பேரமைதி…… why peace is so precious?
திரு. சிவ சங்கர் பாபா அவர்களின் உரையிலிருந்து,
Peace is available. But we have an internal conflict where we become piece, piece.
அதுதான் பிராபளம். இந்த உலகத்தில் எல்லாரிடத்திலும் அமைதி இருக்கிறது. யாரிடத்தில் அமைதியில்லை? கடலில் அமைதியில்லையா? கடலில் ஒரு இரண்டு கிலோமீட்டர் தான் கொந்தளிப்பும், அலைகளும். இரண்டு கிலோமீட்டர் தாண்டிவிட்டால் நிச்சலனமாகத்தான் கடல் இருக்கிறது. அதுக்கப்புறம் கடலில் அலைகளே கிடையாது இல்லையா! அந்தக் காலத்தில் ஒரு சினிமா பாட்டு இருக்கிறது அமைதியில்லாத என் மனமேன்னு. இந்த அமைதியில்லாதது வெளியில் இல்லை, நம் மனதில்தான்.
நிலையில் திரியாது அடங்கியான் தோற்றம்
மலையினும் மாணப் பெரிது.
அப்படியே ஸ்டெடியாக இருந்தால், அவன் மலையை விட உயர்ந்தவன் என்று வள்ளுவர் சொல்கிறார். என்ன ஆனாலும் எதைப்பற்றியும் கவலைப்படக்கூடாது. பாரதி இன்னொரு இடத்தில் அழகாக சொல்கிறார். இந்த நிமிஷம் புதிதாய் பிறந்தோம் என்று இரு. கண்ணை விழிப்பாய், பண்ணை இசைப்பாய் பராசக்தி நமக்குத் துணை! வேதம் நமக்குத் துணை! கடவுள் நமக்கு இருக்கிறான். தெய்வம் நமக்குத் துணை. ஒரு தீங்கு வரமாட்டாது, ஒரு தீங்கும் வர மாட்டாது. இதுதான் பாரதியினுடைய வார்த்தைகள். Have total faith in the absolute kindness or absolute good of God for you. And you will see how the help flows.”