதவுகிறார்கள். இந்த மாதிரி சந்நியாசிகளுக்கு அவர்களுடைய சாப்பாடு, ஆஸ்ரமம் என்று organised ஆக help பண்ணுகிறார்கள். தேவர்களுக்கு பூஜை, புனஸ்காரங்கள் வழியாக பண்ணுகிறார்கள். தேவர்கள், பித்ருக்கள், சந்நியாசிகள் என்று மூன்று பேருக்கும் help பண்ணுகிறார்கள். போகிற வழிக்கு இவன் தான் அவர்களுக்கு வழி காட்டுகிறான். He is helping them என்பது திருவள்ளுவருடைய சித்தாந்தம். But, அந்த இல்வாழ்வானுக்கு என்று சில நெறிமுறைகள் கொடுத்து இருக்கிறார்கள். அதாவது ஒரு கிரஹஸ்தனுக்கு, இல்லத்தானாக இருக்கிறவனுக்கு, சில disciplines இருக்கிறது. அதை அவன் follow பண்ணினால், அவனுக்கு அது நல்லது.
ஒரு சாமியார் காட்டிலே இருந்தார். ஒரு இராஜகுமாரன் சுயம்வரத்திற்காக போய் கொண்டு இருந்தான். அந்த காட்டிலே இருக்கிற சாமியார் young, very handsome person. இராஜகுமாரன், "சாமி! நீங்கள் என் கூடவே வாங்கள். நான் ஒரு சுயம்வரத்திற்கு போகிறேன். நீங்கள் என் பக்கத்திலேயே உட்கார்ந்து கொண்டு, அந்த இராஜகுமாரியினுடைய மனது என் கிட்டே வருகிற மாதிரி, எனக்கு அவள் மாலை போட்டு கல்யாணம் பண்ணிக் கொள்கிற மாதிரி எப்படியாவது பண்ணுங்கள்", என்று சொல்லி அந்த சாமியாரை கூட கூப்பிட்டுக் கொண்டு போனான். சுயம்வரத்திலே எல்லோரும் உட்கார்ந்துக் கொண்டு இருந்தார்கள். இந்த சாமியாரும் இராஜகுமாரன் பக்கத்திலே உட்கார்ந்து கொண்டு இருந்தார். அந்த இராஜகுமாரி உப்பரிகையிலே இருந்து பார்த்தாள். இந்த சாமியார் மேலே அவளுக்கு ஒரு கிக் வந்தது. நேராக மாலையை தூக்கிக் கொண்டு அந்த சாமியார் கழுத்திலே போட ஓடி வந்தாள். இராஜாக்கள் எல்லாம் out. சாமியார் அங்கே பிடித்த ஓட்டம் தப்பித்தால் போதும் என்று ஓடுகிறார். சாமியார் பின்னாலே இராஜகுமாரி ஓடுகிறாள். இராஜகுமாரி பின்னாலே இராஜா ஓடுகிறான். இப்படி எல்லோரும் ஓடிக் கொண்டே இருக்கிறார்கள். சாமியார் ஒரு காட்டிற்குள்ளே ஓடிப் போய் விட்டார். அவர் காட்டிற்குள்ளே போகிற போது, இருட்டி விட்டது. இனி என்ன பண்ணுவது என்று தெரியவில்லை. அதனாலே சாமியாரை காலையிலே தேடிக் கொள்ளலாம் என்று சொல்லி, எல்லோரும் ஒரு மரத்தடியிலே ஒதுங்குகிறார்கள். அப்போது மரத்தின் மேலே இருக்கிற பறவைகள் பேசிக் கொள்கிறதாம். "பாவம்! இவர்கள் எல்லோரும் பசியாக இருக்கிறார்கள். குளிராக இருக்கக் கூடாது என்று கீழே நெருப்பை மூட்டி இருக்கிறார்கள்", என்று பறவைகள் பேசி கொள்கிறது. அப்போது அந்த பெண் பறவை, "நம்முடைய மரத்தின் கீழே அவர்கள் விருந்தாளியாக வந்து இருக்கிறார்கள். அவர்கள் எல்லோரும் பசியாக இருக்கக் கூடாது. நான் முதலிலே இந்த நெருப்பிலே விழுந்து பொசுங்கி விடுகிறேன். நம்மை இவர்கள் சாப்பிட்டு பசியாறட்டும்", என்று சொல்கிறதாம். சொல்லி விட்டு, அது முதலிலே குதித்ததாம். அதை பார்த்து விட்டு அந்த ஆண் பறவை, "நானும் உன்னுடன் குதிக்கிறேன். அவர்கள் மூன்று நாலு பேர் இருக்கிறார்கள். நீ மிஞ்சி மிஞ்சிப் போனால் 150 கிராம் இருப்பாய்", என்று சொல்லி அதுவும் குதித்ததாம். மற்ற இரண்டு பறவை பார்த்ததாம். பசியாக இருப்பார்களே என்று அதுவும் நெருப்பிலே குதித்ததாம். இதெல்லாம் நடந்து முடிந்தது. காலையிலே இவர்கள் எல்லோரும் சாமியாரை கண்டுபிடித்து விட்டு, "வாருங்கள் போகலாம். என் பெண் ஆசைப் படுகிறாள். நீங்கள் தான் இவளை கட்டிக் கொள்ள வேண்டும்"", என்று சொல்கிறார். ஆனால் அவர், "இல்லை", என்று சொல்கிறார். ஒரு அழகான இராஜகுமாரி கழுத்திலே போடுவதற்காக மாலையோடு வந்தால் கூட வேண்டாம் என்று சொல்கிற பக்குவத்திலே இருந்தால், சந்நியாச தர்மம் ரொம்ப நல்லது. அது முடியாதவன் எப்படி பறவைகள் தங்களுடைய மரத்தின் கீதே விருந்தாளிகள் பட்டினியாக இருக்கக் கூடாது என்கிற மாதிரி ஒத்தாசை பண்ணியதோ, அந்த மாதிரி இருக்க முடிந்தால், நீங்கள் இல்லறத்தானாக இருக்கலாம்.
