1. ‘அறியாத பிள்ளைகளோம் அன்பினால்
உந்தன்னை சிறுபேர் அழைத்தனவும் சீறி அருளாதே இறைவா!’
இது கண்ணனின் காதலி, சூடிக்கொடுத்த சுடரொளி பாடிப்பரவிய பாமாலை! இடைப்பெண்கள், கண்ணன் தம்முடன் கூடிக் குலாவிய காலத்தில், அறியாமல் சிறுபிள்ளைத்தனமான செயல்களை செய்ததற்கு ஆண்டாள் படும் வருத்தத்தின் வெளிப்பாடு இவ்வுணர்வுகள்.
2. ‘அஜாநதா மஹிமாநம் தவேதம்
மயா ப்ரமாதாத் ப்ரணயேந வாபி’
கீதை 11வது அத்யாயத்தில் கண்ணனிடத்தில் அர்ஜுனன் தங்கள் தவறுகட்காக மன்னிப்பு வேண்டுவதாக வரும் வரிகள் இவை.
3. நாம் அனைவரும் பகவானிடத்தில் பல்வேறு குற்றங்களை புரிகிறோம். அவன் நம்மை குழந்தைகளாக பாவித்துக்கொண்டு அனைத்தையும் மன்னிக்கிறான். சாட்சாத் பரமேஸ்வரனே மனித உடலை எடுத்துக்கொண்டு மண்ணுலகில் அவதரித்து, தந்தை எப்படி குழந்தையின் பிழையை பொறுக்கிறானோ, எப்படி ப்ரியமான காதலி காதலனுடைய குற்றத்தை பொறுப்பாளோ, அதைப் போல் நம் அனைவரின் குற்றங்களையும் பொறுக்கிறார். ஒரு கைதேர்ந்த நடிகன் நாடகத்தில் நடிப்பது போல் அவனது சிறப்பான நடிப்பு; வேஷம் கலைந்தால் உண்மை நமக்குப் புரியும். அன்று நாம் பச்சாதாபப்பட்டு நம் செயல்களுக்கு மனம் வருந்துவோம்.
இப்பொழுதே புரிந்துகொண்டு உருப்பட்டால்,
பின்னாளில் வருத்தப்பட வேண்டிய அவசியம் இராது.
இதைப் புரிந்து கொண்டால் உனக்கு லாபம்!
“