Q. பாபா எல்லோரையும், "உள்ளே பாருங்கள், என்று சொல்கிறார். என்னுடைய argument என்ன என்றால் பாபா, "என்னுள்ளே என்ன இருக்கிறதோ, அந்த ஆத்மாவை தான் பூரண பிரம்மமாக project பண்ணி இருக்கிறேன், என்று சொல்கிறார். அப்போது நேராக பூரண பிரம்மத்தையே பார்க்கலாமே? எதற்கு உள்ளே பார்க்க வேண்டும்?
நான் ஏற்கனவே இதை சொல்லி விட்டேனே? இந்தக் கோவில் கட்டி கும்பாபிஷேகம் பண்ணிய போது, நான் கொடுத்த quotationஏ அது தான். நான் என்ன சொன்னேன் என்றால், "கல்லில் பார்க்க முடிந்தவர்கள் கல்லிலே பாருங்கள். என் சொல்லில் பார்க்க முடிந்தவர்கள் சொல்லில் பாருங்கள். எப்படியாவது கடைத்தேறினால் சரி. இது தான் என்னுடைய quotationஏ! இதை நான் சிவசங்கர் பாபாவாக கூட சொல்லவில்லை. நரசிம்மராகவே சொன்னேன். அந்த Voiceஏ வேறே! அந்த பாவனையே வேறே! அந்த வார்த்தைகளை நான் சொன்ன போது, அந்த நரசிம்ம பாவனையிலே தான் சொன்னேன்.
நான் என்ன சொன்னேன்? "அன்றைக்கு ருத்ர சக்தி தூணிலே இருந்து ஸ்தூலத்திற்கு உள்ளே வந்தது. இப்போது ஸ்தூலத்திலே இருந்து கல்லுக்குள்ளே போய் இருக்கிறது. அதனாலே கல்லிலே பார்க்க முடிந்தவர்கள் கல்லிலே பாருங்கள். என்னுடைய சொல்லிலே பார்க்க முடிந்தவர்கள் சொல்லிலே பாருங்கள். எப்படியாவது கடைத்தேறினால் சரி, என்பது தான் என்னுடைய வாசகம்.
So, you are right. If you people can remember this form, it is all the more beautiful.