வாழ்க்கைத் துணைநலம்
இந்த உலகம் சந்தோஷமாக வேண்டும் என்கிற எண்ணத்தில், அந்தக் கோவில், இந்தக் கோவில் என்றெல்லாம் போக வேண்டாம். நம் குடும்பங்களை நாம் நன்றாக வைத்துக் கொண்டால் போதும். நாம் நம் குடும்பம் வரைக்கும், ஒரு பத்து பேரோ, இருபது பேரோ அவர்களுக்கு நம்மால் முடிந்த உபகாரம் பண்ணி, அவர்களை சந்தோஷமாக வைத்துக் கொள்ள என்ன செய்ய வேண்டுமோ, அதைப் பண்ணினாலே நமக்கு சந்தோஷம் வந்து விடும். உலகத்திலே ஒவ்வொருவரும் அவரவர்களுடைய roleஐ நன்றாகப் பண்ணினால் அதுவே போதும். இப்படி ஒவ்வொரு குடும்பமும் ஆகி விட்டால், அந்த ஊரில் இருக்கிற குடும்பம் எல்லாம் நன்றாக ஆகி விடும். அப்போது உலக க்ஷேமத்திற்கு, இந்த உலகத்தினுடைய மகிழ்ச்சிக்கு, நம்முடைய contribution என்ன? நம் குடும்பத்திற்கு நாம் சந்தோஷத்தைக் கொடுப்பது! இதெல்லாம் நாம் நடந்து கொள்ள வேண்டிய முறைகள். இன்னொரு வகையில் நாம் எல்லாருமே, bundle of emotions. நம்மிடம் குறைகள் இருக்கின்றன. ஒவ்வொருத்தர் கிட்டேயும் இருக்கிறது. குறை இல்லாத மனிதனே கிடையாது. குறை ஒன்றும் இல்லாதவன் கோவிந்தன் ஒருவன்தான். அப்போ நாம் என்ன செய்ய வேண்டும்? இந்த உலகத்தில் இருக்கிற ஒவ்வொருவரிடமும் நல்ல குணமும் இருக்கிறது; கெட்ட குணமும் இருக்கிறது. நாம் அவர்களிடம் இருக்கிற நல்ல குணத்தை மாத்திரம் எடுத்துக் கொண்டு, negative qualities ஐ மறந்து விட வேண்டும். அவ்வளவுதான். நல்ல குணங்களை மாத்திரம் நினைத்து நாம் பெருமை, மகிழ்ச்சி அடைவோம். அந்த மாதிரி ஆகி விட்டால் problem இல்லை. சரி, by chance, ஏதோ சில விஷயங்களில், ஒரு misunderstanding இருக்கிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். அவர்கள் எப்படியாவது போய் விட்டுப் போகட்டும். நாம் நமக்குக் கொடுத்த பாத்திரத்தை நன்றாகப் பண்ண வேண்டும். இல்லையா?
எல்லாருமே ஆண்டவனுடைய ரூபம் என்று ஏற்று இறைவனுடைய ஒவ்வொரு பாத்திரமாக வந்திருக்கிற எல்லாரிடமும் அன்பு காட்டுவது என்பது ஒரு பாவனை. இன்னொன்று சுதர்மத்தினுடைய இரண்டாவது angle. நான் நம்பினால் நாராயணன் என்ற புத்தகத்தில் எழுதி இருக்கிறேன். (இந்த புத்தகம் சம்ரட்சணா நூலகத்தில் உள்ளது.) மற்றவர்கள் தப்பு பண்ணினால் கூட பரவாயில்லை. நாம் நம்முடைய valuesஐ விட்டுக் கொடுத்து விடக் கூடாது என்று எழுதி இருக்கிறேன். ரொம்ப அழகாக, ரொம்ப simpleஆக வாழ்க்கை என்பது என்ன என்று புரிகிற மாதிரி சொல்லி இருக்கிறேன்.
