Q. How is it possible to think God all the time and in parallel doing the work? When I start chanting your Mantra I cannot do the office work and vice versa. And the mind is in one thing only. How to achieve both?
நாம் ஒரு விஷயத்திலே (வேலையிலே) concentrate செய்கிறபோது வேறு ஒரு thought நமக்கு வருகிறது என்றால் என்ன அர்த்தம்? அந்த ஒரு thought அதனுடைய need நம்முடைய subconscious mindலே இருக்குன்னு தானே அர்த்தம். ஸ்கூல் பசங்க எல்லாரும் ஒரு புக் படிக்கிறாங்க. அதிலே கொஞ்சம் disinterested ஆக இருக்கிறதுனாலே mind போக மாட்டேங்குது. இதே அவங்களுக்கு பிடித்த cartoon Amar Chitra story bookனா அவங்க ரொம்ப interest உடன் படுத்துக் கொண்டாவது படிச்சிட்டே இருப்பாங்க. அவங்களுக்கு பிடித்த Mickey mouse movie பார்க்கிறதாக இருந்தால் அப்படியே கண்ணை விரித்து வைத்துக் கொண்டு பார்த்துக் கொண்டே இருப்பாங்க. So, எது பிடிக்குதோ அதிலேதான் mind போகும். அதுதான் மனோதத்துவரீதியான உண்மை. அப்போ கடவுளைப் பற்றி நினைக்கிறதை விடவும் வேற ஏதோ ஒரு worldly activity லே mind போகிறாதுன்னா இன்னும் நம்முடைய priority அந்த activityனு அர்த்தம். எதைப் பற்றி நினைக்கிறோமோ அதுன்னு அர்த்தம். அந்த duality இல்லாமல் இருந்தால் தான் ஒரு focussed thought வரும்.
ஒரு சாமியாரிடம் ஒரு ஆள் போனான்; "நான் குடிக்கிற பழக்கத்தை விட்டுவிடணும்னு நினைக்கிறேன். ஆனால் என்னாலே முடியலை; ரொம்ப கஷ்டமாக இருக்கிறது" என்று சொன்னான். அவர் "உனக்குள்ளே ரெண்டு ஆள் இருக்காங்க. ஒருத்தன் குடிக்கணும்னு சொல்றவன்; இன்னொருத்தன் குடிக்க வேண்டாம்னு சொல்றவன். இந்த ரெண்டு பேரிலே ஒருத்தனை கொன்றுவிடு. அப்போது தான் உன்னுடைய problem solve ஆகும்" என்று சொன்னாராம். அந்த மாதிரி ரெண்டு thoughtலே ஒன்றை நாம் finish பண்ணியே ஆகணும். அதுக்கு ஈஸி ஆன வழி என்ன தெரியுமா? உனக்கு மசால் தோசை சாப்பிடணும்னு ஆசை வந்ததுன்னா மசால் தோசை சாப்பிட்டு தொலைச்சிடு. At least that thought will not be in the mind. அதாவது எதெல்லாம் harmless ஆன thoughtஓ அந்த thoughtஐ முதலிலே முடிச்சிடு. அப்போ அதைவிட சீரியஸ் ஆன விஷயத்திலே உன் mind போக ஆரம்பிக்கும். அந்த priority க்கு மாற்று. And most of your wishes are all momentary. சின்ன சின்ன விஷயங்களாகத்தான் இருக்கும். So, நீ label பண்ண கற்றுக்கொள். எதெல்லாம் தேவையில்லையோ அதை ஒதுக்கக் கற்றுக்கொள் முதலிலே அதை அனுபவித்து முடித்துவிடு. இது முதல் பாயிண்ட்.
இரண்டாவது, உங்க குழந்தைகள் படிக்கணும்னா நீங்க என்ன செய்வீங்க, ஒழுங்கா படித்து மார்க் வாங்கினால் உன்னை சினிமாவுக்கு கூட்டிட்டுப் போவேன்; Beachக்கு கூட்டிட்டுப் போவேன்; Ice cream வாங்கித் தருவேன் என்று ஏதாவது ஒரு வகையிலே உங்க குழந்தையை motivate பண்ணுவீங்க. அதே மாதிரி நீ ஒழுங்கா படிக்கலைன்னா உன்னை bathroomலே வைத்து பூட்டிவிடுவேன் என்று நிறைய பேருடைய அம்மாங்க சொல்லுவாங்க. A punishment and reward system இருக்கு இல்லையா அதை உன்னுடைய mindக்கு கொடு. "நீ ஒழுங்கா தியானம் பண்ணியானா உனக்கு இந்த treat கொடுப்பேன். நீ ஒழுங்கா தியானம் செய்யவில்லை என்றால் உனக்கு 2 நாள் பட்டினி. நான் சாப்பிடமாட்டேன்" அப்படின்னு சொல்ல வேண்டும். Go for a punishment and reward system and it can be your own decision.
