பாபா பதில்கள்-எதற்கு சாமி ஆனார்கள்?

விவேகானந்தர் போன்ற அறிவாளிகள் அந்த அறிவை வைத்துக் கொண்டு நிறைய காசு பணம் எல்லாம் பண்ணி இருக்கலாமே? எதற்கு சாமி ஆனார்கள்?
 
இந்த கேள்விக்கான பதில் எனக்குக் கூட தெரியவில்லை. இல்லை என்றால், நான் கூட சாமி ஆகி இருக்க மாட்டேன். ஏன் என்றால் நானும் பெரிய அறிவாளி. நானும் ரொம்ப கெட்டிக்காரன், ரொம்ப உழைப்பாளி. நானும் ஒரு பில்கேட்சை கூட சாப்பிட்டு இருப்பேன். ஆனால் ஏன் சாமி ஆகி விட்டேன் என்று தெரியவில்லை. ஒரு வேளை சாமி ஆவது தான் பில்கேட்சை விட பெரிய post என்று நினைக்கிறேன். இல்லையா? ஒரு டாக்டர் இருப்பார். அவருடைய பிள்ளையோ பெண்ணோ எப்படியோ படித்து டாக்டர் ஆகி, தான் வைத்து இருக்கும் ஆஸ்பத்திரியை நன்றாக வைத்து இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள். ஒரு ஆடிட்டர் இருந்தார் என்றால், அவருடைய பசங்கள் ஆடிட்டர் ஆகி விட்டு, அவருடைய practiseஐ எல்லாம் take over பண்ண வேண்டும் என்று நினைப்பார்கள். ஒரு வக்கீல் இருந்தால், அவருடைய பசங்கள் வக்கீல் ஆகி அவருடைய practiseஐ எல்லாம் take over பண்ண வேண்டும் என்று நினைப்பார்கள். அது தானே உலகம்? அப்போது கடவுள் இருக்கிறார் இல்லையா? அவருக்கு நாம் எல்லோரும் குழந்தைகள். கடவுளுடைய பிள்ளைகளாகிய நாம் கடவுள் ஆக வேண்டும் என்று சாமி ஆசைப்படுகிறார். எப்படி வக்கீல் தன் பிள்ளை வக்கீல் ஆக வேண்டும் என்று ஆசைப் படுகிறாரோ, எப்படி டாக்டர் தன் பிள்ளை டாக்டர் ஆக வேண்டும் என்று ஆசைப் படுகிறாரோ, அந்த மாதிரி நடவுள் அவருடைய பிள்ளைகளாகிய நாம் எல்லோரும் கடவுள் ஆக வேண்டும் என்று ஆசைப் படுகிறார். எனக்குத் தெரிந்து கடவுள் post தான் ரொம்ப பெரிய post. அதனாலே விவேகானந்தர் அதற்கு ஆசைப்பட்டு இருக்கிறார். நானும் கடவுள் post க்கு ஆசைப்பட்டு இருக்கிறேன்.

About The Author