யத்தனம்..பிரயத்தனம்…….It’s not that some people have will power and some don’t. It’s that some people are ready to change and other are not.
திரு. சிவ சங்கர் பாபா அவர்களின் உரையிலிருந்து,
|
|
|
ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றி தாழாது உஞற்று பவர். எவ்வளவுதான் மோசமான சூழ்நிலையாக இருந்தாலும், அதை யத்தனம், பிரயத்தனம், தெய்வத்தனம் – முயற்சி, விடாமுயற்சி, தெய்வத்தினுடைய அனுக்கிரகம் என்று மாற்றிக் கொள்ள முடியும். மனசுக்குள் தோற்றுப் போகக் கூடாது. East Germany and West Germany ஒரு காலத்தில் பிரிந்திருந்தது. இரண்டிற்கும் நடுவில் ஒரு சுவர் இருந்தது. அதை பெர்லின்சுவர் என்று சொல்வார்கள். East Germanyயில் கம்யூனிஸம். அதனால் பொருளாதாரத்தில் நலிவுற்றிருந்தது. West Germany ரொம்ப வளப்பமாக இருந்தது. அதனால் East Germanyல் இருக்கிற ஒவ்வொருத்தருடைய கனவும் என்னவாகயிருந்தது என்றால், எப்படியாவது அந்த சுவரை ஏறிக்குதித்து West Germanyக்குப் போயிட்டால் நாம் பணக்காரனாக, வசதியாக ஆகிவிடலாம். அவங்க தப்பித்து சுவர் ஏறிக் குதித்து ஓடும்போது எல்லையைத் தாண்டுகிறார்கள் என்று போலீஸ்காரன் துப்பாக்கியால் சுடுவான். ஒரு ஆள் அப்படி தப்பித்து ஓடுகிறான். பின்னாடி பார்த்தால் போலீஸ்காரன் சுடுவான்னு தெரியும். எப்படியோத் தப்பித்து சுவர் ஏறிக் குதித்து விடுகிறான். அங்கு ஒரு சைக்கிள் இருக்கிறது. அந்த சைக்கிளை எடுத்துக்கிட்டு வேகமாக பெடல் போட்டுக்கிட்டு இரண்டு மைல் போய் விடுகிறான். இரண்டு மைல் போனவுடனேதான் அவனுக்குத் தெரிகிறது தனக்கு சைக்கிள் ஓட்டத் தெரியாது என்கிற விசயம். அந்த நினைப்பு வந்தவுடனே சைக்கிளிலிருந்து தொப்புன்னு விழுந்திட்டான். நிர்பந்தங்கள் ஒரு மனிதனுக்குள்ளே புதைந்திருக்கக்கூடிய ஆற்றலை வெளிக்கொண்டு வரும். Necessity is the father or mother of invention என்று சொல்கிறார்களே அந்த மாதிரி வரும்.
“