இந்த உலகத்திலே தனியாக பிரம்மா என்று ஒன்று கிடையவே கிடையாது. நீங்கள்ளாம் கல்யாணம் செய்துக் கொண்டு குழந்தைப் பெற்றுக் கொள்ளுகிறபோது நீங்கதான் பிரம்மா. நிஜம் அதுதான். ஆஜ்மீரிலே பிரம்மா கோவில் என்ற ஒன்று இருக்கு. அந்தக் கோவிலிலே போய்- 4 தலை இருக்கும் அப்படின்னு பார்த்தால், அங்கே ஒரு கண்ணாடி இருக்கும். "அந்த கண்ணாடியிலே உங்களைப் பாருங்க"ன்னு சொல்லுவாங்க. பார்த்தவுடனே "அதுதான் பிரம்மா" அப்படின்னு சொல்லுவாங்க. அந்தக் கண்ணாடியிலே யார் பார்க்கிறது? நீ தான் பார்க்கிறாய். அதிலே யார் தெரியறது? நீ தான் தெரிகிறாய். பிரம்மா என்பது நீ தான். இந்த உலகத்திலே இருக்கிற எல்லா படைப்புக்களும் பிரம்மம்.
நம்முடைய பிரம்ம சரீரத்திலே வலது பக்கத்திலும் இடது பக்கத்திலும் இருப்பதுதான் சிவசக்தி, சங்கர நாராயண சொரூபம். இரண்டு மூச்சுக்காற்றும்- சங்கர, நாராயணன்- வலது சுவாசத்தை இடதுபுறமாகவும் (சங்கரன்), இடது சுவாசத்தை வலப்புறமாகவும் (நாராயணன்) யாரெல்லாம் மாற்றிக் கொள்கிறார்களோ அவர்கள் எல்லாம் தங்களிடம் உள்ள இறைத்தன்மையை அறிந்து கொண்டவர்கள் என்று அர்த்தம். இந்த உலகத்தில் நீங்கள் ஞானத்தை அடைவதும், தெய்வத்தன்மையை அடைவதும் உங்களுடைய பிரம்மமாகிய சரீரம்தான். ஊனுடம்பு ஆலயம். உங்களுடைய உடம்பு தான் ஆலயம். அதற்குள்ளே ஓடிக் கொண்டிருக்கிற சங்கர நாராயண என்ற இரண்டு மூச்சுக் காற்றை யார் மாற்றிக் கொண்டார்களோ அவர்கள் அஷ்டாங்க யோகத்தை அடைந்துவிட்டார்கள் என்று அர்த்தம்.
கச்ச பகவான்? என்று ஆதிசங்கரர் கேள்வி கேட்கிறார். பகவான் என்றால் என்ன? என்று. சங்கர நாராயண ஆத்ம ஏவ."சங்கரனாகவும் நாராயணனாகவும் இருக்கிற ஆத்மாவுக்கு யார் சொந்தக்காரனோ அவன் தான் பகவான்" என்று சொல்கிறார். சங்கரன் நம் உடம்பில் தான் இருக்கிறான். நாராயணன் நம்ப உடம்பில் தான் இருக்கிறான். ஆண்களுக்கு வலது பக்கத்தில் சங்கரன். இடது பக்கத்தில் நாராயணன். பெண்களுக்கு அது reverseலே இருக்கும். இந்த உலகத்திலே இருக்கிற எல்லாமே பிரம்மம்தான். அதனாலே தான் பிரம்மாவிற்கு கோவில் இல்லை என்று சொல்வது. நீ தான் பிரம்மம். இன்னும் தனியாக எங்கே கோவில் கட்டுவது? கண்ணாடியிலே உன்னையே பார்த்துக்கோ. Everyone is Brahmam. நாம் ஒரு ஆபீசுக்குப் போகிறோம். சம்பாதித்து நாலு பேருக்கு சோறு போடுகிறோம். நாம் தான் விஷ்ணு. நாம் காரையோ, ஸ்கூட்டரையோ ஏற்றி யாரையோ சாகடிக்கிறபோது நாம் தான் சங்கரன். இந்த உலகத்திலே படைத்தல், காத்தல், அழித்தல் இந்த மூன்றையுமே நாம்தான் செய்கிறோம். மனிதனை வைத்துக் கொண்டுதான் ஆண்டவன் என்ற அருள்பிரவாகத்தினுடைய அலகிலா விளையாட்டு நடந்து கொண்டிருக்கிறது. ஆறாதார சக்கரங்கள் என்று சொல்கிறோம். தினமும் post mortem பண்ணி ஆயிரம் பிணங்களை அறுக்கிறார்கள் எங்கேயாவது ஆறு சக்கரம் கண்ணிலே மாட்டியிருக்கிறதா இதுவரைக்கும். So, we are talking of luminous body. உள்ளே இருக்கிற ஒளிவட்டங்களைப் பற்றி பேசுகிறோம். ஒளிவட்டம் என்பது உள்வட்டம். நம் உடல் என்பது வெளிவட்டம். பலா தோல் இருக்கிறது. அதற்குள்ளே பலாப்பழம் இருக்கிறது. பலாச்சுளை என்பது அந்த தோலை உரித்து அதற்குள்ளே இருக்கிற சக்கைகளை எல்லாம் பிரித்துப் போட்ட பின்னாலே உள்ளே இருக்கிற விஷயம். அதனாலே வெளியே அதைக் காட்டு என்று சொல்லி கேட்க முடியாது. அதனாலே இந்தக் கேள்விகளுக்கான விடையை அவரவர்கள் உள்ளே தான் உணர முடியும்.
சிந்திக்க வைக்கும் கருத்துக்கள். நாந்தான் ப்ரம்மம் என்ற உணர்வு தோன்றிவிட்டாலே உள்ளிருக்கும் அந்த ப்ரம்மத்திற்கு மரியாதை தரும் வகையில் மனம் நல் வழியில் திரும்ப வாய்ப்புகள் உள்ளது. ஆனால் நம் சிந்தனை செயல் அனைத்தும் ஆன்மீக வழியில் இருந்தால் மட்டுமே மேற்சொன்ன உணர்வு தோன்றும். ஆனால் தறி கெட்டு அலையும் நம் மனத்தை அடக்கி ஆன்மீக வழியில் திருப்புவது என்பது மிகக் கடினமான செயல் ஆக உள்ளது. ஆனால் நம் ஒவ்வொரு செயலிலும் சொல்லிலும் இறைவன் திரு நாமத்தை உச்சரிக்கப் பழகிக் கொள்வதன் மூலம் நம் மனம் என்னும் பாய் மரம் இல்லா படகிற்கு பாய்மரம் கட்டி விடலாம். பாய்மரம் கட்டிய படகினை காற்று அடிக்கும் திசையில் செலுத்த மிகுந்த திறன் தேவையில்லை. அதுபோல் பாய்மரத்தையொத்த இறைவனின் நாமம் நம்மை இவ்வாழ்க்கை என்ற ஆழியின் நடுவே காற்று என்ற ஆன்மீக வழியில் எவ்வித சிரமமும் இல்லாமல் இட்டுச் செல்லும் என் நம்புகிறேன்.
அறுமையான கருத்துகள்