ஒரு சாமியார் கங்கையில் குளிக்கப் போனார். ஒரு தேள் தண்ணீரில் தத்தளித்துக் கொண்டிருந்தது. "ஐயோ, தேள் பாவம்" என்று சொல்லி, அதை எடுக்கப் போனார். அந்தத் தேள் அவரைக் கொட்டிவிட்டது. "ஐயோ" என்று விட்டு விட்டார். மறுபடியும் அது தண்ணீரிலேயே விழுந்துவிட்டதைப் பார்த்து, அவருக்குப் பரிதாபம் உண்டாயிற்று. அதனால் திரும்பவும் தண்ணீரிலிருந்து எடுத்து விட்டார். ஆனால் அது மறுபடியும் அவரைக் கொட்டியது. இப்படியே அவர் மாறி மாறிச் செய்து கொண்டிருந்ததைப் பார்த்துக் கொண்டிருந்த ஒரு ஆள், "சாமி உனக்கு மூளையே கிடையாதா? தேள் கொட்டும் என்று தெரிந்து, அதை ஏன் சும்மா சும்மா காப்பாற்றி, அது கொட்டுவதை வாங்கிக் கொள்கிறாயே?" என்று கேட்டான். அதற்கு அந்த சாமியார், "கொட்டுவது தேளினுடைய குணம். அதைக் காப்பாற்றுவது என்னுடைய குணம். அது அதனுடைய குணத்தைக் காட்டுகிறது. நான் என்னுடைய குணத்தைக் காட்டுகிறேன்," என்று சொன்னாராம். அந்த மாதிரி ‘மற்றவர்கள் கொட்டுகிற தேள்களாக இருந்தாலும், நாம் காப்பாற்றுகிற முனிவராக இருக்க வேண்டும்’ என்று இராமகிருஷ்ண பரமஹம்சர் சொன்னதாக நான் சொன்னேன். ‘சுதர்மம் என்றால் என்ன?’ என்று இரமீலா நாயக் எழுதிய புத்தகத்தில் இருந்து ஒரே ஒரு paragraph மட்டும் கொடுத்திருக்கிறேன்:
"சாமி, என் பெண்டாட்டி பத்ரகாளி. என் குடும்பத்தில் கொஞ்சம் கூட நிம்மதி இல்லை’ என்று சொல்கிறான் ஒரு பக்தன். நான் சொல்கிறேன், நடக்கிறது ஒரு நாடகம். அதிலே அவளுக்கு மனைவி வேஷம். உனக்கு புருஷன் வேஷம். அத்தகையவளோடு குடும்பம் நடத்துவதே உனக்கு ஒரு தவம்தான். அவளுக்கு இறைவன் ஒரு dialogue கொடுத்து இருக்கிறான். உனக்கு ஒரு dialogue கொடுக்கப்பட்டு இருக்கிறது. அவளுடைய dialogueஐ அவள் மறந்து விட்டாள். அதாவது அவளால் நல்ல மனைவியாக அன்பான மனைவியாக இருக்க முடியவில்லை. எனவே அவள் dialogue மாற்றிப் பேசுகிறாள். உனக்கு விசிற வேண்டிய நேரத்தில் துடைப்பக்கட்டையை ஓங்குகிறாள். அதற்கு நீ என்ன செய்ய வேண்டும்? உன் பாத்திரத்தை நீ விட்டுக் கொடுத்து விடாதே. ஏன் என்றால், உனக்கு கொடுத்திருக்கிற பாத்திரம், நல்ல கணவனுடைய பாத்திரம். எனவே அவள் எப்படியாவது நடித்து விட்டுப் போகட்டும். நீ உன் dialogue ஐ மாற்றி விடாதே; மறந்து விடாதே. நீ நல்ல கணவன் என்ற பாத்திரத்தில் அற்புதமாகத் திறம்பட நடி. இந்த ஆண்டுக்கான best actor award உனக்குக் கிடைத்து விடும். எதிராளியினுடைய பாத்திரத்தை வைத்து, நீ ஏன் உன்னுடைய பாத்திரத்தினுடைய குணாதிசயங்களை மாற்றிக் கொள்கிறாய்? அவள் நல்ல மனைவியாய் இல்லை என்றால் என்ன? நீ நல்ல கணவனாக இரு. உன் தகப்பன் நல்லவனாக இல்லையா? நீ நல்ல மகனாக இரு. உன் நண்பன் நல்லவனாக இல்லையா? ஆனாலும் நீ நல்ல நண்பனாக இரு. இதைத் தான் சுதர்மம் என்று நான் சொல்கிறேன்.’
