Q. குல தெய்வத்தை விடக்கூடாது என்கிறீர்களே! நாங்கள் எங்கள் குல தெய்வமான திருப்பதி போவதேயில்லை பரவாயில்லையா?
Baba: குலதெய்வத்தை விடக்கூடாது என்று சொல்லப்படுவது உண்மைதான். திருப்பதி வேங்கடாசலபதி தேவைகளற்ற தெய்வம். நீங்கள் திருப்பதிக்குச் சென்றாலும், செல்லாமல் இருந்தாலும் அவர் கண்டு கொள்ளமாட்டார். ஆனால், கிராம தேவதைகளுக்குப் பூஜை செய்வதற்கு ஆட்களே கிடையாது. நீங்கள் கிராம தேவதைகளுக்கு பூஜை செய்யாவிட்டால் அவை பசியோடு இருக்கும். அந்த தேவதைகள் பசியோடு இருந்தால் நீங்கள் எப்படி நன்றாக இருக்க முடியும்?
அதாவது இதில் இரண்டு categories s உண்டு. ஒரு ஆபீஸில் பெரிய அதிகாரியை மிகவும் எளிதாக காணலாம். ஆனால், அதிகாரியின் கீழ் வேலை பார்ப்பவர்கள் தான் பார்க்கவிடாமல் தொந்தரவு கொடுப்பார்கள். அதுபோல சின்னச் சின்ன கிராம தேவதைகள்தான் அலட்டிக் கொள்ளும். பாரம்பரியமான குலதெய்வம் என்றால், அந்த தெய்வம் உங்களுக்கு நல்லது செய்யும். ஏனெனில், அந்த தேவதைகளுக்கும் சில தேவைகள் உண்டு. தேவர்களுக்கும் தேவைகள் உண்டு.
உங்களுடைய பெரியவர்கள் கிராமத்தில் வசித்து வந்தபோது அந்த தேவதைகளுக்கு பூஜை செய்துகொண்டிருந்துவிட்டு, பின்னாளில் பொருளாதார தேவைகளுக்காக கிராமத்தை விட்டு நகரத்தில் குடியேறிய பின், அந்த பூஜையைச் செய்யாவிடின், அந்த தேவதைகள் பட்டினியாக இருக்கும். அதனால் உங்களுக்கு வாழ்க்கையில் சில கஷ்டங்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு
குலதெய்வம் என்பது உண்மை. குலத்தை ஆளும் தெய்வம் எதுவோ அதுதான் குலதெய்வம். உங்களுடைய பெரியவர்கள் செய்த பூஜையின் பலன்கள் bank-ல் பணம் சேமிப்பதைப் போலச் சேர்ந்திருப்பதனால், நீங்கள் உங்களுடைய குலதெய்வத்திடம் சென்றால், அது உங்களுக்கு நல்லது செய்யும். அதனால், குலதெய்வத்தை வழிபடுவது என்பது தேவையான ஒன்றுதான்.
என்னுடைய சுய அனுபவங்களில், நான் எத்தனையோ முறை திருவண்ணாமலையில், இரவு 12.00 மணிக்கு மேல், அந்த கிராம தேவதைகள் சுவாமியைச் சுற்றி வந்து, அன்றைக்கு யாரெல்லாம் தங்களை வழிபட்டார்களோ, அவர்களுடைய கஷ்டங்கள் தீரவேண்டும் என்பதற்காக, முறையிட்டு வேண்டிக் கொள்வதைப் பார்த்திருக்கிறேன். ஒரு வக்கீல் தனது கட்சிக்காரருக்காக நீதிபதியிடம் வாதாடுவதைப்போல, இந்த கிராமதேவதைகள் திகழ்வதால், அவர்களுக்கு நீங்கள் வழிபாடு செய்வது என்பது மிகவும் உவப்பான விஷயம்.
“