என்னுடைய பயோடேட்டா …………..
திரு. சிவ சங்கர் பாபா அவர்களின் உரையிலிருந்து,
கேஷூவலான ஆன்மீகம்
அலட்டிக் கொண்டு ஆன்மீகம் செய்த மகனீயர்களின் காலம் முடிந்து விட்டது. இது கேஷூவலாக ஆன்மீகம் செய்யும் சிவசங்கர் பாபாவின் காலம். இதில் எவ்வளவு நுணுக்கங்களை வைத்திருக்கிறேன் என்று ஒருமணிநேரம் என்னைக் கவனித்தால் புரியும். கையில் பஞ்சாமிர்தம் கொடுக்கும்போதே கழுவுவதற்கு தண்ணீர் அதனுடனேயே வரும். இவ்வளவு அழகான disciplined ஆன்மீகத்தை எப்படி கேஷூவலாக கொண்டு வந்திருக்கிறேன் பார்! நான் என்ன பிளாக்போர்டில் இதுதான் ஸ்டெப் ஒன்று, ஸ்டெப் இரண்டு என்று எழுதியா போட்டிருக்கிறேன். ஒருத்தரைப் பார்த்து ஒருத்தர் motivate பண்ணி இந்த இடத்தை எவ்வளவு அழகாக வைத்திருக்கிறேன் பார்!
எவ்வளவு மிலிட்டரி டிசிப்ளினில் நடக்கிறது பார்! இதெல்லாம் நான் டெய்லி காலையில் உட்கார்ந்து அஜெண்டாவா போடுகிறேன். Over the years gradual ஆக செய்தேன். அதையும் கேஷுவலாக சிரித்துக்கொண்டே செய்வேன். ஜோக் அடித்துக் கொண்டு, அரட்டை அடிக்கிறேனே; எனக்கு ஏதாவது மரியாதை கம்மியாக இருக்கிறதா பார் I know how to command respect. பேசிவிட்டாரே என்று அவங்களால் தலைக்கு மேல் ஏறி உட்கார்ந்துவிட முடியாது. Over the years I have balanced between casualness and seriousness. இரண்டையும் பாலன்ஸ் பண்ணிக் கொண்டு போகிறேன். நல்லா சாப்பிடுவேன். நல்லா டிரெஸ் பண்ணுவேன். ஆரோக்கியமாக இருப்பேன். நிறைய படிப்பேன். நிறைய ஊர் சுற்றுவேன். ரொம்ப பிராக்டிகலாக இருப்பேன். என்னுடைய வழிமுறைகள் ரொம்ப வித்தியாசமானவை.
I am the one in world history so far who has run the organisation without any extra source.
தனி பாதை
ஆன்மீக fieldல் நான் எனக்கென்று ஒரு தனி பாதையை வகுத்திருக்கிறேன். அறிவு சார்ந்த அன்பு சார்ந்த வழி இது. I am like fire. ஒரு political background, monetary power எல்லாம் என்கிட்டேயே சேர்க்கமாட்டேன். I go by love. நான் ஒரு meeting போனால் என்னை மாதிரி சொற்பொழிவாற்றுவதற்கு ஒருவரும் இல்லை. என்னை மாதிரி ஒரு சாமியார் இந்த உலகத்தில் இல்லை.
எஜமானன்
எந்த ஒரு ஆன்மீக மையத்திலும் பேங்கில் நிச்சயமாக லோன் என்றெல்லாம் வாங்குவார்கள். ஆனால் சம்ரட்சணாவில் நாம் அப்படி செய்தது இல்லை. என்னுடைய எல்லா projectsம் self supporting ஆகத்தான் இருக்கும். மேனேஜ்மென்ட் டெக்னிக். அதனால் I always say I am a corporate God.
என்னுடைய வாழ்க்கை முழுவதும் எப்படி இருக்கும் என்று எனக்குத் தெரியும். I work with confidence. That is why you are seeing this much of glow, prosperity and peace here. இதற்குக் காரணம் அதன் எஜமானன். எந்த கோயிலில் பூஜை பண்ணாலும் எஜமானஸ்ய என்றுதான் ஆரம்பிப்பார்கள். அப்படி நான்தான் இதற்கு எஜமானன்.
ஒரே ஆள் நான்தான்
ஒரு ஒழுக்கத்தோடு, எதற்கும் யாரையும் depend பண்ணாத தனக்கென்று moral code வைத்துக் கொண்டிருக்கிற சாமியார் எங்கும் கிடையாது. I do not cheat anyone in the name of anything. கடவுளைப் பற்றியே too blunt ஆக பேசுகிற ஒரே ஆள் நானாகத்தான் இருப்பேன். இன்னும் சொல்லப் போனால் ‘என் காலில் விழாதே; மாலை கொடுக்க வேண்டாம்’ என்று இன்று வரை சொல்லிக் கொண்டிருக்கிறேன்.
(மீதி அடுத்த இதழில்)
“
Little girl to her Mom : Mom what is Ego?
Mom : When you say I” for everything
Little girl : Then it should be “I”go….
Sir, I assume you would have understood what it means from the above actually happened conversation…. When there is so much I where is GOD?”
That is self-esteem not ego…