நடராஜருடைய pose, காஸ்மிக் டான்ஸ் – அதனுடைய தத்துவம் என்ன?
"The law of Physics" என்ற ஆங்கில புத்தகத்தில் ஒரு அத்தியாயம் முழுவதும் அணுக்களின் நடனத்தைப் பற்றித்தான் சொல்லி இருக்காங்க. அவங்க ஒரு கிளாஸ் சேம்பருக்குள்ளே ஒரு அணுவை சிதறடித்து அதனுடைய ஒவ்வொரு ஸ்டேஜையும் போட்டோ எடுத்துக்கிட்டே வராங்க. அதையெல்லாம் sequence பண்ணிப் பார்க்கும்போது, அதிலே நடராஜ தாண்டவம் வருகிறது. அணுக்களின் நடனம்; the cosmic dance அதுதான் நடராஜர் தாண்டவம் என்பது. இப்படி அந்த ஒளி வடிவங்கள் மாறி கடைசியிலே நடராஜர் தாண்டவமாக வருகிறது.
இந்த நடராஜ தாண்டவத்திலே படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் இந்த ஐந்து விதமான விஷயங்களும் சிம்பாலிக்கா இருக்கு. ஒரு கையிலே உடுக்கை – ஒலி. ஒலியிலிருந்து இந்த உலகம் உண்டானது. இன்னொரு கையில நெருப்பு – சம்ஹாரம். அருளல் – முயலகன் மேல் காலை ஆசீர்வதிக்கிற மாதிரி வைத்திருக்கிறார். படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் இந்த ஐந்துமே நடராஜருடைய போஸ்ல வந்திடுது.
விஞ்ஞானம்கூட ‘ஆகாசம்’ என்பது வெறும் ஒலின்னு தான் சொல்கிறது. எந்த ஒரு வேதத்தையும் ரிஷிகள் யாரும் உண்டாக்கவில்லை. அந்த சப்தத்தில் அவர்கள் கிரகித்த வார்த்தைகள் வேதங்களாக ஓதப்படுகின்றன. Old Testament-ல மோசஸ் சப்தம்தான் கேட்டார். முகம்மது நபி சப்தத்தைத் தான் கேட்டார். அசரீரின்னு சொல்றோம். அதை வைத்துத்தான் உலகத்தில் பல்வேறு மதங்கள் உற்பத்தி ஆயின. அதனால் அவர்கள் யாருமே வேதத்தை உற்பத்தி செய்தவர்கள் என்று தங்களை சொல்லிக் கொள்ளவே இல்லை. அவர்கள் அதை வாங்கிக்கொடுத்தார்கள். அதனால், இன்னைக்குக்கூட ஏதாவது ஒரு வேதமந்திரத்தை வேதியர்கள் சொல்லுகிற போது, இந்த வேதத்தினுடைய கிரகிப்பாளர், உலகத்திற்கு வாங்கி வழங்கியவர் என்று அந்த வேதத்தை கிரகித்து அளித்த ரிஷியினுடைய பெயரை வைத்து சொல்லுவாங்க.
இரண்டாவது நிலையில் வருகிறபோது சப்தத்துடன் ஸ்பரிசமும் இருக்கிறது. இந்த யாகங்கள் எல்லாம் எதுக்காக வளர்க்கிறாங்கன்னா, அதில்தான் உருவம் தெரியும். நெருப்பில் சப்தம் உண்டு. அதற்கடுத்து தொட்டா ஸ்பரிசம் தெரியும். அந்த தீயினுடைய நாக்கு அசையறதை நீங்க பார்க்கமுடியும் அதிலே. மூன்றாவது, ஒரு உருவம் இருக்கிறது. நெருப்புக்கு ஒரு உருவ வடிவம் வந்துவிடுகிறது. அதனாலேதான் எந்த தேவர்களை வரவழைத்து அவங்களுக்கு ஏதாவது offer செய்யணும்னாகூட, யாகம் வளர்த்துத்தான் அந்த உருவங்களை வெளிப் படுத்திக் கொள்ளமுடியும்.
ஒரு விளக்கை பூஜை பண்ணி அந்த திரியிலிருக்கிற ஜ்வாலையிலே தெய்வ உருவங்களை பார்ப்பார்கள் அல்லது ஒரு மெழுகுவர்த்தியோட திரியிலே பார்த்திருப்பார்கள். கேரளாவில் விளக்கு இல்லாமல் பூஜையே கிடையாது. சாமி, கோயில் அதெல்லாம் கூட அவங்களுக்கு இரண்டாம் பட்சம்தான். ஏன்னா, அவர்களுக்குப் பிரியமான இஷ்டதெய்வங்களை, அந்தந்த மந்திரங்களின் வாயிலாக சப்தலோகத் திலிருந்து கீழிறக்கி, அந்த உருவங்களை விளக்கிலே பார்க்கமுடியும்னு சொல்கிற ஒரு விஞ்ஞானம் அது. அதனால்தான் நாம் செய்கிற யாகத்திலே கூட படமெடுக்கிற போது தெய்வ வடிவங்கள் வருகின்றன.
(தொடரும்)
“
இறைத் துகள்கள் விண்ணாகி அவைதன்னிறுக்க ஆற்றலால் சிதறிய உருண்டையாகி திணிவின் அழுத்தத்தால் வெடித்துச் சித்றிஅவை ஒவ்வொன்றும் கோளங்களாகி………….என்ற வேதாத்திரியத்தைப் படித்தால் இது இன்னும் தெளிவாகும் —————–
விஞ்ஞானம் இல்லாத காலத்தில், சிவன் போன்ற ஞானியர்களுக்கு தங்களின் ஞான பார்வையிலேயே அனுதுகள்கள் பற்றிய விஞ்ஞானம் தெரிந்திருக்கிறது. இன்றைக்கு நாம்தான் அவ்வாறு அறிந்துகொள்ளும் பக்குவத்தை மீட்டெடுக்காமல் இருக்கிறோம்.