ஒரு ராஜா இருந்தான். "எல்லாரும் ஒரு பழத்தை எடுத்துக்கிட்டு வரிசையில் நிக்கணும். இதுவரைக்கும் நான் பார்த்த பழத்தைக் கொண்டு வந்தால் அவன் வாயிலேயே அதை வைச்சு, அவனுக்கு ஒரு அடியும் போடுவேன். இதுவரை நான் பார்க்காத பழமாக இருந்தால் ஒரு தங்க சவரன் தருவேன்" அப்படின்னு தண்டாரா போட்டான். எல்லாரும் வரிசையாக நிக்கறாங்க. முதல் ஆள் வாழைப்பழம் வைச் சிருந்தான். நான் வாழைப் பழத்தையே பார்த்ததில்லையாடா என்று பட்டுன்னு ஒரு அடி வைச்சு அந்த வாழைப்பழத்தை அவன் வாய்க்குள்ளேயே வைச்சான். வரிசையாக கமலா, சாத்துக்குடி எல்லாம் வைச்சுக்கிட்டு நிக்கறாங்க. ஒரு ஆள் மாதுளம் பழம் வைச்சிருந்தான். நான் மாதுளம்பழம் பார்க்கலையான்னு ஒரு அடி அடிச்சு, அந்த மாதுளம் பழத்தை அவன் வாய்க்குள்ளே சொருகுகிறான். அவனுக்கு வாயெல்லாம் கிழிஞ்சு போச்சு. ஆனாலும் அவன் சிரிக்கிறான். ராஜாக்கு ஒரு மாதிரி ஆகிவிடுகிறது. இவ்வளவு பெரிய மாதுளம் பழத்தை வாயில் வைச்சு அடிச்சு இருக்கேன். ஆனால், இவன் ரத்தம் வந்தாலும் சிரிச்சுக்கிட்டே இருக்கானே அப்படின்னு சொல்லி, நான் உன்னை அடிக்கறதை வேணாலும் நிறுத்திவிடுகிறேன். ஆனால் ஏன் சிரிக்கிறே என்பதை மட்டும் சொல்லு என்றான். அவன் தனக்கு பின்னாடி இருக்கிறவனைப் பார்த்து கை காண் பிக்கிறான். பார்த்தால் பின்னாடி ஒருத்தன் பலாப்பழம் வைச்சுக்கிட்டு நிக்கறான். தனக்கு மாதுளம் பழத்தினால் வந்த கஷ்டத்தை விடவும் பின்னால் பலாப்பழத்தால் வரப்போகிற கஷ்டம் இருக்கு பார், அதை நினைச்சு அவனுக்கு ஒரே தமாஷாப் போச்சாம். இந்த உலகத்தில் எல்லாருமே இப்படித்தான். தன்னுடைய கஷ்டத்தைவிடவும் மத்தவங்க கஷ்டம் பெரியதாக இருந்தால் அதைப் பார்த்து சந்தோஷப்படுகிறவர்கள் தான் ஜாஸ்தி.
உலகத்தில் கஷ்டம் என்று ஒன்று இல்லை. எந்தக் கஷ்டம் வந்ததோ அது உன் நன்மைக்காக வந்தது. இல்லைன்னா நீ கடவுளை இழந்திருப்பாய்.
கஷ்டம் என்று நீ எதை நினைக்கிறாய்? உன் வருமானத்தில் ஒரு 5000 ரூபாய் குறையுது, அவ்வளவு தானே. இல்லை கணவனிடம் மனைவிக்கும், மனைவியிடம் கணவனுக்கும் 4 திட்டு அதிகமாக விழுகிறது, அவ்வளவு தானே. பசங்க சொன்ன பேச்சை கேக்க மாட்டேங்கறாங்க, அவ்வளவுதானே. இதுதானே நீ நினைச்சுட்டு இருக்கிற கஷ்டம். மூக்குல கொஞ்சம் சளி ஒழுகுது. காதுல குளுமி ஜாஸ்தியாக இருக்கு, அவ்வளவுதானே. உலகத்தில் இந்த மாதிரி கஷ்டங்கள் இல்லாதவனே இல்லை.
கடவுள் ஒருநாள் எல்லார் கனவிலேயும் வந்து சொன்னார். உங்க கஷ்டத்தை எல்லாம் மூட்டை கட்டிக் கொண்டு வந்து என் கோயில்ல போட்டுடுங்க. நான் லைட் ஆஃப் பண்ணுவேன். வேற எந்த கஷ்டத்தையாவது நீங்க எடுத்துட்டு ஓடிடலாம் அப்படின்னு. எல்லாரும் இன்னையோட கஷ்டம் எல்லாம் போச்சுனு, அவங்க கஷ்டத்தை எல்லாம் மூட்டை கட்டி எடுத்துக்கிட்டு கோவிலுக்கு போனாங்க. சாமி சொன்ன மாதிரி, 7 மணிக்கு லைட் ஆஃப் பண்ணிட்டாரு. 5 நிமிஷத்துக்குள்ள எல்லாரும் வேற எதாவது மூட்டையை எடுத்துக்கிட்டு ஓடிடணும். எல்லாரும் நினைச்சாங்க நம்ம மூட்டையில் இருக்கிற கஷ்டம் நமக்கு தெரியும். மத்தவங்க மூட்டையில எவ்வளவு மோசமான கஷ்டம் இருக்குமோ என்று பயந்து 7.05-க்கு லைட் போட்டதும் அவனவன் தன்னுடைய மூட்டையையே திரும்ப எடுத்துக்கிட்டு போகிறான். அதனால் இன்னிக்கு நீ எதை பாரம் என்று நினைத்துக்கிட்டு இருக்கியோ அதுதான் வெளிச்சம். There is lot of light in your life because your burdens are light.
thank u baba. i have a good article and good lession to me.