கேள்வி: நடராஜருடைய pose, காஸ்மிக் டான்ஸ் – அதனுடைய தத்துவம் என்ன?
பரமாச்சாரியார் இருந்தபோது, தி.நகரிலே வாணி மஹாலில் ஒரு யாகத்திற்கு அவரைப் போய் கூப்பிட்டாங்க. அவர் சொன்னார், ‘எனக்கு அன்னைக்கு நேர்ல வர முடியாது. நீங்க போங்க நான் வருவேன்’னு சொன்னார். எல்லாம் ஆனவுடனே இவங்க போய், ‘பெரியவா வந்திருந்தா ரொம்ப நல்லாயிருந்திருக்கும்’ அப்படின்னு சொல்றாங்க. அவர், ‘நீங்க யாகத்தை போட்டோ எடுத்திருப்பேளே! அந்த நெருப்பை பாருங்கோ’ன்னு சொன்னாராம். அதில் உண்மையாகவே பரமாச்சாரியார் நின்னுக்கிட்டு blessing பண்றமாதிரி வந்திருக்கார். ‘நான் வந்தேனே அப்படின்னாராம்’. உண்மையில் நடந்த நிகழ்ச்சி அது. அவர் உருவம் அந்த யாக நெருப்பில் வந்ததை பத்திரிகையில் எடுத்துப் போட்டிருந்தாங்க. அதே மாதிரி, கேரளாவில் ஜெர்மன்காரன் பைனான்ஸ் பண்ணி, ஒரு பெரிய புத்திரகாமேஷ்டி யாகம் பண்ணாங்க. ஜெர்மன்காரன் பெரிய பெரிய பண்டிதர் களை எல்லாம் வைச்சு யாருக்கெல்லாம் குழந்தை இல்லையோ, அவங்களை எல்லாம் பேப்பரில் விளம்பரம் கொடுத்துக் கூப்பிட்டு அவங்களை அந்த சாஸ்திரப்படி மடியாகவும், விரதமும் இருக்க வைச்சு, புத்திர காமேஷ்டியாகம் பண்ணி அதனால அவங்களுக்கு குழந்தை பிறக்குதா அப்படின்னு evaluate பண்ணினான். எவ்வளவு ரிசர்ச் பண்ணியிருக்கான் பார்! We should experiment the Truth like this. அந்த மாதிரி செய்தவர்கள் பொதுவாக யாருமில்லை. மகரிஷி மகேஷ் யோகி, அவர்களுடைய international yoga of city சில விஷயங்களை செய்திருக்காங்க. விபூதி வைச்சுக்கிறதால என்ன பயன்? திருமண் வைச்சுகிறதால என்ன பயன்? கோயில் குங்குமத்தில ரேடியோ ஆக்டிவிட்டி இருக்கா இல்லையா? மெடிட்டேஷன் பண்றதால உடம்பில எதாவது மாற்றம் வருகிறதா இல்லையா? இதெல்லாம் அவங்க விஞ்ஞானபூர்வமா நிரூபிச்சிருக்காங்க. மெடிட்டேஷன் பண்றதுக்கு முன்னால ஈ.சி.ஜி எடுத்துக்கொண்டு, அப்புறம் அந்த ஒயரோடே அவனை மெடிட்டேஷன் பண்ணச் சொல்றது. அப்போது எந்த மாதிரி graph மாறிக்கிட்டே போகுதுன்னு proof பண்ணி காமிச்சிருக்காங்க. மீனாட்சி அம்மன் கோயில் குங்குமம் மாதிரி ரொம்ப வருஷமாக இருக்கிற கோயில் குங்குமத்தைக் கொண்டுபோய் அதில ரேடியோ ஆக்டிவிட்டி இருக்குன்னு பார்த்திட்டு, ஒரு வருஷம் கழிச்சு மறுபடியும் அதைப் பார்த்திருக்காங்க. கொஞ்சம்கூட குறையவே இல்லை. அப்போது, அதில் எதோ ஒரு பவர் இருக்கு. நிறைய விஷயங்களை அவங்க scientificகாக establish பண்ணி இருக்காங்க.
கேரளாவில அப்படிப்பட்ட யாகத்தைச் செய்தார்கள் ஜெர்மன்காரர்கள். அந்த யாகத்தின் பூரணாஹூதியின்போது எடுத்த போட்டோவில் நடராஜர் வந்திருக்கார். நெருப்பில் வடிவங்கள் வருகின்றன என்பதற்கு அடுத்த நிரூபணம்.
நான்காவது, தண்ணீர். தண்ணீருக்குள் போகிறபோது என்ன வருகிறது. எதோ ஒரு டேஸ்ட் கிடைக்கிறது. ‘சால்ட்டி வாட்டர்’ன்னு சொல்றோம். ‘ஸ்வீட் வாட்டர்’ன்னு சொல்றோம். அல்லது ‘கிணற்றுத்தண்ணீர் நல்லாயிருக்கு’ன்னு எதை வைச்சு சொல்கிறாய். அதை குடிக்கிறபோது வருகிற டேஸ்ட்டை வைச்சு சொல் கிறாய். அப்போது, நீரில் உருவமும் இருக்கு. எந்த கன்டெய்னரில் இருக்கோ, அதோட உருவம் வந்திடுது. அல்லது எதோ ஒரு ஆற்றினுடைய வடிவம். கண்ணுக குத் தெரிகிற ஒரு வடிவம் இருக்கு. சப்தமிருக்கு. ஸ்பரிச மிருக்கு, அதில போய் நின்னவுடனே காலைத் தொட்டு போகுது பார்! உருவமும் இருக்கு. டேஸ்ட்டும் இருக்கு.
(தொடரும்)
“
மிக மிக அருமை, மனதிர்கு இதமக இருந்தது.