நீ உலகத்திலே இருக்கிற மனிதனை நண்பனாக நினைத்தாய் என்றால் அவனுக்கு status வந்தவுடனே உன்னை insult பண்ணுவான். அதனாலே நீ அவமானப்படணும். All relationships are perishable. எல்லாவற்றிலும் ஒரு எதிர்பார்ப்பு இருக்கும். அவங்களுக்கு சாதகமாகிற வரைக்கும் தான் எல்லாம்.
‘என் மனைவி ரொம்ப நல்லவள்’ என்று யாராவது சொல்கிறான்னா, அவனுக்கு வேண்டிய மாதிரி இவள் நடந்து கொள்கிறாள் என்பதுதான் நிஜம். அவளே கொஞ்சம் ஏறுக்கு மாறாக இருந்தால் அப்படிச் சொல்வானா? ‘அவ பத்ரகாளிங்க’.
‘என் வாழ்க்கையே அவளால்தான் கெட்டுப் போச்சு’ னு சொல்லுவான். இந்த உலகத்திலே ஒருத்தரை நல்லவன்னு சொல்றதுக்கு கூட என்ன காரணம் தெரியுமா? சுயநலம். தனக்கு வேண்டிய மாதிரி யார் நடந்தாலும் அவங்க நல்லவங்க. தனக்குப் பிடிக்காத மாதிரி யார் நடந்தாலும் அவங்க கெட்டவங்க. அப்படி இருந்தால் அது நிஜமான relationship-ஆ? அதனால் நண்பர்கள் தினம் என்று யாராவது கொண்டாடுவதாக இருந்தால் இந்த மனிதர்களை friend பிடிக்கவே பிடிக்காதீங்க. கடவுளையே உங்கள் நண்பனாகவும் வழிகாட்டியாகவும் வைத்துக் கொள்ளுங்கள்.