இது தான் இந்த புத்தகத்தினுடைய முதல் பாரா.
சுதர்மம் என்றால் என்ன? மற்றவர்களைப் பார்த்து நாம் ஏன் கெட்டுப் போக வேண்டும்? நாம் உத்தம ஆத்மாக்கள். மேலே இருந்து ஒருத்தன் நம்மைக் கவனித்துக் கொண்டு இருக்கிறான். நாம் நன்றாக இருந்தால், அவன் நமக்கு நல்லது எல்லாம் செய்வான். நமக்கு மோட்சம் கொடுப்பான். இது தான் நம் culture. உலகத்தில் இருக்கிற விஷயங்களை வைத்து, நம்முடைய character-ஐ விட்டுக் கொடுத்து விடக்கூடாது; நம் values-ஐ விட்டுக் கொடுத்து விடக் கூடாது. இது தான் value based living. இதனால் என்ன என்கிறாயா? நான் என் வாழ்க்கையில் அனுபவிக்காதது எதையும் சொன்னதில்லை.
இராமகிருஷ்ண பரமஹம்சரிடம் ஒரு அம்மா தன் பையனைக் கூப்பிட்டுக் கொண்டு போனார்களாம். அந்த அம்மா, "சாமி, சாமி, இந்தப் பையன் சும்மா சும்மா மிட்டாய் தின்கிறான், கொஞ்சம் புத்திமதி சொல்லு சாமி", என்று சொன்னாளாம். அவர் அந்த இரண்டு பேரையும் ஒரு வாரம் கழித்து திரும்ப வரச் சொன்னாராம். ஒரு வாரம் கழித்துப் போன போது, "படவா, இனிமே மிட்டாய் எல்லாம் தின்னாதே", என்றாராம். அதற்கு அந்த அம்மா, "இதை இப்போ சொல்வதற்கு ஒரு வாரம் முன்னாலேயே சொல்லி இருக்கலாமே சாமி," என்று சொன்னாளாம். அதற்கு அவர், "நானே ஒரு வாரம் முன்னால் வரை மிட்டாய் தின்று கொண்டிருந்தேன் அம்மா," என்றாராம்.
அது மாதிரி என் வாழ்க்கையில் நான் அனுபவிக்காத எதையும் உபதேசிப்பது இல்லை. இல்லாவிட்டால் என் உபதேசம் வெறும் டிராமா டயலாக் மாதிரி ஆகிவிடும். என் பூர்வாசிரம வாழ்க்கையில் நான் ஒரு நல்ல மகனாக இருந்திருக்கிறேன். என் அப்பா சாதாரண ஸ்கூல் ஹெட்மாஸ்டர். நான் தலையெடுத்து என் மூன்று தங்கைகளுக்குக் கல்யாணம் செய்து கொடுத்திருக்கிறேன். பழைய வீட்டை இடித்து, என் அப்பாவுக்கு மூன்று அடுக்கு மாடி வீடு கட்டிக் கொடுத்திருக்கிறேன். பன்னிரெண்டு ஏக்கரா நிலம் வாங்கிக் கொடுத்திருக்கிறேன். மனைவிக்கு நல்ல கணவனாக இருந்திருக்கிறேன். என் பெண்ணுக்கும், பிள்ளைக்கும் நல்ல தகப்பனாக இருந்திருக்கிறேன். நன்றாகப் படிக்க வைத்திருக்கிறேன். அவர்களை எல்லாம் நன்றாக வாழ்க்கையில் settle பண்ணி விட்டேன். என்னுடைய ரோலை விட்டுக் கொடுத்ததே இல்லை. என் கடமைகளை நான் சரிவரச் செய்திருக்கிறேன்.
