கேள்வி: நடராஜருடைய pose, காஸ்மிக் டான்ஸ் – அதனுடைய தத்துவம் என்ன?
(continuation)
நாம் "ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கி" அந்த உள்ளொளியினுடைய வெளிச்சத்தில் காணாத காட்சிகளைக் காணமுடியும். "ஆனிப்பொன்னம்பலத்தில் கண்ட காட்சிகள் அற்புதக் காட்சியடி!" என்கிறார் வள்ளலார். அந்த ஆனிப் பொன்னம்பல அற்புதக் காட்சி நம்மிடமே இருக்கு. All these things are available. அதனால் தான் கிருஷ்ணபரமாத்மா அர்ஜுனனுக்கு அகக்கண்ணை திறந்த பிறகுதான் அவனாலே விஸ்வரூபத்தை பார்க்க முடிந்தது. May be He had revealed the same cosmic form to Duryodhana also by opening his third eye or giving a short time vision to the third eye. இல்லைன்னா, துரியோதனன் கண்ணுக்கு எப்படி தெரிஞ் சிருக்கும்? ஆனால் சொல்ல முடியாது. ஏன்னா, அந்தக் காலத்து அசுரர்களும் தபஸ் பண்ணினவர்களாக இருந்தார்கள். இப்ப இருக்கிறவன் மாதிரி கிடையாது. தபஸ் பண்ணி ‘எதிரில் வர்றியா இல்லையா என் தலையை வெட்டிக் கொள்ளட் டுமா’னு தவம் பண்ணி வரம் வாங்கினவர்கள். அந்த வகையில் துரியோதனனும் மகாதபஸ்வியாக இருக்க வேண்டும். He was destined to be blessed, with that type of vision. May be he missed it. அதைப் புரிஞ்சிக்கிற பக்குவம் இல்லாம போச்சு. அதற்குக் காரணம் அவனுடைய துர்குணமாக இருந்திருக்கலாம்.
நாம் எல்லோரும் பூமியில் பிறந்திருக்கோம். இதில்தான் அந்த 5 வஸ்துவும் இருக்கு. It’s time for us to work on this project to understand the Divinity in us. வேறு எங்கே போனாலும் கிடைக்காது. ஆகாசத்தில் போனா வெறும் ஒலியாக உட்கார்ந்துக்கிட்டு யார் எங்கேயிருக்காங்கன்னு தெரியாம வெறும் சப்தம்தான் கேட்கும். You will not be able to see any form. There, no form exists. காற்றிலேயும் அந்தமாதிரி தான். காற்றிலே கூட சில நேரங்களில் ஒலிதான் கேட்கும். ஆனால் யாரும் இருக்க மாட்டாங்க. நமக்கே அது பிரமையாக தோன்றும். மூணாவது, நெருப்பில பார்க்க முடிகிறதுன்னு நிரூபிச்சிட்டோம். தண்ணியில டேஸ்ட் இருக்குன்னு உங்களுக்கே தெரியுது. மண்ணில்தான் வாசனையும் இருக்கு. அதனால்தான் வேற எதற்கும் இல்லாத ஒரு சிறப்பு இதற்கு இருக்கு. ‘மண்வாசனை’ன்னு கூட நாம சொல்லுவோம். காற்று வாசனை, ஆகாய வாசனை அப்படிங்கிற வார்த்தையை கேள்விப்பட்டிருக்கியா? ‘மண்வாசனை’ என்கிற வார்த்தை இருக்கிறது. So, our people are intellectual. They have the right interlink. ஒலி, சுவை, ஒளி, நாற்றம், உணர்வு என்று சொல்லுகிற வகையில் அந்த பஞ்சபூதங்கள், நம் உடலில் இருக்கிற ஐம்புலன்கள் எல்லாவற்றிற்கும் இன்டர்லிங்க் இருக்கு. வெளி, உள் இரண்டிற்கும் தொடர்பு வைத்து அழகான ஒரு விஞ்ஞானபூர்வமான படைப்புதான் மனிதன்.
உள்ளேயிருக்கிற 5 ஸ்விட்ச் போட்டான்னா, 5 பல்பும் எரியப் போகுது. We are insulated to have five bulbs. ஐந்து விதமான பல்புகள் எரியறதுக்கு 5 ஸ்விட்ச் இருக்கு நம்ம கிட்டேயே கண், காது, மூக்கு, வாய், மெய். இதுதான் ஐம்புலன்கள். அந்தந்த ஸ்விட்ச் போட்டால் எல்லாம் தெரியப்போகிறது. So, we are the greatest electrical system on this earth. அண்டத்தில் உள்ளதெல்லாம் பிண்டத்திலும் இருக்கிறது. அதை ஒழுங்கான முறையில் பயன்படுத்துவது அவரவர்கள் கையில் இருக்கிறது.
“
CLICK AND READ
>>>> இதுதான் சிதம்பர ரகசியமோ என்னவோ?