அதனாலே திருவள்ளுவர் அதைத் தான் சொல்கிறார்.
"செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருப்பான் நல்விருந்து வானத்தவர்க்கு". அப்போது தான் ஒரு விருந்தாளி போய் இருப்பானாம். அந்த விருந்தாளி போவதற்குள்ளே, வாசல் கதவு கிட்டே நின்று அடுத்த விருந்தாளி வர மாட்டானா என்று காத்துக் கொண்டு இருக்க வேண்டுமாம். அந்த மாதிரி இருக்க முடிந்தால், இல்லறத்தானாக இருப்பது நல்லது. இல்லறத்தானுக்கு உள்ள தர்மம் இருக்கிறது. இல்லறத்தானுக்கு என்று சில னரவநைள எல்லாம் கொடுத்து இருக்கிறார்கள். அதை கடைபிடிக்க முடிந்தால், இல்லறம் தான் ரொம்ப நல்லது.
துறவறத்தை விட இல்லறம் தான் நல்லது. கடைபிடிக்க வேண்டும். எத்தனை பேராலே முடியும்? முடிவது இல்லை. அது தான் ப்ராப்ளம்.
People get attached. அவர்களுடைய மனைவி மக்கள் மேலே தான் அந்த attachment வருகிறதே தவிர, மற்றவர்களிடம், வெளியாட்களிடம் விருந்தாளிகள் தான் தெய்வம் என்று காத்து இருந்து சேவை செய்ய வேண்டும் என்கிற எண்ணம் வருவது இல்லை. இன்னிக்கு யாரும் யாருக்கும் ஒரு சிங்கிள் டீ கூட வாங்கிக் கொடுக்க மாட்டார்கள் ஒரு காலத்திலே எல்லாம் ஹோட்டல் எல்லாம் கிடையாது. எங்கேயும் கேண்டீன் எல்லாம் கிடையாது. பரதேசி என்றால் நாம் பிச்சைக்காரன் என்று நினைக்கிறோம். அதற்கு அர்த்தம் அது கிடையாது. வெளியூர்காரன் என்பது தான் அதன் அர்த்தம். எந்த ஊருக்குள்ளே ஒரு புது முகத்தை பார்த்தாலும், அவன் பரதேசி தான். அந்தக் காலத்திலே அப்படி தான் இருந்தது. வெளியூர்காரன் ஒருத்தன் அந்த ஊருக்குள்ளே வந்தான் என்றால், "எங்க வீட்டுக்கு வாங்க. எங்க வீட்டுக்கு வாங்க", என்று கூப்பிடுவார்களாம். அவன் வருகிறேன் என்று சொல்லி விட்டான் என்றால், உடனே அவன் காலை கழுவி, வீட்டுக்குள்ளே அழைத்துக் கொண்டு போவார்களாம். ஒரு கோலம் போடுவார்களாம். அதிலே வாழையிலையை போட்டு, அவனுக்கு என்ன எல்லாம் பிடிக்கும் என்று கேட்டு சமைப்பார்களாம். அதை அவனுக்கு பரிமாறுவார்களாம். பரிமாறுவதற்கு முன்னாடி அவனுடைய வயிற்றிலே ஒரு தர்ப்பையை கட்டுவார்களாம். அந்த தர்ப்பை அமுங்குகிற வரைக்கும் அவனுக்கு சாப்பாடு போடுவார்களாம். அதற்கு பிறகு அவனுக்கு வெற்றிலை, பாக்கு, தாம்பூலம், தட்சிணை எல்லாம் கொடுத்து, அவனை விழுந்து கும்பிட்டு விட்டு, ஆசீர்வாதம் பண்ணுங்க என்று சொல்லி, திருப்தி தானா என்று கேட்பார்களாம். அவன் திருப்தி தான் என்று சொல்லுகிற வரைக்கும் இவன் சும்மா இருக்க வேண்டும். அது தான் yardsticks of விருந்தோம்பல். அது ஆன உடனே, அவர்கள் சாப்பிட்ட எச்சில் இலையிலே புரண்டு எழ வேண்டும். இதிலே இவ்வளவு தர்மங்கள் இருக்கிறது.
“