பாபா பதில்கள் – எது நல்லது?

எது நல்லது?

உனக்கு பத்தாயிரம் ரூபாய் கடன் இருக்குன்னு வைச்சுக்கோ. கடனிலிருந்து தப்பிக்கிறதுக்கு ஒரே வழி என்ன தெரியுமா? இன்னும் கடன் வாங்கிடக்கூடாது. 10,001 ஆகக்கூடாது. 10,000த்திலேயே நிக்க வைக்கணும். அது தான் முதல் ஸ்டெப். இது தெரியாம நிறைய பேர் கடனை அடைக்கிறதுக்கு அங்க வாங்கி, இங்க வாங்கி வட்டியே மூணு இலட்சத்துக்கு குட்டி போட்டு நிற்கும். அந்த மாதிரி நீ உன்னுடைய கர்மாவை அதிகப்படுத்திக்காதே. அதை அந்த இடத்தில நிறுத்திவிடு.

இரண்டாவது என்ன செய்யணும்? எப்படியாவது உழைச்சு 10,001 ரூ சம்பாதிக்கிறதுக்கு வழிபார்க்கலாம். உலகத்து வழக்கில கடனை அடைக்கிறதுக்கு நீ உழைக்கணும் இல்லையா! அந்த மாதிரி நீ பாவம் பண்ணதால உனக்கு ஊழ்வினை வந்திருக்கு. சொத்து சேர்க்கணும் என்றால் என்ன பண்ணணும்? புண்ணியம் பண்ணணும். புண்ணியம் என்பது என்ன, தான தர்மம் பண்றதா? காசு கொடுப்பதா? அப்படிக் கிடையாது. கெட்டதைப் பார்க்காம, கெட்டதைச் சொல்லாம, கெட்டதைச் செய்யாம இருந்தா அதுதான் புண்ணியம். கெட்டது செஞ்சதினால வருத்தம் வந்தது. நல்லது செய்தால் சுகம் வரப்போகுது. அதனால் நல்லது செய்யுங்கள். நல்லதுக்கு definition என்ன தெரியுமா? கெட்டதைச் செய்யாமல் இருப்பது.

வாழ்க்கைப் பாடம்

நம்முடைய மத நம்பிக்கைகளின் படி judgement என்பது கடைசியில் வருகிறது. Christianity, Islam, Jainism and Buddism எல்லாவற்றிலுமே ஊழித்தீர்ப்பு நாள், இறுதிதீர்ப்பு நாள், Qayamath day, Judgement day அப்படின்னு சொல்றாங்க. பரீட்சைங்கிறது ஒரு பையனுக்கு மார்ச் மாசத்தில வரலாம் அல்லது ஏப்ரல் மாசத்தில வரலாம். இல்லையா? நான் மார்ச் மாசத்தில, exam வர அன்னைக்குத்தான் படிப்பேன்னு சொன்னா அவன் முட்டாள். வருஷம் பூரா அவன் ஒழுங்கா படிச்சிடணும். என்றைக்கு பரீட்சை வைச்சா என்ன, அவன் எழுதிப் பாஸாயிடப்போறான். அதே மாதிரி Judgement day-காக வெயிட் பண்ணாம, வாழ்கிற ஒவ்வொரு நாளுமே இந்த வாழ்க்கை என்கிற சிலபஸை ஒழுங்கா படிச்சு, எப்பவுமே examination-க்கு ரெடியா இருக்கணும்.
சாமி நாளைக்கு எதிரில கூப்பிட்டு "என்ன மிஸ்டர்?" அப்படின்னு கேட்டா தைரியமா "என்ன?" ன்னு கேட்கணும். நீ எந்தத் தப்புமே பண்ணலைன்னு வைச்சுக்கோ, கடவுள் உன்னைக் கூப்பிட்டு என்னன்னு கேட்டா, நீயும் என்னன்னு கேட்கப்போறே. அந்த மாதிரியான ஒரு வாழ்க்கைத் தத்துவத்தில் நீ வாழ வேண்டும்.

About The Author

2 Comments

  1. Geeta

    How to learn to accept the mistakes not done in life, how to learn to be prepared to do anything in life?

Comments are closed.