மௌனம்
மௌனம் என்பது எல்லா வகையான ஆன்மப் பயிற்சிகளின் ultimate result. எண்ணங்கள் அற்ற நிலை. அந்த எண்ணங்களற்ற நிலையை நம் சாஸ்திரத்தில் சொல்லில் விளங்கா நிர்வாணம் என்கிறார்கள். வடமொழியில் வாசாமகோசரம் என்று சொல்கிறார்கள். எந்தவொரு வாக்கு, சொல், செயல் எதுவுமில்லாத ஒரு சமாதி, இறந்து போன நிலை ஒன்றும் தெரியாதுங்கறாங்களே அந்த மாதிரி நிலை. அதுதான் எண்ணங்களற்ற நிலை.
உடம்பு மேல துணி எடுத்ததும் உடம்புக்கு நிர்வாணம் வந்தது. அந்த மாதிரி mind-ல் எண்ணங்கள் இல்லாமல் போச்சுன்னா அது எண்ணங்களற்ற நிர்வாணம். நல்லது, கெட்டது, சுகம், சோகம் எந்த எண்ணமும் இல்லாத நிலை இருக்கு. அதுதான் நிர்வாணம். அதுதான் மௌனம்.
ஞான ஸ்ருஷ்டி
ஞான ஸ்ருஷ்டி என்று ஒன்று இல்லை. ஸ்ருஷ்டி என்று தனியாக இருக்கு. அதுதான் நாம் செய்யறது. அதாவது கல்யாணம் பண்ணி குழந்தை பெத்துக்கறோம் இல்லை அது. ஒரு பெயிண்டர் இருக்கான். அவன் mind-ல் இருக்கிற ஒரு விஷயத்தை chart paper-லேயோ, அட்டையிலோ வரையறான். ஒரு சிற்பி ஒரு சிலையை வெளியே கொண்டுவரான். இது ஸ்ருஷ்டி. யாருக்கு எந்த வகையான ஞானம் இருக்கோ அதோட வெளிப்பாடு எதுவோ அதுதான் ஸ்ருஷ்டி.
ரெய்க்கி பயிற்சி
ரெய்க்கி பயிற்சி என்பது ஒரு உடலில் ஓடிக் கொண்டிருக்கிற மின் காந்த அலைகளை வைத்துக் கொண்டு, உதாரணத்துக்கு நாம் இரண்டு பேரும் காபி குடிக்கணும். என் டம்ளர்ல நிறைய இருக்கு. உன் டம்ளர்ல கம்மியா இருக்கு. நம் இரண்டு பேர்க்கும் லவ் என்று வை. இந்தா எடுத்துக்கோ என்று கொஞ்சம் கொடுக்கறேன். அந்த மாதிரி சிலபேர் கிட்ட கொஞ்சம் சக்தி ஜாஸ்தி இருக்கு. சிலபேர்கிட்ட சக்தி கம்மியா இருக்கு. சக்தி ஜாஸ்தியா இருக்கிறவன் தன்கிட்ட excesss-ஆக இருக்கிற சக்தியை இன்னும் யாருக்காவது கொடுக்கறது. இந்த மாதிரி டிரெயினிங்தான் ரெய்க்கி என்பது.
யாரிடத்தில் அந்த மின்காந்த அலைகள் அதிகமாக இருக்கின்றனவோ அவர்கள் அதைவிட குறைந்த நிலையில் இருப்பவர்களுக்கு பகிர்ந்து கொடுப்பது. அதுதான் ரெய்க்கியோட philosophy. பகிர்ந்துக் கொடுக்க வழிமுறைகள் வைத்திருக்கிறார்கள். இவர்கள் கண்ணை மூடிண்டு சூரியனை நினைச்சுக்கறாங்க. சூரியதேவனே, இந்த ஆளுக்கு உடம்பு சரியில்லை. அவருக்கு கால் வலிக்குது. நான் இப்போ உன்னை நினைச்சுட்டு, உடலில் இருக்கிற உன் ஆற்றலை அவருக்கு கொஞ்சம் pass பண்ணப்போறேன்னு pray பண்ணிட்டு அந்த சுயநலமற்ற சிந்தனையோடு நாம் அவர்களைத் தொடுகிறபோது நம் உடலில் உள்ள மின்காந்த ஆற்றல்கள் அவர்களை சமனப்படுத்துகின்றது. அவங்ககிட்ட கம்மியா இருக்கிறதை equal பண்றோம். இதுதான் ரெய்க்கி பயிற்சியினுடைய philosophy.
“
அய்யா,
மிகவும் இலகுவான விளக்கம் தருகிறீர்கள் நன்றி.
ரெய்கி பற்றி இன்னும் விரிவாக விளக்குவீர்களா