கிறித்துவத்திலும், இஸ்லாம் மதத்திலும் நாஸ்தீகர்கள் கிடையாது. இந்து மதத்தில் மட்டும் இருக்கிறது இது ஏன்?
எல்லா மதத்திலும் சிந்தனையாளர்கள் இருக்கிறார்கள்.
சிந்தனையில் இரண்டு வகை இருக்கிறது. ஒன்று positive approach to find out the truth, Another is negative approach to find out the truth.
கிரேக்கர்கள், ரோம் காலத்திலிருந்தே ஆரம்பித்திருக்கிறது. அவர்களும் ஆராய்ச்சி செய்திருக்கிறார்கள். சாக்ரடீஸ், பிளாடோ, மாக்ஸ்முல்லர் இவர்களெல்லாம் நாத்தீர்களாகத்தான் ஆரம்பித்திருப்பார்கள். நம்மை மாதிரி மந்திரங்கள் தெரியாமல் இருந்திருக்கலாம். அரிஸ்டாட்டில், பிளாடோ இவர்களெல்லாம் மிகச் சிறந்த தத்துவஞானிகள். இவர்களெல்லாம் ஆரம்பகால தத்துவஞானிகள்.
பொதுவாக விஞ்ஞான அறிவு இருக்கிறவர்கள் ஆராய்ச்சியில் தான் தேடுவார்கள். ஒன்று எதுவெல்லாம் இருக்கின்றது என்று தேடுவது- ஆஸ்தி. எதுவாகவெல்லாம் இருக்காது என்று போவது. நாஸ்தி. எதுவாக இருக்கிறது என்று போனாலும் உண்மை கிடைக்கும். எதுவாக இல்லை என்று போனாலும் உண்மை கிடைக்கும்.
Practical exam பரீட்சைக்குப் போகும் போது ஒரு பொட்டலத்தில் மடித்து இது என்ன என்று கண்டுபிடிக்க வேண்டும் என்று கொடுத்துவிடுவார்கள். அது, ‘என்ன வேதிப்பொருள்’ என்று சொல்ல வேண்டும்.
ஒன்று அது என்ன என்று பார்த்துக் கொண்டே போவது; இன்னொன்று என்னவாகவெல்லாம் இல்லை என்று கண்டுபிடித்து அது என்ன என்று தெரிந்துகொள்வது.
வெள்ளை கலரில் ஒரு பொட்டலத்தில் இருக்கும். அது காப்பர் Œல்@பட் கிடையாது ஏனென்றால் அது நீல கலரில் இல்லை. மணம் இல்லை, அதனால் ammonia கிடையாது. இப்படி ஒவ்வொன்றாக ஒதுக்கிக் கொண்டேபோய் எதுவாகவெல்லாம் இல்லை என்று போய் தெரிந்து கொள்வது. எதுவாக இருக்கலாம். அப்படிப் போவது ஒரு முறை.
ஆன்மீகத்திலும் இந்த அணுகுமுறை என்பது எல்லா மதங்களிலும் இருந்திருக்கிறது.