கலியில் கடவுளுக்கு ஹலோ
திரு. சிவ சங்கர் பாபா அவர்களின் உரையிலிருந்து,
உன்னுடைய கர்மாக்களை எல்லாம் மீறி பல நேரங்களில் நாங்கள் நல்லது செய்கிறோம். ஆன்மீகத்தில் அப்படி செய்ய முடியும். அது உன்னுடைய நம்பிக்கையின் அடிப்படையில்தான் செய்ய முடியும். நம்பிக்கைன்னா என்ன? சாமிகிட்ட பராக் பார்க்கிற மாதிரி வரக்கூடாது. ஏதோ வந்தோம், பத்தோடு பதினொன்று பார்த்துட்டுப் போலாம்னு சொல்ற மாதிரி வரக் கூடாது. உனக்கு எது நடக்கணுமோ, அது கட்டாயம் நல்லாகிற வரைக்கும் இந்த இடத்தை விட்டு நகர மாட்டேன்னு நீ உட்கார்ந்து பாரேன். உனக்கு நடக்குதா, இல்லையா, பார்க்கலாம். ஆனால் ஜனங்க அந்த மாதிரி கிடையாது.
நான் காலையிலிருந்து சாயந்திரம் வரைக்கும் இங்கேயே இருக்கப் போறேன்னு எல்லோருக்கும் தெரியும். நான் என்ன எங்காவது ஓடிவிடுவேனா? நான் தங்குவதும் இந்த ராமராஜ்யத்தில்தானே! இரவு 11மணி வரைக்கும் இங்குதான் இருக்கப் போறேன். நான் எங்கோ சென்று விடுகிற மாதிரி ஓடி ஓடி வருவான். வந்தவுடனே அவனுக்கு வேலை ஆயிடணும்.
நான் டிரெஸ் மாற்றிவிட்டு வரலாம் என்று கார் அருகில் போய் நிற்கிறேன். ‘ஒரு அம்மா ஓடி வந்து கையைத் தட்டி, ‘கொஞ்சம் இருங்க, கால்ல விழணும்’னு சொல்றாங்க. கொஞ்சம் விட்டால், இவங்க சாமிக்கே செல் அடிச்சுடுவாங்க. கோயிலுக்கெல்லாம் போய் சாமிகிட்ட என்ன வேண்டுதல் செய்வார்கள் இவர்கள்? அப்படியே செல் அடிச்சிட்டு சொல்லிடுவார்கள் போலிருக்கிறது.-‘ஹலோ மிஸ்டர் விஷ்ணு, எனக்குக் கொஞ்சம் உடம்பு சரியில்லை, நல்லா பண்ணு!’ என்று.
நாங்கள் பேசுவது விண்ணுக்கான பாஷை. நீங்கள் அறிந்து வைத்திருப்பது மண்ணுக்கான விஷயங்கள். நாங்கள் ஏழாவது திரையைத் தாண்டிய நிலையில் இருக்கிறோம். அதனால் எங்களுடைய ஆற்றல் வேறு. ஜோதித் திறம்பாடி என்பது அதுதான். எங்களையெல்லாம்கூட இயக்கிக் கொண்டிருக்கிற ஒரு பரம்பொருள் இருக்கிறது, ஒரு பேரொளி இருக்கிறது. அவனுடைய அருளாலே, கருணையினாலே அவன் ஆற்றலைக் கொண்டு இந்த உலகத்தில இருக்கிற மக்களுக்கு நல்லது செய்து கொண்டிருக்கிறோம்.
எது முடியாதோ, அதை நடத்திக் காண்பிப்பதுதான் மகான்களின் வேலை. அந்த மாதிரி காண்பிக்கிறவர்கள் உலகத்தில் இருக்கிறார்கள். சிவசங்கர் பாபா இருக்கிறார். இன்னும் சில பேர் கண்ணுக்குத் தெரிந்தும் தெரியாமலும் இருக்கிறார்கள். அவர்களைப் பயன்படுத்திக் கொள்கிற பக்குவம்தான் இந்தக் கலியுகத்து மானுடர்களுக்கு இல்லை. அது வந்தால் இந்த உலகம் நன்றாகிவிடும்.
“
இவ்வலவு சொல்லும் நீஙகல் யென் உருவமில்லா கடவுலை வனகக்குடதோ
உண்மைதான் ஆலயங்களுக்கு வருபவர்கள் எங்கே கும்பிட வருகிறார்கள் அடுத்தவரைப் பார்த்து விமர்சனம் செய்யவும் வெட்டி பேச்சு பேசவுமே வருகிறார்கள் இவர்களுக்கு எப்படி அருள் கிடைக்கும்.