வாருங்கள்! வலிமையான இந்தியாவிற்கு வழி கோலுங்கள்!
தேவை தெய்வம்
தெய்வம் என்று ஒரு வஸ்து இருக்கிறது. அது நம் அப்பா அம்மாவை விட நன்றாகப் பார்த்துக்கொள்ளும். அதைப் பார்த்து பயப்படாதே. அது உன்னை காப்பாற்றும். அதனால் நம்பிக்கையோடு இந்த உலகத்தில் உலா வந்து கொண்டிரு. எதைப்பற்றியும் பயப்படாதே. Nothing can go wrong with your life. You have to conquer time and space because they are all imaginary. இந்த வாழ்க்கையில் ஏதாவது சாதிக்கணும். இந்த உலகம் பூரா கடவுள். இந்த உலகத்தில் இருக்கிற எல்லாரும் நமக்கு வேண்டியவர்கள். அதனால் கடவுளுக்கு நாம் வேலை செய்யணும் என்றால் atleast நாம் சந்தோஷமாகி விடவேண்டும். முடிந்தால் குடும்பத்தில் நாலு பேரை சந்தோஷமாக வைத்துக்கொள்ள வேண்டும். இன்னும் முடிந்தால் ஊரை நல்லா வச்சுக்கலாம். நாட்டை நல்லா வச்சுக்கலாம். உலகத்திற்கு ஏதாவது நாம் contribute பண்ணலாம். contribution என்பது பணம் இல்லை. எண்ணம். உயர்ந்த எண்ணங்கள், உயர்ந்த வாழ்க்கைத் தத்துவங்கள். இதற்கு பணமே தேவையில்லை. பணம் தேவையில்லை என்பதற்கு சிவசங்கர் பாபாதான் உதாரணம்.
நம் உடலில் இருக்கும் பஞ்ச பூதங்களை வைத்து, இனியதையே ஏற்று, இன்னாததை விட்டு விட வேண்டும். அப்போது சான்றோர் போற்றும் அந்தக் கனியை சுவைக்கிற பக்குவம் வரும்.
மாயனை அடைய தடை மாயை
நமக்குள் இருக்கும் ஜோதியை நாம் உணராமல் இருப்பதற்கு தடை மாயைதான். மாயை என்றால் என்ன? இந்த உலகத்திலே இதற்கு முன்னே நாம் எத்தனையோ ஜென்மங்கள் எடுத்து இருக்கிறோம். அதிலே எத்தனையோ ஆசைகளையும், பாசங்களையும் வளர்த்துக் கொண்டு வருகிறோம். பந்தங்களையும் சொந்தங்களையும் வளர்த்துக் கொள்கிறோம்.
எப்படி கடலிலே இருக்கிற கப்பல், நங்கூரம் பாய்ச்சப்பட்ட நிலையிலே இருக்கிறதோ அப்படி நாம் இருக்கிறோம். கடலிலே கப்பல் இருக்கிறது. நங்கூரம் போட்டு இருந்தால் கப்பல் move ஆகாது. நங்கூரத்தை எடுத்து விட்டால், அது அப்படியே 2000, 3000 மைல் போய் கொண்டே இருக்கும். அந்த மாதிரி இந்த பவசாகரத்திலே, வாழ்க்கை என்கிற கடலிலே, நம்முடைய ஆசாபாசங்கள், சொந்த பந்தங்கள், attachment என்று சொல்லக்கூடிய நங்கூரங்களை நாமே போட்டுக் கொள்கிறோம்.
இதெல்லாம் நாமே போட்டுக் கொண்டது தான். பிறவிப் பெருங்கடல் நீந்துவர்; நீந்தார் இறைவன் அடிசேரா தார் என்கிறார் திருவள்ளுவர். அந்த மாதிரி நாம் இந்த ஆசாபாசங்களிலே இருந்து, சொந்த பந்தங்களிலே இருந்து, attachment களிலே இருந்து நம்மை விடுவித்துக் கொள்கிற போது, நம்மால் இந்த பவசாகரத்தை அழகாகக் கடக்க முடியும்.
“