பாதநமஸ்காரம்
பாதநமஸ்காரம் என்பது என்ன? நாம் யார் காலிலோ விழுந்து வணங்குவது அல்ல பாதநமஸ்காரம். கடவுள் கொடுத்திருக்கக் கூடிய பாதத்தை நீ பகவானுடைய தொண்டிற்கு உபயோகப்படுத்தினால் நீ பாதநமஸ்காரம் செய்கிறாய் என்று அர்த்தம். நீ சுவாமி காலில் விழுந்து சுவாமிக்கு என்ன ஆகணும்? உலகத்தில் சுவாமியோட பாதம் இல்லாத இடமே இல்லை. உலகம் பூரா சுவாமியோட பாதம்தான் இருக்கு. உலகம் பூரா சுவாமியோட கண் கை தான் இருக்கிறது. ‘எங்கணும் நின் திருவதனங்கள்’. எனவே சாமிக்கு நீ நமஸ்காரம் பண்ணி ஒன்றும் ஆகப்போவதில்லை. சாமி உனக்குக் கொடுத்திருக்கிறார் அல்லவா அந்தக் கண்ணை வைத்துக் கொண்டு கடவுளைப் பார்! காதை வைத்துக்கொண்டு கடவுளுடைய நல்ல வாசகங்களை கேள்! காலை வைத்துக் கொண்டு நிறைய ஷேத்திராடனம் போ. பாதயாத்திரைக்குப் போ தீர்த்த யாத்திரைகள் செய். இதுதான் பாதநமஸ்காரம் என்று சொல்வது. பாதத்தாலே செய்யக்கூடிய நமஸ்காரம். கடவுள் கொடுத்திருக்கிற பாதத்தை நாம் அவனுக்கு வழிபாடாக பயன்படுத்துகிற நன்றிக் கடன். அதுதான் உண்மையான பாதநமஸ்காரம். காலில் விழுவது அல்ல.
பயாக அக்னி
தன்னிடத்தில் எவ்வளவு வலிமை இருக்கிறது, எவ்வளவு தவம் இருக்கிறது என்று எல்லோருக்கும் உணர்த்திவிட்டு ‘இது எதுவுமே எனக்கு வேண்டாம்’ என்று துச்சமாக உதைத்துவிட்டு, இந்த உலகம் நன்றாக இருக்க வேண்டும் என்று சொல்லி 12 வயது பாலகன் அடர்ந்த காட்டிற்கு சென்று தவம் செய்கிற போது அவன் ஐயப்பனாக மாறுகிறான். எத்தனையோ பந்தளராஜாக்கள் வந்தார்கள், போனார்கள். ஆனால் ஐயப்பன் எதற்கும் ஆசைப்படவே இல்லை. அவர் எதற்கு ஆசைப்பட்டார் என்று சொன்னால் போக்கும் வரவும் இல்லா புண்ணியனாக மாறுவதற்காக. வருவதும் இல்லை. போவதும் இல்லை. ‘யாதெனின் யாதெனின் நீங்கியான் நோதல் அதனின் அதனின் இலன்’. எதெல்லாம் இருக்கிறதோ அதெல்லாம் விட்டுவிட்டு ஜம்மென்று காட்டிலே போய் இந்த உலகம் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக சொல்லி ஒரு யோக நெருப்பிலே தன்னைப் புடம் போட்டுக் கொண்டதனாலே அவன் ஐயப்பனாக மாறினான். அப்படி நீ கூட மாற முடியும். நீ மாற முடியும் என்பதை நான் உனக்கு அழுத்தம் திருத்தமாக ஏன் சொல்லுகிறேன் என்றால் நான் மாறிவிட்டேன். இந்த உணர்வு எனக்கு வந்தபோது நானும் கூட அதை பரீட்சித்துப் பார்த்தேன். என்னுடைய வாழ்க்கையிலே கடைப்பிடித்தேன். தேர்ந்தேன். தெளிந்தேன் இன்றைக்கு நான் அதுவாகவே மாறிவிட்டேன். அப்போது என்னாலே மாறமுடிந்தால் ஏன் உன்னாலே மாற முடியாது. எவ்வளவு பெரிய விஷயம் நான் உனக்கு சொல்லிக் கொண்டிருப்பது! I am a glorified example before you. அந்த ஐயப்பன் காட்டிலே போய் உட்கார்ந்து கொண்டு தவம் செய்து கொண்டிருக்கிறான். ஒரு யோக அக்னியாக இருந்து கொண்டிருக்கிறான். அவன் காட்டிலே இருந்து கொண்டு செய்கிற விஷயத்தை நான் நாட்டில் இருந்து கொண்டு செய்து கொண்டு இருக்கிறேன்.
“