உன்னிடம் என்ன இருக்கோ அதை வைத்து சந்தோஷப்படு. உனக்கு போட்டுக்க டிரஸ் இருக்கு. சாப்பாட்டுக்கு வழி இருக்கு. கல்யாணம் ஆகி இருக்கு. குழந்தை இருக்கு. ஏதோ ஒரு உத்தியோகம் கையிலே இருக்கு. அதனாலே எதெல்லாம் உன்கிட்டே இருக்கோ அதற்காக நீ முதலிலே கடவுளுக்கு நன்றி சொல்லு. உன்னிடம் இல்லாததைப் பற்றி நீ வருத்தப்பட்டுக் கொண்டிருக்கிறாயே தவிர எதெல்லாம் இருக்கோ அதையெல்லாம் நீ என்றைக்காவது நினைத்துப் பார்த்தது உண்டா?
இயற்கை எவ்வளவு அழகாக இருக்கிறது பார். எவ்வளவு செடி! எவ்வளவு மரம்! நீலமான ஆகாசம்! எவ்வளவு பறவைகள் எவ்வளவு அழகாக இருக்கிறது! காக்கா திருட்டுத்தனமாக குதித்துக் கொண்டு வந்து சாப்பிடுமே அதை என்றைக்காவது நீ ரசித்து பார்த்திருக்கியா? ஒரு குருவி கத்துவதை ரசித்து கேட்கிறாயா? நிர்மலமான ஆகாசத்திலே இருக்கிற மேகக் கூட்டத்தை என்றைக்காவது ரசித்திருக்கிறாயா? சந்திரனை, நட்சத்திரத்தை, சூரியனைப் பார்த்து நீ ரசித்திருக்கிறயா? இது எதுவுமே நீ செய்வதில்லை. இந்த உலகம் பூரா சந்தோஷம்தான். நீ சந்தோஷத்தை விட்டுவிட்டு எப்போது பார்த்தாலும் துக்கத்தைப் பிடித்துக் கொண்டிருக்கிறாய். The whole world is filled with joy and happiness. ஒரு சின்ன துரும்பு கண்ணை மறைக்கிற மாதிரி நீ எப்போது பார்த்தாலும் துக்கத்தையே பார்த்துக் கொண்டிருக்கிறாய். இதுதான் உன்னுடைய problem. நீ உன்னுடைய பார்வையை மாற்று. இந்த உலகத்திலே எவ்வளவு சந்தோஷமாக இருக்கலாம் என்பது உனக்குப் புரிந்துவிடும்.
அதனாலே முக்கியமாக மூன்று விஷயங்களை நீ சிந்திக்கத் தொடங்கு!
1. இந்த உலகம் பூரா சந்தோஷம்தான். நீ துக்கத்தைத்தான் பிடித்துக் கொண்டிருக்கிறாய். அதனாலே துக்கத்தை விட்டுவிடு.
2. கடவுளை கடவுளுக்காக நேசி. பயத்திற்காக நேசிக்காதே. ஏன்னா கடவுள் என்பது மிகப் பெரிய வஸ்து. சாமி படத்திற்கு முன்னாலே போய் நின்று கொண்டு ‘நீ எனக்கு நிறைய கஷ்டம் கொடுத்திருக்கிறாய்’ னு சொல்லிக்கிட்டு இருக்கே. என்றைக்காவது கஷ்டத்துக்கிட்டே- ‘ஏ கஷ்டமே! நீ என்ன துக்கடா? கடவுள் எவ்வளவு பெரிய ஆள் தெரியுமா?’னு சொல்லியிருக்கிறாயா? Simple logic. You have to change your attitude towards life.. கொஞ்சம் நல்ல புத்தி இருக்கிறபோதே சாமியைப் பற்றி நல்லா பாடு. உன்னாலே பாட முடியலைன்னா யாராவது பாடினால் அதையாவது கேளு.
3. இந்த இரண்டும் முடியலைன்னா தினமும் ஒரு பத்து நிமிஷம் சாமி முன்னாடி நின்று கொண்டு அழு. இந்த மூன்றிலே ஏதாவது ஒன்று செய். கேட்கக் கற்றுக்கொள் அல்லது அழக் கற்றுக்கொள் அல்லது தொழக் கற்றுக்கொள்.
புல்லை வெட்டினால் அது மறுபடியும் வளர்ந்துவிடும். ஆணிவேரோடு எடுத்தால் திரும்ப வராது, அது மாதிரி நீங்கள் செய்கிற பூஜை. புனஸ்காரம் எல்லாமும் அப்படித்தான், உங்களுக்குள் இருக்கிற காம. குரோத. லோப. மத மாச்சர்யத்தை அடியோடு களைந்தால் தான் உங்களுக்குள் அந்த எண்ணங்கள் திரும்ப வராது.
அறிவு எப்போதும் உனக்கு ஜட்ஜ்மென்ட் கொடுத்துக் கொண்டேயிருக்கும். அறிவை விட்டுக் கொடுத்துவிட்டு உணர்ச்சிக்கு வந்து விடு. அதுதான் ஆன்மீகத்திற்கு தேவை.
தினமும் ஒரு பத்து நிமிஷம் சாமி முன்னாடி நின்று கொண்டு அழு. இந்த மூன்றிலே ஏதாவது ஒன்று செய். கேட்கக் கற்றுக்கொள் அல்லது அழக் கற்றுக்கொள் அல்லது தொழக் கற்றுக்கொள்.
நல்ல சிந்தனை