பாபா பதில்கள்-சாதனையாளன்

சாதனையாளன்…….

திரு. சிவ சங்கர் பாபா அவர்களின் உரையிலிருந்து,

நான் வாழ்க்கையிலே எதையாவது சாதிக்க வந்திருக்கிறேனா? அல்லது சும்மா இப்படியே சராசரி மனிதனாக வாழ்ந்துவிட்டு ஒரு நாள் இறந்து போக வேண்டுமா? என்பதை முதலில் நீ decide பண்ணிக் கொள்ள வேண்டும். நீ சாதாரண மனிதனாக வாழ்ந்து, குடும்பம் நடத்திவிட்டு, சாப்பிட்டுவிட்டு இறப்பதாக இருந்தால் உனக்கு எதுவும் தேவை இல்லை.

நான் SSLC முடித்துவிட்டு PUC படிக்கப் போகிறபோது English knowledge test செய்வதற்காக எல்லோருக்கும் ஒரு பரீட்சை வைத்தார்கள். அதிலே ஒரு General topic. Jawaharlal Nehru பற்றி எழுதுன்னு சொன்னாங்க. நான் எழுதிய opening sentence என்ன தெரியுமா? Many a man comes to this world; but only a few make a mark and leave some trace behind them என்று எழுதினேன். எவ்வளவோ மனிதர்கள் வருகிறார்கள். அதிலே சில பேர்தான் தங்களுடைய தடங்களை பதிக்கிறார்கள் என்று எழுதினேன்.
அந்த மாதிரி நீங்களும் ஆக வேண்டும் என்று நினைத்தால், அதற்கு முதலில் செய்ய வேண்டியது உன்னிடம் என்ன திறமை இருக்கிறது என்று தெரிந்து கொள்வதுதான். அந்த திறமையை வைத்துக் கொண்டு எப்படி நாம் சாதனையாளனாக மாற வேண்டும் என்று திட்டமிடுவது. யார் என்ன சொன்னாலும் அதைப் பற்றி சிறிது கூட கவலைப்படாமல் அதற்கான படிப்பு, அதற்கான training, அதற்கான physical fitness, அதற்கு தேவையான புத்தகங்களை எல்லாம் படிக்க வேண்டும். உன்னுடைய எண்ணம் அந்த ஒரு குறிக்கோளில் மாத்திரம்தான் நிலைத்து இருக்க வேண்டும். அப்போது நீ சாதனையாளனாக மாறலாம். நமக்கு என்ன திறமை இருக்கிறது, என்பதைப் பற்றி நாம் தெரிந்து கொள்ளாத வரையில் நமக்கு இலக்குகள் இல்லை.

So, there are two options for you. Either you die as a normal human being or die as an exemplary person. If you want to die as an exemplary person, you should find out the talent in you, try to furnish it and make it to the finest finish with finesse.

About The Author

1 Comment

  1. R.Panneer selvam

    அறுமையான கருத்துக்கள் . இள்ம் நெஞ்சங்களுக்கு நல்ல வழிகாட்டுதல்

Comments are closed.