கர்மா என்கிற மேகம்……
திரு. சிவ சங்கர் பாபா அவர்களின் உரையிலிருந்து,
ஒரு பூர்ணசந்திரனை மேகம் மறைத்தால் சந்திரன் தெரியாது. நீ பூர்ணசந்திரன். உன்மேல் கர்மா என்கிற மேகம் இருக்கிறது. அந்தக் கர்மா என்கிற மேகம் விலக வேண்டும். அப்பொழுது நீ சந்திரன் என்று தெரிந்து கொள்வாய். எதுவுமே serious கிடையாது. ஆன்மீகத்தை ரொம்பக் குழப்புகிறார்கள். ஆன்மீகம் அவ்வளவு குழம்புகிற அளவிற்குக் கஷ்டமான விஷயம் கிடையாது. நீ தேடினாலும் தேடவில்லையானாலும் there is an appointed minute. அந்த நிமிடத்தில் உன்னிடத்தில் இருக்கிற கடவுள் தன்மையை நீ அறிந்து கொள்வாய். கடவுள் என்ன aeroplaneலயா வந்து இறங்கப் போகிறார்? கடவுள் என்பது ஒரு person கிடையாது. God is not a noun. It is a verb. Electricity இருக்கு இல்லையா அதுதான் கடவுள். அந்த மின்சாரத்தை use பண்ணுகிற mikeதான் ராமர். அந்த மின்சாரத்தை use பண்ணுகிற fanதான் கிருஷ்ணர். அந்த மின்சாரத்தை use பண்ணுகிற air conditionerதான் ஜீசஸ். They all are instruments. அந்த energyதான் கடவுள். அதனால்தான் அவரை doer என்றும், கர்த்தா என்றும் சொல்கிறார்கள். God is an energy and not a person.
தேடுவது உண்மையெனில் உண்மையில் அது கிடைக்கும். நாம் தேடுவது நிஜமாக ஒரு நல்ல விசயம் என்றால் அதற்கான வாய்ப்புகளை கடவுளே உருவாக்கித் தருவார், தேடுவது உண்மையெனில் உண்மையில் அது கிடைக்கும். நாம் தேடுவது நிஜமாக ஒரு நல்ல விசயம் என்றால் அதற்கான வாய்ப்புகளை கடவுளே உருவாக்கித் தருவார், but we should be very earnest about it. Very serious and sincere about our search. அப்படி இருந்தால் கண்டுபிடித்து விடலாம்.
“