பிசினசில் இருப்பவர்களுக்கு Sealed Tender -ஐ பற்றி தெரியும். Sealed Tender என்றால் என்ன? சிவப்பு கலரிலே அரக்கு இருக்கும். அதை மெழுகுவர்த்தியிலோ அல்லது ஏதாவது ஒரு வெளிச்சத்திலே காட்டிக் குழைய வைத்து முதலிலே அதை கவர் மேலே குத்தணும். அதற்கு மேலே உன் கம்பெனி ஸ்டாம்ப் குத்த வேண்டும். அப்போது தான் அது sealed. அப்போது உன் கம்பெனியின் seal- ஐ பதிக்க வேண்டும் என்று சொன்னால் அரக்கை இளக வைக்க வேண்டி இருக்கிறது.
அப்படி நீ உன் மனதை இளக வைக்கிறபோது அதற்கு மேலே ஒரு முத்திரை வரும். அந்த முத்திரையை நீ தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். நீ தேர்ந்தெடுத்துக் கொள்ளுகிற seal சங்கு சக்கரமாக இருக்கலாம் அல்லது பாசம் அங்குசமாக இருக்கலாம்; மான் மழுவாக இருக்கலாம். அல்லது சிலுவையாக இருக்கலாம்; பிறையாக இருக்கலாம். நீ என்ன வேணும்னா seal அடித்துக் கொள்ளலாம். ஆனால் இளக வேண்டியது உன்னுடைய மனது. அதற்கான பிரயத்தனம் தான் இந்த சம்ரட்சணாவும், இங்கே நடந்து கொண்டிருக்கிற வழிபாடுகளும்.
தேடி அலைந்த நிலையில்
இறைவன் எதிரிலியே நிற்க ஆரம்பித்துவிடுவான். அதற்குப் பிறகு அவன் வேறு இல்லை. நாம் வேறு இல்லை. எந்நேரமும் எங்கு இருந்தாலும் நம் கூடவே இருந்து கொண்டிருப்பான். நம்முடைய யத்தனத்திலேயும் பிரயத்தனத்திலேயும் சாதிக்க நினைக்கிற எல்லா விஷயங்களுமே நாம் ஒன்றுமே செய்யாமல் சும்மா ஒரு துரும்பு கூட இங்கிருந்து அங்கு எடுத்துப் போடாமல் தானாக நடக்கக் காண்பீர்கள். அதற்கு முன்னால் தான் உங்களுடைய பிரயத்தனங்கள், முயற்சிகள் அதில் வருகிற சலிப்புகள், அதில் வருகிற அலுப்புகள், இது நடக்கிறது, இது நடக்கலை, ஏன் நடக்கலை என்கிற குளறுபடிகள், கேள்விகள் எல்லாம். And when you totally understand that God is with you all the time, தெய்வம் மடிதற்று தான் முந்துறும். வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டு கடவுள் ‘ஏதாவது உனக்கு வேண்டுமாப்பா’ என்கிற நிலையை நீ அடைந்து விட வேண்டும். அதில் பெரியவர்கள் அல்ல சிறியவர்கள் அல்ல. தந்தது எந்தன்னை கொண்டது உந்தன்னை சங்கரா யார் கொலோ சதுரர். ‘நான் என்னைக் கொடுத்து விட்டு உன்னைப் பெற்று விட்டேன். நம் இரண்டு பேரில் நான் தான் கெட்டிக்காரன்’ என்று சொல்லக் கூடிய அந்த பரமானந்த நிலை வருகிறது. அது வந்துவிட்டால் ஜாலியாக இருக்கலாம். அந்த நிலையைத்தான் சிவசங்கர்பாபா அனுபவித்துக் கொண்டிருக்கிறார்.
நம்பிக்கை இருந்தால் உனக்கு ரிசல்ட் கிடைத்துவிடும். அரைகுறை நம்பிக்கை ஆன்மீகத்திற்கு உதவுவதில்லை. ரிசல்ட் கிடைக்காவிட்டால் பாபா மேலேயும் தவறு இல்லை. பகவான் மேலேயும் தவறு இல்லை. உன்னுடைய நம்பிக்கையிலே எங்கேயோ ஒரு குறை இருக்கிறது. உள்ள நிறைவில் ஒரு கள்ளம் புகுந்திடில் உள்ள நிறைவோமோ?
“