பூரண பிரம்மம் என்று நம்முடைய பெருமாளுக்கு பெயர் வைத்து இருக்கிறீர்களே? அந்த பிரம்மம் என்பதற்கு என்ன அர்த்தம்?
What ever is in creation is Brahmam அதனாலே இந்த உலகத்திலே இருக்கிற எல்லா பிரம்ம தத்துவங்களும், not only human, ஈ எறும்பு முதலாகிய ஜீவராசிகள் எல்லாம் சேர்ந்தது எதுவோ, அது தான் பூரண பிரம்மம். Whatever created anything in the world here and beyond, in these thousands of years is Brahmam. So, பூரண பிரம்மம் என்றால், இதிலே இல்லாதது எதுவும் இல்லை என்று அர்த்தம். அதனாலே தான் இதிலே பார்த்தீர்கள் என்றால், தெரியும். சிவன் இருப்பார், சக்தி இருப்பாள், பத்து அவதாரம் இருக்கும். இதிலேயே எல்லாமே இருக்கிறது. பத்தும் இது தான். வரக் கூடிய யுகத்திலே பதினொன்றாவதாக ஏதாவது ஒன்று இருந்தால், அதுவும் இதிலேயே இருக்கிறது. பத்து என்றால் தசம். தசாவதாரமும் இது தான். அடுத்த யுகம் என்று ஒன்று இருந்து, அதிலே இன்னும் ஏதாவது ஒன்று வரும் என்றால், அந்த இன்னொன்றும் இது தான்.”