தன்னலமற்ற சேவை
அத்தனாய் அப்பா அருளின் வாழ்வே-இது கம்ப ராமாயணத்தில் வருகிற வாசகம். அம்மையே அத்தனாய அப்பா – அம்மையும் அப்பனாக இருக்கக் கூடியவனே, அடுத்த வரி அருளின் வாழ்வே – அதற்கு அர்த்தம் – அதாவது அருள் வந்து பூமியில் வசிக்க வந்தால் அதனுடைய ரூபம்- The embodiment of divine grace. கம்ப ராமாயணத்தில் வருகிறது என்று சொன்னேன். இதை சொன்னது யார்? Annotate with reference to the context- ARC– யார் சொன்னது என்று பார்த்தால் ஆஞ்சநேய மகா பிரபுவைப் பார்த்து ராமபிரான் சொன்ன வாசகம் – கம்ப ராமாயணத்திலே.
எந்த ராமனை நாம் தர்மத்தினுடைய வடிவமாக வழிபட்டுக் கொண்டிருக்கிறோமோ, அவன் எனக்கு நீ அம்மையும் அப்பனுமாகியவன். அருள உலகத்தில் வடிவம் பெற்று வந்து வாழ்ந்து கொண்டிருக்கிறது என்று சொல்லுகிற நிலையில் வாழ்ந்தவன் தான் அந்த ஆஞ்சநேயன். அதுதான் அவனுடைய மிகப் பெரிய மகத்துவம்.
சரி இந்த மாதிரி ஒரு personified- ஆக சாட்சாத் ராமபிரான் ஒரு பரமாத்ம சொரூபம் ஏன் சொல்கிறார்? இல்லையா! நம்மைப் பார்த்து ராமர் அப்படி சொல்லணும் என்றால் நாம் அந்த ராமனுடைய வார்த்தைகளிலிருந்து அந்த ஆஞ்சநேயர் அந்த மாதிரி ஒரு certification- ஐ பெறுவதற்கு என்ன செய்தாரோ அது என்ன? என்று தெரிந்து கொள்ள வேண்டும்.
அவர் என்ன செய்தார்? கைம்மாறு கருதாமல் வாழ்ந்தார். கைம்மாறு கருதாத மாரி மாட்டு என் ஆற்றுங் கொல்லோ உலகு – எந்த காரண காரியமும் இல்லாமல் மழை பெய்கிறதே அந்த மழைக்கு யார் என்ன கைம்மாறு செய்துவிட முடியும்? என்று திருவள்ளுவ பெருந்தகை சொல்லுகிறார். கொஞ்சம் கூட கைம்மாறு எதிர்பார்க்காமல் ராமாயணத்திலே இருக்கிற ஒரே characterஆஞ்சநேயர் தான். விபீஷணனுக்கு ராஜ்ஜியம் கிடைத்தது. சுக்ரீவனுக்கு ராஜ்ஜியம் கிடைத்தது. ராமரை அண்டி இருந்த எல்லோருக்கும் ஏதோ கிடைத்தது. ஆனால் ஆஞ்சநேயனைத் தவிர. சுக்ரீவனுக்காகத் தான் அவர் ராமரிடம் சென்றார். சுக்ரீவனுக்கு அவர் ராஜ்ஜியம் வாங்கி கொடுத்தார். விபீஷணனுக்கு recommend பண்ணி இவன் எதிராளியாக இருந்தாலும் பரவாயில்லை. இவன் அடைக்கலமாக வந்திருக்கிறான். அதனாலே இவனுக்கு help பண்ணனும் என்று ராமரிடம் ஆஞ்சநேயர் தான் வாதாடினார். ராமரிடம் அத்தனை பேரும் விபீஷணனைத் துரத்து என்று சொன்ன போது, ஆஞ்சநேயர் மட்டும் தான் இல்லை, வேண்டாம் என்று விபீஷணனுக்காகப் பரிந்து பேசினார். அதனால் தான் யார் கொலோ இச்சொல்லின் செல்வர்- அந்த சபையிலே பார்த்து ராவணன் மிரண்டு போய் சொன்னான்- பார்த்தால் யார் என்று தெரியவில்லை. பார்த்தால் என்ன பிரம்மா விஷ்ணு சிவன் இவர்களுக்கு மேலாக இருப்பான் போல் தோன்றுகிறதே, யார் கொலோ இச்சொல்லின் செல்வர் என்று ராவணன் சொல்கிறான்.
இவ்வளவு அழகாகப் பேசுகிறானே, இவன் யார் என்று தெரிய வில்லையே என்று வியக்கக்கூடிய அளவிற்கு ஒரு சொல் ஆற்றல். விபீஷணனுக்கு அவர் தான் அடைக்கலம் வாங்கி கொடுத்து, அவர் தான் அந்த பட்டா பிஷேகத்தை அமைத்துக் கொடுத்தது. ராமர் அவருடைய தர்ம காரியத்திற்காக உலகத்தில் வந்து மானுட வேடம் தரித்து மனிதனைப் போல உலகத்தில் உலா வந்து கொண்டிருந்த காலத்தில் அவருக்கு எல்லாவிதமான உதவியும் செய்தது ஆஞ்சநேயர் தான். இன்னும் சாகக் கிடந்த நிலையில் மருத்துவாள் மலையைக் கொண்டு வந்தது – சஞ்சீவி மலையைக் கொண்டு வந்து அவரை உயிர்ப்பித்தது, சீதையையும் ராமனையும் சேர்த்து வைத்தது எல்லாமே ஆஞ்சநேயர் சுவாமி தான்.
சுக்ரீவனுக்கு ராஜ்ஜியத்தை வாங்கி கொடுத்தார். விபீஷணனுக்கு ராஜ்ஜியத்தை வாங்கி கொடுத்தார். ராமனுக்கு ராஜ்ஜித்தை வாங்கி கொடுத்தார். இன்னும் சொல்லப் போனால் ராமர் அயோத்திக்குத் திரும்புகையில் அவர் வந்து சேருவதற்குள் பரதன் ஏதாவது செய்து கொள்ளக் கூடாது என்று நந்தி கிராமத்தில் சென்று அவனைக் கூட காப்பாற்றியது ஆஞ்சநேயர் தான். எவ்வளவு பேருடைய சோகத்தை அவர் மாற்றினார். அந்த அளவிற்கு உயர்வாக இருந்த ஆஞ்சநேயர் ஏதாவது தனக்கு கேட்டாரா அல்லது தனக்கு ஏதாவது காரிய வாதம் இருந்ததா? இத்தனை பேருக்கு ராஜ்ஜியத்தை கொடுக்கக் கூடிய ஆஞ்சநேயர் தனக்கு எதுவுமே வேண்டாம் என்கிற மாதிரியாக இருந்தார் ஒரு விட்டேத்தியாக இருந்தார். ஆஞ்சநேயனைக் கொண்டாடுவது என்பது அவரிடத்திலிருந்த குணத்தை நீங்கள் வரித்துக் கொள்வது. உங்களுடைய வாழ்க்கையில் இதை நீங்கள் கடை பிடித்து அந்தக் குணத்தை நீங்கள் அடைந்து கொள்வது.
“