New Year 2012 Message:
My Life is My Message – – always.
Instead of saying "I like Siva Shankar Baba"
People should say "I am like Siva Shankar Baba"
Aiming at Excellence & Expanding in Love
சமுதாய மாற்றம்
சமுதாய மாற்றம் என்பது சமுதாயத்தில் இருக்கிற ஒவ்வொருவரையும் ஒன்றாக்கி, ஒத்த தொண்டரோடு கூட்டு கண்டாய் என்று ஆண்டாள் சொல்கிற பாவனையில் கூடியிருந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய் என்கிற ஒரு பக்குவம். அதுதான் சமுதாய மாற்றத்திற்கான அடித்தளம். இதில் வேறு எந்தத் துறையில் இருக்கிறவர்களை விடவும் ஆன்மீகத்தில் இருக்கிறவர்கள் பெரிய பங்களிப்பில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள முடியும். அரசியல், கலை, இலக்கியம் இதிலே எல்லாம் சில கொள்கைகள் உண்டு. இது ‘எங்களுடைய profession’ என்கிறமாதிரி. அதனால் அவர்கள் ஒன்றாவது என்பது கொள்கை அளவில் சாத்தியம் அல்ல. நட்பு முறையில் சாத்தியம். கொள்கை அவரவர்களுக்கு என்று தனிப்பட்டதாக இருக்கும். எந்த ஒரு விஷயத்தையும் சாராத, எந்த ஒரு விஷயத்தையும் சாடாத நிலையில் இருக்கிற ஒரு ஆன்மீகவாதியால் ஒரு சமுதாய மாற்றத்திற்கு பெரிய அளவில் பங்களிப்பைத் தர முடியும், because he is acceptable for so many reasons. ஒன்று அவர் எதையும் சாடவில்லை. இரண்டாவது, ஆன்மீகத்தில் முழுதாக தங்களை ஈடுபடுத்திக் கொள்கிற நிலையில் ஞானிகள் இருந்தால் அவங்களுக்கு சுயநலம் இருக்காது. அதனால் மற்றவர்களுக்கு அவர்கள் confidence level will be very high; எந்தவிதமான negative கண்ணோட்டமும் இன்றி approach செய்வதற்கு ஒரு பெரிய வாய்ப்பு இருக்கிறது. அதைத்தான் நாம் இப்போது சாதிக்க முயன்று கொண்டிருக்கிறோம்.
பாவம் ஏது? புண்ணியம் ஏது?
உன் வாழ்க்கையிலே என்னவெல்லாம் நடக்கிறதோ அது உனக்குள்ளே இருக்கிற சாமி செய்யறது. உனக்கு ஏதாவது நல்லது நடந்தாலும் சாமி. கெட்டது நடந்தாலும் சாமி. நாம் என்ன செய்யறோம்- நல்லதை மாத்திரம் சாமிக்கு கொடுத்துவிடுகிறோம். கெட்டது நடந்தால் அதை நம்முடைய கர்மா என்கிறோம். ஏன்? எல்லாம்தான் அவனுடையது. நல்லது, கெட்டது எல்லாத்தையுமே சாமிக்கு கொடுத்துவிடு.
நன்றே வரினும் தீதே விளைகினும் நான் அறிவது ஒன்றேயும் இல்லை. நல்லது நடந்தாலும் கெட்டது நடந்தாலும் எனக்கு ஒன்றும் தெரியாது. உனக்கே பரம். அதுதான் ஆன்மீகம். நான் சொல்றதுக்கும் அபிராமி அந்தாதியில் வருகிற வரிகளுக்கும் ஏதாவது வித்தியாசம் இருக்கா? அப்போ பாவம் ஏது? புண்ணியம் ஏது? இரண்டும் கிடையாது. நல்லது எது? கெட்டது எது? இரண்டும் கிடையாது. It is a question of your own mind planning certain things go in a particular direction. Sometimes it clicks; sometimes it doesn’t click.
மோட்சம்னா என்ன?
நிறைய பேர் மோட்சம் என்பது ஏதோ தான, தர்மம் செய்தால் வந்துவிடும்; கோவில், குளம் சுற்றிக் கொண்டிருந்தால் வந்துவிடும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் அப்படி அல்ல. அதெல்லாம் training programmes. பயிற்சிக் கூடத்தில் தருகிற அனுபவங்கள். மோட்சம் என்பது சரீரத்திலிருந்து ஆத்மாவை விடுவித்துக் கொள்வது. அதற்கு ‘நிலையின் திரியாது அடங்குதல்’ நிலை தேவைப்படும்.
“