வாருங்கள்! வலிமையான இந்தியாவிற்கு வழி கோலுங்கள்!
நான் பல தேசங்கள் சுற்றியிருக்கிறேன். எனக்குத் தெரியும். ஒரு அமெரிக்கன் அவன் நாட்டைப்பற்றி கேவலமாகப் பேச மாட்டான். இந்தியாக்காரன் தன்னை இந்தியன் என்று சொல்லிக்கொள்வதை கேவலமாக நினைக்கிற தேசம். இங்கிருந்து நேற்றுதான் போய் வேலைக்கு சேர்ந்திருப்பான். இவன் இந்தியாவை திட்டிக்கொண்டே இருப்பான். அதை பெருமையாக நினைக்கிற புத்தி. தன் நாட்டை தாழ்த்திக்கொள்வது ஒரு பெருமையா? தன் தாயை தப்பு சொல்லலாமா? இந்தியாவை முன்னுக்கு கொண்டு வருவதற்கு நீ என்ன செய்தாய்? ஒன்றும் செய்யவில்லை. இந்தியா மகத்தான தேசம். நம் தலைமை சரியில்லை. நல்ல தலைமை நம்மிடமிருந்து வரவேண்டும் என்றால் நாம் அதற்கு தயார் செய்து கொள்ள வேண்டும்.
நான் உனக்கு ஆன்மீகமே சொல்லவில்லை. வலிமையான இந்தியாவை உருவாக்குவதற்கு வழி கற்றுக் கொடுத்திருக்கிறேன். அந்த திசையில் நீங்கள் சிந்திக்கவேண்டும். இந்தியா நன்றாக இருந்தால் நாம் நன்றாக இருக்கப் போகிறோம். எல்லோரும் நம்மைப் பார்த்து மதிக்கிற மாதிரி எந்தக் காலத்திலும் இருக்க வேண்டும்.
அங்கு படித்துவிட்டு, க்ரீன் கார்டு அப்ளை செய்துவிட்டு, ‘வருமா வராதா?’ன்னு ஜோசியம் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள். எந்த வளம் இல்லை இந்தத் திருநாட்டில்? We should be proud. ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில்? நம்மிடம் இருக்கிற அறிவு, நம்மிடம் இருக்கிற ஆற்றல் அவர்களிடம் இல்லை.
இன்றைக்கு கூட அமெரிக்காகாரன் என்ன சொல்கிறான்? ‘இந்தியர்களுக்கு 65,000 விசா பற்றாது. 1,75,000 பேர் அப்ளை செய்திருக்கிறார்கள். எல்லாருக்கும் விசா கொடு. அப்போதுதான் நாம் வசதியாக இருக்க முடியும்’ என்கிறான். இன்றைக்கு நம் அறிவை வைத்து நாம் ஒரு ரூபாய் கொடுத்தால் அவன் ரூ.1000 சம்பாதித்துக் கொண்டிருக்கிறான். நாம் அந்த ஆயிரம் ரூபாயை நம் நாட்டிற்கு சம்பாதிக்க முடியாதா? அதற்குள்ள திட்டங்கள் தேவை. அரசியல் ஆளுமை தேவை. நமக்குத் தெளிவான சிந்தனைகள் வேண்டும். அது இளைஞர்களுக்கு வந்து கொண்டிருக்கிறது .
யாரோ ஒருத்தனுக்கு ஒரு கோடி ரூபாயில் வெளிநாட்டில் வேலை கிடைத்தது. ‘இன்றைக்கு இந்தியாவில் ஒரு லட்சம் கிடைத்தால் போதும். அமெரிக்காவின் ஒரு கோடி எனக்கு வேண்டாம்’ என்று சொல்லிவிட்டான். நம் ஊரில் இட்லி 3 ரூபாய். வீட்டு வாடகை 3000 ரூபாய். நமக்கு 20 லட்சம் பெரிய விஷயம். இதற்கு எதற்கு ஒரு கோடி சம்பாதித்து அமெரிக்காவிற்கு இன்கம்டாக்ஸ் 40% கட்டுவது? அது போக நீ செய்கிற செலவு எல்லாம் அவனுக்குத்தான் போகப் போகிறது. ஒரு பொருளை பத்து ரூபாய்க்கு விற்பான். பேரம் கிடையாது. நீ சம்பாதித்து அந்த நாட்டை பணக்காரனாக்குகிறாய். இதெல்லாம் மாறணும் என்றால் நான் சொன்னது எல்லாம் வரணும். அப்போது நாம் நிமிர்ந்து நிற்போம்.
இந்தியா என்பது நீயும் நானும். நாம் எல்லோரும் சேர்ந்தால் இந்தியாவை எங்கோ கொண்டு போய்விடலாம். We will be always proud. எல்லோரும் அமர நிலையை எய்தும் நிலையை இந்தியா உலகிற்கு அளிக்கும், ஆம் ; இந்தியா உலகிற்கு அளிக்கும், பாரதி சொன்னான். வரும்! கூடிய சீக்கிரம் வரும்! இந்தியர்களாகிய நாம் நம்மை இன்னும் பக்குவப்படுத்திக் கொள்ள வேண்டும். பக்குவப்படுத்துவது என்றால் டைம் வேஸ்ட் பண்ணுவதை விட வேண்டும். Work discipline வேண்டும். அது ரொம்ப முக்கியம். நம்மிடம் அது கிடையாது. பாதி நேரம் டீ குடிப்பது. லன்ச் அவரில் மாடிப்படியில் சீட்டு விளையாடுவது. எட்டு மணி நேரத்திற்கு சம்பளம் வாங்குகிறாய் அல்லவா! எட்டு மணிநேரம் வேலை செய். அதற்குப் பிறகு முதலாளியை காக்கா பிடிக்காதே. வந்து கொண்டே இரு. கழுத்தை சீவுகிறானா என்று பார்ப்போம். ஆனால் அந்த எட்டு மணிநேரம் வேஸ்ட் பண்ணாதே. நம்முடைய work culture, work pattern எல்லாம் மாறவேண்டும். மாறுகிற போது எல்லாம் நல்லா வரும். அதற்கு நீங்கள் உங்களை ஆயத்தப்படுத்திக்கொள்ளுங்கள். உங்களால் முடியலை என்றாலும் உங்களுடைய இளைய தலைமுறை அதற்கு ரெடியாகணும். இதுதான் என்னுடைய சிந்தனை.”
இட் இச் சொ கோட் அன்ட் ரெலெவன்ட்!