வாழ்க்கையில் அனுபவங்கள் வருகின்றன. இந்த உலகியல் நுகர்வுகள், இந்த உலகத்தில் நமக்குக் கிடைக்கிற வெவ்வேறு அனுபவங்கள்தான் நம்மை ஞானிகளாக மாற்றி, இந்த உலகத்திற்கு அப்பால் வேறு ஏதாவது இருக்கிறதா என்ற உயர் நோக்கில் கொண்டு சென்று சேர்க்கின்றன. அதனால் இந்த உலகத்தில் நடக்கிற எல்லா விஷயங்களும், திருமணம், பதவி, சொத்து, சுகம் எல்லாம்கூட passing phases தான். இது எதுவும் நிஜமல்ல.
ஏன் பாபா ‘இயல்பாக வாழுங்கள்’ என்று சொல்கிறார் என்றால் இதெல்லாம் ஏதோ ஒரு பிறவியில் இருந்த பந்தங்கள். நம் அனைவருக்கும் ஜென்ம ஜென்மங்களாக சில வாசனைகள் பாக்கி இருக்கின்றன. அதையெல்லாம் fulfill பண்ணிவிட வேண்டும். அதற்கப்புறம் தான் அடுத்த நிலை வரும். கடவுள் என்பது Ultimate Level. அதற்கு முன்னால் all that is good has to be passed through and experienced. இது ஒரு evolution. ஒரு விதை போட்டால் அது பிஞ்சாகி, காயாகி, கனிகிறது. எடுத்தவுடனே ஒன்றும் பழம் வந்துவிடுவது இல்லை. எனவே வாழ்க்கையில் பல்வேறு அனுபவங்கள் எல்லாம் வரும். அதற்கு இந்த உறவுகள் தேவைப்படுகிறது.
எல்லாம் தெரிந்த ஆதிசங்கரரிடம் ஒரு கேள்வி கேட்கிறார்கள். ‘வாழ்க்கையின் சாரம் என்ன?’ என்று. அவர் ஒரே வரியில் சொல்கிறார், "வாழ்க்கைதான் அதன் சாரம்". வாழ்க்கையில் வரும் அனுபவங்கள்தான் அதன் சாரம்; இந்த அனுபவங்கள் எல்லாம் நிறைவடைந்தாலன்றி ஆண்டவனை நோக்கி அடுத்த அடி உங்களுக்கு வராது. நாம் மனிதர்களாய் வாழ்வதற்கு உலகத்திற்கு வரவில்லை, தெய்வத்தைச் சென்று சேர வேண்டும் என்ற எண்ணம் முக்கியம். அந்த ஆண்டவனை நோக்கிச் செல்கிற பாதை ஆண்களுக்கும் இருக்கிறது, பெண்களுக்கும் இருக்கிறது. வழிப்போக்கர்களைப் போல, ஒருவருக்கொருவர் ஒத்தாசையாக, அனுசரணையாக, "நீ புளிசாதம் வைத்திருக்கிறாயா, நான் இட்லி வைத்திருக்கிறேன்" என்று கலந்து சாப்பிட்டுக் கொண்டு, கடவுளைப் பற்றிப் பேசிக்கொண்டு, இயல்பாக இந்த உலகத்தில் வாழ்ந்து, இல்வாழ்க்கையையே ஒரு தவமாக, இறைவனை நோக்கிய பயணத்தின் ஒரு அங்கமாக மாற்றிக் கொள்வதுதான் பாபா போதித்துக் கொண்டிருக்கக் கூடிய வாழ்க்கைத் துணைநலம் என்ற ஒரு தத்துவம். ‘எதையும் விட்டு ஓடாதே, எதையும் விட்டு ஒதுங்காதே’ என்பதும் ‘இருந்தபடி இருங்கோள் வெகுளியை விடுங்கோள்’ என்பதும் சிவசங்கர் பாபா தன் வாழ்க்கையில் ஏற்றுக் கொண்டு மற்றவர்களுக்குப் போதித்து வருகின்ற தத்துவங்கள்.
உலகியல் கடமைகளை சிறப்புற செய்ததனால் தான் இறைவன் தன் பணிக்கு என்னை முழுநேர பணியாளனாக்கிக் கொண்டான். இது தான் தக்க தருணத்தில் தடுத்தடிமைக் கொண்டு பழ வினை அறுத்து தன்னையே நினைந்துருகத் தரும் அநுபூதி.