யாரும் அதை சொல்லித் தரத் தேவையில்லை. அது முடியாதுன்னு நினைக்காதீங்க. இராமாயணத்திலே எல்லாரைவிடவும் ரொம்ப busy ஆக இருந்தது ஆஞ்சநேயர்தான். ஆஞ்சநேயர் கடலைத் தாண்டுகிறார்; இலங்கையை எரிக்கிறார்; கணையாழியைக் கொண்டு போய் சீதையிடம் கொடுக்கிறார். சூடாமணியைக் கொண்டுவந்து இராமரிடம் கொடுக்கிறார்; யுத்தகளத்திலே ரொம்ப busy ஆக வேலை செய்கிறார். அவர் ஒன்றும் சோம்பேறி ஆக உட்காரவில்லை. எப்போது பார்த்தாலும் ஏதாவது ஒரு வேலையை செய்துக் கொண்டே இருந்தார். ஆனால், தன்னுடைய மனதிற்குள்ளே "ராம் ராம் ராம்" என்று சொல்லிக் கொண்டே இருந்தார். அவர் செய்தது எல்லாம் ராம காரியம். The duty for Rama. மனதிற்குள்ளே ராம தியானம். So, He was able to balance. One side, He was bound in duty for Rama; on the other side He was living in thoughts with Rama. இராம காரியத்தில் வேகமும். இராம தியானத்தில் நாட்டமும். அப்போ அவர் எதை சாதித்தாரோ அதை நீ கூட சாதித்தால் நீயும் கூட மஹாவீர்தான்.
மஹாவீரன் என்பது கத்தியை நல்லா தீட்டி வைச்சிக்கிட்டு சண்டைப் போடுவது இல்லை. நம்முடைய mind ஐ அடக்குவது. அதுதான் உலகத்திலேயே பெரிய வீரம். "அலையும் மனதை அடக்குபவனே யோக சிற்பரனாம். அலையும் மனதை அடக்குபவனே யோக தற்பரனாம்". யோகம் என்பது அதுதான். "நிலையின் திரியாது அடங்கியான் தோற்றம் மலையினும் மாணப் பெரிது". It is possible with focus.
நமக்கு அந்த எண்ணம் இருக்கணும். "நாம் இதை சாதிக்க வேண்டும்" என்ற priorityக்கு நாம் நம்முடைய மனதை மாற்ற வேண்டியிருக்கும். ரொம்ப சாதாரணமான கிராமத்து ஆட்கள் கூட இதை effortless ஆக செய்யறாங்க. ஒரு பக்கம் வயலிலே வேலை செய்துக்கிட்டே இருக்காங்க. இன்னொரு பக்கம் தெம்மாங்கு பாட்டு பாடிக்கிட்டே இருப்பாங்க. பாடுவது வேறு வேலை. வயலிலே வேலை செய்வது வேறு வேலை. கால் மிதிச்சிக்கிட்டு இருக்கு வயலிலே. மனசு பாடிக்கிட்டே இருக்கும். பீடி சுற்றுகிற இடத்திலே எல்லாம் போய் பாரு. அவங்க பீடி சுற்றிக்கிட்டே இருப்பாங்க. "விஸ்வரூபம் படம் பார்த்தியா அக்கா" அப்படின்னு ஆரம்பிப்பாங்க. ஒரு பக்கம் விஸ்வரூபம் படம் பற்றி பேச்சிலே மைண்ட் இருக்கு, இன்னொரு பக்கம் கை மட்டும் பீடி சுற்றிக் கொண்டே இருக்கு. கை மட்டும் தீப்பெட்டிகுள்ளே தீக்குச்சிகளை அடுக்கிக் கொண்டே இருக்கிறது. தறி நெய்யறவங்களை போய் பாரு. காலும் கையும் லொட லொடன்னு அடிச்சிக்கிட்டே இருக்கும் ஆனால் மனசுக்குள்ளே ‘அந்த படம் நல்லாவே இல்லை. சுவாமி படமா அது’ அப்படின்னு சொல்லுவாங்க. So, there is a parallel physical activity and mental activity.
சிவகாசி என்ற ஊரிலே இருக்கிற தீப்பெட்டி தொழிற்சாலையிலே வேலை செய்கிற தொழிலாளி, குடியாத்தம்லே இருக்கிற பீடி சுற்றுகிற தொழிலாளி, காஞ்சிபுரத்திலே இருக்கிற தறி நெய்யும் நெசவு தொழிலாளி செய்வதை உங்களாலே செய்ய முடியாதா? நீங்க அவங்க எல்லாரையும் விட ரொம்ப படிச்சவங்க, ரொம்ப வசதியாக இருக்கிறவங்க, hard work பண்ணலை, நீங்க எல்லாம் என்ன மிஞ்சிப்போனா வீட்டிலே இட்லி மாவு அரைச்சிட்டு இருக்கப் போறீங்க மிக்சிலே, இல்லைன்னா வெண்டைக்காய் சாம்பார் வைச்சிட்டு இருக்கப்போறீங்க. இதுக்கு நடுவிலே கடவுளை நினைக்க முடியாதா என்ன உங்களாலே ! கடவுளை நினைக்கணும் என்கிற எண்ணம் உங்களுக்கு இன்னும் வரலை. அது என்னிக்கு உங்களுக்கு வருகிறதோ அன்னிக்கு உங்களாலேயும் முடியும்.
“