துருவன், தன்னுடைய ஏழாவது வயதிலேயே தவம் செய்ய காட்டிற்குப் போய்விட்டான். காட்டில் காற்றையே புசித்துக் கொண்டிருந்ததாக புராணம் சொல்கிறது. அப்படி இருக்க முடியுமா?
கம்சவதம் நிகழ்ந்தபோது கிருஷ்ணனுக்கு பத்து வயது இருக்க வேண்டும். ஒரு பத்து வயதுப் பையன் கிங் காங், தாராசிங் மாதிரி இருந்த கம்சனின் மார்பின் மேல் தன் காலால் துவம்சம் செய்து அவனை மாய்த்தான் என்பது நம்பக் கூடிய காரியமா? இது ஆன்மாவுடைய பிரபாவமே தவிர உடம்பினுடைய வலிமை அல்ல. துருவனுக்குள் இருந்த spiritக்கு அப்படிப்பட்ட தவ வலிமை இருந்தது என்பதுதான் நாம் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயமே தவிர துருவன் என்கிற சரீரம் ஒற்றைக் காலில் நின்று தவம் செய்ததா அல்லது காற்றை உணவாகச் சாப்பிட்டதா என்பதெல்லாம் நமக்கு முக்கியமல்ல.”